logo
Logo
User
home / திருமணம்
கிளிக்! கிளிக்!உங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபர்ஸ்

கிளிக்! கிளிக்!உங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபர்ஸ்

உங்கள் திருமண  நாள் நெருங்கிவிட்டதா? உங்கள் முக்கியமான நாளில் அழகாக தோன்ற  அந்த அசத்தலான பட்டு புடவை , ஜொலிக்கும் நகைகள் மற்றும் சிறந்த ஒப்பனை ஆகியவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பீர்கள். மிக்க  மகிழ்ச்சி ! இவை அனைத்தும் முக்கியமானதாக இருக்கலாம், ஆனால் அந்த இனிமையான நிகழ்வுகளையும் சந்தோஷமான தருணங்களையும் பிற்காலத்தில் பார்த்து ரசிக்க ஒரு அனுபவமுள்ள போட்டோகிராபர் தேவை. 

உங்கள் திருமண நாளில் , ஏராளமான ஆக்கபூர்வமான யோசனைகளை  வழங்கும் அந்த ஒரு போட்டோகிராபர்ரை நீங்கள் இன்னும் தேடிக்கொண்டிருந்தால் உங்கள் தேடல் இங்கே நிறைவடைகிறது. இன்ஸ்டாகிராமில் எங்களுக்கு பிடித்த சில சுவாரசியமான புகைப்பட வல்லுநர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.  

உங்கள் திருமணத்திற்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபி வல்லுநர்கள்

திருமண புகைப்படக்காரர்களில் யாராவது உங்களுக்கு ஏற்ற இருக்கிறார்களா என்று கீழேயுள்ள பட்டியலைச் சரிபார்க்கவும். 

1. ஐ கிலோ ஸ்டுடியோஸ்( iGlow Studioz)

உங்கள் திருமண புகைப்படம் (wedding photography) எடுப்பதற்கான தனித்துவமான யோசனைகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த ஸ்டுடியோவில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் உள்ளன. சென்னையில் அமைந்துள்ள இவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 14, 000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். மேலும் இவர்களின்  சுயவிவரம் சில சிறந்த புகைப்பட படப்பிடிப்பு யோசனைகளுடன் மிகவும் சுவாரஸ்யமாக தெரிகிறது! அதை நீங்களே சரிபாருங்கள். 

இவர்களை தொடர்புகொள்ள :  98400 91089 & 99626 09205

முகவரி : எண்  296, 1 வது மாடி, முடிச்சூர் சாலை, மேற்கு தம்பரம், சென்னை – 600045

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 


2. கிரியேட்டிவ் வெட்டிங் போட்டோகிராஃபி (Creative Wedding Photography)

 

திருமண மற்றும் படைப்பாற்றல்மிக்க  போட்டோஷூட்களில் (போட்டோகிராபி ) இவர்களுக்கு 10 வருட அனுபவம் உள்ளது. திருமண ஃபோட்டோஷூட்களுக்கு வரும்போது   வாடிக்கையாளர்களின் தேவைகளை இவர்களின் திறமைவாய்ந்த குழு கவனித்துக்கொள்கிறது.

உங்கள் திருமண நாளில் அணைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக  வழங்க இவர்கள் ஒவ்வொரு விவரத்தையும் ஒவ்வொரு கோணத்தையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

இவர்களை தொடர்புகொள்ள – 98401 91903

முகவரி – 11 பி, சந்திரபாக் அவென்யூ முதல் தெரு ,   சிட்டி சென்டர் அருகில்,  மைலாப்பூர், சென்னை – 600 004.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 


 

3. ப்ளாக் பெப்பர் வெட்டிங் (Black Pepper Wedding)

இவர்கள்  படங்களின் போர்ட்ஃபோலியோவைப் காண்பிக்க  ஒரு பெரியகேலரியே உள்ளது. இவர்கள் திருமண புகைப்படம் (photo) எடுத்தல் மற்றும் திருமண திரைப்படங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.நீங்கள் சில அழகிய கேண்டிட் ஷாட்டை  கைப்பற்ற விரும்பினால் அல்லது முழு நிகழ்வையும் ஒரு படமாக உருவாக்க விரும்பினால், உடனடியாக இவர்களை அணுகுங்கள் . 

