காதல் லீலைகளால் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் கவின். கவினுக்கு மன்மதன் என்றே பெயர் வைத்து விடும் அளவிற்கு அவரது காதல் லீலைகளைக் காணச் சகிக்கவில்லை.
இவருடன் சேர்ந்து கொண்டு சேரன் அப்பாவையே சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் மகளாக லாஸ்லியா (losliya)தனி ஆவர்த்தனம் ஒன்றை அபஸ்வரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
சாக்ஷி பற்றி கூசாமல் பொய்களை அடுக்கி வரும் கவினுக்கு மிகப்பெரிய பொறியொன்றை செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆம் சாக்ஷியையே உள்ளே அனுப்பி இருக்கின்றனர்.
இனி கவின் நிலைமை கவலைக்கிடமே என்று ஒரு சாரார் குதூகலித்துக் கொண்டிருந்தாலும் கழுவும் மீனில் நழுவும் மீனாக கவின் இந்த ஒரு வாரத்தைக் கடந்து விடுவார் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான்.
இந்த பரபரப்பான நேரத்தில்தான் இலங்கைத் தமிழரான லாஸ்லியா பற்றி ஒரு பதிவு வைரலாக இணையதளங்களில் பரவி வருகிறது.
ஆரம்பத்தில் அமைதியாக லாஸ்லியா இருந்த போதே அவரது பள்ளி சக மாணவர் ஒருவர் இவரை பற்றி போகப்போக புரிந்து கொள்வீர்கள் என்று மர்மமாக ட்வீட் தட்டி விட்டு மறைந்து போனார். அதன் உண்மைத்தன்மை தற்போது நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
அதைப்போலவே தற்போது முகநூலில் ஆதவன் குமாரசாமி என்பவர் லாஸ்லியாவை நோக்கி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை எழுப்பி இருக்கிறார். அவரது பதிவைப் பார்த்து அவரும் இலங்கையை சேர்ந்த தமிழர் அதுவும் லாஸ்லியா பணிபுரிகின்ற செய்தி சேனலுக்கு நெருக்கமானவர் என்பது புரிகிறது.
அந்த முகநூல் பதிவில் அவர் லாஸ்லியா இப்படி செய்தார் என்று எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. அதற்குப்பதிலாக லாஸ்லியாவிடம் சில கேள்விகள் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விகளின் பின்னணியிலேயே லாஸ்லியாவின் இலங்கை மர்மங்கள் வெளியாகத் தொடங்குகின்றன.
அவரது கேள்விகள் பின்வருமாறு
லாஸ்லியா பற்றி என்னிடம் சில கேள்விகள் உள்ளன
1. நீங்க யாரையும் லவ் பண்ணதே இல்லையா?
2. நீங்க லவ் பண்ணினதில்லை என்றால் தர்ஷன் யார் ? (பிக் பாஸ் தர்ஷன் அல்ல)
3. நீங்க லவ் பண்ணினதில்லை என்றால் ஏன் உங்களை ஆங்கர் (anchor) வேலையில் இருந்து செய்தி வாசிப்பாளராக ட்ரான்ஸ்பர் பண்ணினார்கள்?
லவ் பண்றது தப்பில்லை ஆனால் எல்லாத்தையும் பண்ணிட்டு பண்ணாத மாதிரி இருக்கறதுதான் தப்பு.
என்று அந்த முக நூல் பதிவு கூறுகிறது. இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் இந்தப் பதிவிற்கு லாஸ்லியா லீலைகள் என்று பெயர் வைத்திருக்கின்றனர் இணையதள வாசிகள்.
அவர் கேட்ட கேள்விகளின் பின்னணியில் லாஸ்லியா இலங்கையில் ஏற்கனவே தர்ஷன் என்கிற சகபணியாளர் ஒருவரை காதலித்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை விரைவில் ஊர்ஜிதமாகலாம்.
இலங்கையில் இருந்து தன்னைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் புகழ் வெளிச்சம் நம் மீது பட வேண்டும் கூடவே பிரபலமாக வாய்ப்புகள் வர வேண்டும் என்று கடல் கடந்து தமிழகம் வந்த லாஸ்லியா இப்படி பிரபலம் ஆகியிருக்க வேண்டாமோ என்றுதான் மனம் பதைக்கிறது. ஆனால் லாஸ்லியா இதனை எப்போது புரிந்து கொள்ளப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
(இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் அவரது மற்றொரு பாய்ஃப்ரெண்ட் ஆன ஃபசுல்லா முபாரக்)
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.