தீபாவளி அன்று பல எதிர்பார்ப்புகள் மற்றும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில் வெளியான திரைப்படம் பிகில் (bigil). இயக்குனர் விஜய் அட்லீ கூட்டணியில் அமைந்த இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். விஜயை ஸ்கீரினில் பார்த்தால் போதும் என இதயம் நெகிழும் ரசிகர் கூட்டத்திற்கான விருந்துதான் பிகில்.
தன்னுடைய சேரி மக்கள் நல்ல பாதையில் நடக்க விரும்பும் வழக்கமான நல்ல தாதா ராயப்பன் அதற்கு கால் பந்து நல்ல ஊக்கம் தரும் என்று நம்புகிறார். மகன் மைக்கேலையும் அந்த பாதையில் பயணிக்க செய்கிறார்.
ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கேலால் அந்தப் பயணத்தை தொடர முடியவில்லை, தன்னுடைய நண்பன் கதிரின் மூலம் தன்னுடைய கனவினை நிறைவேற்ற விரும்பும் மைக்கேல் கதிருக்கு துணையாய் நிற்கிறார். அதன் தொடர்ச்சியாக மைக்கேலுக்கு வைத்த வன்முறை தவறாக கதிர் மேல் பாய்கிறது. அதன் பின்னர் கதிர் நடத்தும் பெண்கள் கால் பந்து குழுவை மைக்கேல் கையில் எடுக்கிறார்.
Youtube
மைக்கேலின் செயல்கள் பெண்கள் குழுவிற்கு லாஸ்லியா ஸ்டைலில் பிடிக்காமல் பின்னர் பிடித்து போகிறது. அதன் பின்னர் அவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் வென்றார்களா என்பது கதை.
கமர்ஷியல் இயக்குனர் அட்லீக்கு இது இன்னொரு வெற்றி படம் . விஜய் ரசிகர்களுக்கு மற்றுமொரு தீபாவளி பரிசு என்பதில் மாற்றமில்லை. விஜய்க்கு என்னென்ன அவசியமோ அதெல்லாம் அற்புதமாக மிக்ஸ் செய்து கொடுத்திருக்கிறார்.
அப்பா மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் கைவசம். சில நிமிடங்கள் காட்டப்படும் ராயப்பன் தான் அனைவரையும் கவர்ந்தாக வேண்டும் என்பது சினிமா விதி. அதன்படியே இங்கும் அமைந்தது பெரிய ஆச்சர்யங்களில்லை.
Youtube
பெண்களை அடக்கி அடக்கி வைக்கும் முன்னணி நாயகர்கள் திரைப்படங்கள் எல்லாம் இப்போது வேறு பக்கம் திரும்பி பெண்களை முன்னேற்றும் நாயகர்களாக தங்களை மாற்றிக் கொண்ட திரைப்படங்கள் வருகின்ற காலம் இது. ஆரோக்கியமான ஒரு தலைமுறை நடுவே நாமும் இருக்கிறோம் என்பதே மனதிற்கு இதமாக இருக்கிறது. இதனை ஒரு பெண்ணாகிய அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருப்பது கூடுதல் சிறப்பு
அஜித்தின் நேர் கொண்ட பார்வை விஜய்யின் பிகில் இரண்டுமே இதில் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறது. இதற்காக தங்களுக்கான கதாபாத்திரங்களை வடிவமைத்து கொள்ளும் நாயகர்கள் அனைவருக்கும் பெண்கள் சார்பாக ஒரு சல்யூட்.
திரைப்படத்தில் நயன்தாராவின் பங்கு மிகவும் கம்மி. நல்ல தைரிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு நாயகன் விஜய்யிடம் சிணுங்கும் காட்சிகள் நம்மால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஜாக்கி ஷெராப் ஏன் வந்தார் என்பதே புரியவில்லை. விவேக் யோகிபாபு தேவதர்ஷினி ஆகியோர் நினைவில் நிற்கும்படி அழுத்தம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். கதிர் மட்டுமே சரியாக செய்து தன்னுடைய வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
Youtube
ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையில் பிரம்மிக்க வைத்திருக்கிறார். சில குட்டி பாடல்கள் நெஞ்சுக்கு இதமாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு இந்தப் படத்திற்கு இன்னொரு தூண் என்றால் மிகையில்லை. சண்டைக் காட்சிகள் கால்பந்து விளையாட்டு காட்சிகளில் ஆச்சர்யப்படுத்துகிறார்.
அட்லீ என்றாலே பல ஜெராக்ஸ் காட்சிகளை தவிர்க்க முடியாது. இதிலும் அப்படிதான். அதனால் என்ன சில விஷயங்களை அழகியல் மாறாமல் தனது ஸ்டைலில் மாற்றி கவிதைகள் கதைகள் எழுதும் ஆட்கள் போலத்தான் இதுவும் என்று விஜய் ரசிகர்கள் திருப்திபட்டுக் கொள்ள வேண்டும். அட்லீக்கு அதனை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இருக்கிறது. அதுவரைக்கும் நிம்மதி. ஒரு சில எழுத்தாளர்கள் போல ரகசியமாக திருடி யாருக்கும் தெரியாத ஓடாத பலமொழி கதைகளை ஆங்காங்கே எடுத்து ஒட்டி தன்னை நாவலாசிரியராக இயக்குனராக வெளியில் பிரகடனப்படுத்தி கொள்கிற ஆள் அட்லீ இல்லை என்பது கொஞ்சம் ஆசுவாசமாக ஒன்றாக இருக்கிறது.
பெண்கள் முன்னேற்றம் என்றால் அதற்கான விஷயங்கள் மட்டும் இல்லாமல் விஜய் என்பதால் அதற்கான கமர்ஷியல் விஷயங்களும் இருப்பது இங்கே மைனஸ் தான். ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து. இந்தப் படத்தை அஜித் ரசிகர்களும் பாராட்டி வருவது மிகப்பெரிய ப்ளஸ் மற்றும் சினிமா சரித்திரத்தின் ஆரோக்கியமான முன்னேற்றம்.
பிகில் – ரைட் போலாம்! (once watch movie)
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!