இவர்களை தொடர்புகொள்ள –  075919 29743

முகவரி – அன்சாரி காம்ப்ளக்ஸ், மூன்றாம் மாடி, வெஸ்ட்ஃபோர்ட்
திருச்சூர், 680004

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

4. ஸ்மோக் வெட்டிங்ஸ்(Smoke Weddings)

திருமண புகைப்படத்தில் சடங்குகள் மற்றும் முக்கிய விழா ஆகியவை மட்டும் இல்லாமல் இது சில நேரடி செயல் தருணங்களையும் கொண்டிருக்க வேண்டும்.  திருமணத்திற்கு முன்னும் பின்னும் நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் , ஏற்பாடுகள் போன்றவை அனைத்தும் அழகிய நினைவுகளை உருவாக்கும் . இதை இவர்களின்  திறமையான குழுவினர் எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணலாம். 50,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், இந்த குழு உங்களை நிச்சயம்  கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.

இவர்களை தொடர்புகொள்ள –  075919 29743

முகவரி – கடை எண்: 19,
டிடி ஓசியானோ மால்,
கேட்வே ஹோட்டலுக்கு அருகில்,
மரைன் டிரைவ், கொச்சி – 682031

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

 

5. ஃபோகஸ் ஸ்டுடியோஸ் (Focuz studios)

இதுவரை பார்த்ததில்  எதையும் நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த ஸ்டுடியோவை முயற்சிக்கவும். அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட மற்றொரு அனுபவமிக்க புகைப்படக் கலைஞர்கள் ஆவர் (professional wedding photographer) . கல்யாண ஜோடி படங்கள் , தனி காட்சிகள், திருமண நிகழ்வுகள் , அலங்கார காட்சிகளின் படங்கள்  மற்றும் பலவற்றை இந்த குழு சிரமமின்றி உங்களுக்கு அளிக்க உள்ளார்கள் . 

இவர்களை தொடர்புகொள்ள –  9884004109

முகவரி –  எண் 39, 2 வது மாடி, 2 வது தெரு, திருமலை நகர் கோலத்தூர், அண்ணா நகர், சென்னை – 600099

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

6. கிராக் ஜாக் போட்டோகிராஃபி (Crackjack Photography)

உங்கள் முக்கியமான நாளில் மனதைக் கவரும் திருமண காட்சிகளைப் பெற உதவும் புகைப்படக் கலைஞர்களின் மிகவும் திறமையான மற்றொரு குழு இவர்கள் . இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான சுயவிவரத்துடன் மற்றும் 39, 000 பின்தொடர்பவர்களுடன், இந்த வல்லுநர்கள் உங்களை மறக்க முடியாத இனிமையான நினைவுகளால் நிரப்புவது உறுதி.

இவர்களை தொடர்புகொள்ள – 8678944455

முகவரி – பிரகசம் சலை, வலசர்வக்கம்
சென்னை -600087

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

7. க்ராபிகா போட்டோகிராஃபி (Graphika Photography)

இன்னும் உறுதியாக யாரை புக் செய்வது என்று தெரியவில்லையா ? இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை சரிபார்க்கவும். சுமார் 10,000 பின்தொடர்பவர்களுடன், உங்கள் வெட்டிங் நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கையுடன் கேமெராவில்  பதிவு செய்ய உங்களுக்கு தேவைப்படும் குழு இதுதான்.


இவர்களை தொடர்புகொள்ள – 093847 99770

முகவரி – எண் 23, 2 வது செயின்ட், சிவானந்தா காலனி, டாடாபாத், கோவை 641012, தமிழ்நாடு.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

 

மேலும் படிக்க – சிவப்பை மறந்துவிடுங்க ! இந்த மாறுபட்ட திருமண புடவை நிறங்களில் உங்கள் தனித்துவத்தை காண்பியுங்கள் !!

பட ஆதாரம் – Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

28 Jul 2019

Read More

read more articles like this

Read More

read more articles like this
good points logo

good points text