தமிழ் சினிமாவில் எண்ணற்ற திரைப்பட பாடல்கள் (songs) நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், சந்தோஷ் நாராயணனன் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் சிறந்த பாடல்களை ரசிங்கர்களுக்கு கொடுத்து வருகின்றனர். அந்த காலம் தொடங்கி தற்போதை நவீன காலம் வரை இசைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இன்னும் காலங்கள் எவ்வளவு நவீனமானாலும் அதற்கேற்ப பாடலை (songs) தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பழைய தமிழ் பாடல்கள் (Old Tamil Songs)
எத்தனை புதிய பாடல்கள் (songs) நாள்தோறும் திரைக்கு வந்தாலும் அன்றை கால பாடல்கள் போன்ற கருத்துள்ள பாடல்களை தற்போது காண்பது அரிது. இசைஞானி இளையராஜா இசையும், வாலி போன்ற படலாசிரியர்களின் வரிகளும் மக்களை மகிழ்விக்கும் வகையிலே உள்ளது. இவர்களது பாடலுக்கு (songs) இன்றைய தலைமுறை ரசிகர்களும் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
வாராயோ வெண்ணிலாவே (Vaarayo Vennilave)
வாராயோ வெண்ணிலாவே பாடல் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் இடப்பெற்றுள்ளது. மிஸ்ஸியம்மா 1955ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இந்த படத்தில் எஸ் ராஜேஸ்வர ராவ் இசையில் வெளியான வாராயோ வெண்ணிலாவே பாடல் ரசிங்கர்களை வெகுவாக கவர்ந்தது. கவிதைபோல் ஒரு சில பாடல்கள்தான் திரையிசையில் அமையும். அந்த வரிசையில் இந்தப் பாடல் பொருந்தும்.
நடிகர், நடிகை : ஜெமினி கணேசன், சாவித்ரி
படம் : மிஸ்ஸியம்மா
இசை : எஸ் ராஜேஸ்வர ராவ்
பாடகர்கள் : ஏ.எம். ராஜா, லீலா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
எத்தனை காலம் தான் (Ethanai Kaalam Than)
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மலைக்கள்ளன் 1954ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் இருக்கும்.
நடிகர், நடிகை : எம். ஜி. ஆர், பானுமதி
படம் : மலைக்கள்ளன்
இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடகர் : டி.எம்.சவுந்தரராஜன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க – கதைக்கு தேவைப்பட்டால் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பேன் : விமர்சனங்களுக்கு ரகுல் பதிலடி!
ஓ ரசிக்கும் சீமான் வா (Oh Rasikkum Seemane)
பராசத்தி படத்தில் வெளியான இந்த பாடல் அன்றைய மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது. காமாட்சி சுந்தரம் இயற்றிய பாடல் வரிகளில் இனிமையான பாடலாக உள்ளது. இந்த பாடலில் சிவாஜி கணேஷன், சிரஞ்சனி நடித்துள்ளனர்.
நடிகர், நடிகை : சிவாஜி கணேசன், ஸ்ரீ ரஞ்சனி
படம் : பராசக்தி
இசை : ஆர்.சுதர்சனம்
பாடகர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
பச்சைக்கிளி முத்துச்சரம் (Pachai Kili Muthucharam)
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. விஷ்வநாதன் இசையில் வெளியான இந்த பாடல் எவர் க்ரீன் பாடலாக உள்ளது. சௌந்தர் ராஜன், பி. சுசிலா குரலில் சிறந்த பழைய பாடலாக இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : எம்ஜிஅர், மஞ்சுளா
படம் : உலகம் சுற்றும் வாலிபன்
இசை : எம்எஸ் விஸ்வநாதன்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர் ராஜன், பி. சுசிலா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
பூங்காற்று திரும்புமா (Poongatru Thirumbuma Muthal Mariyathai)
வைரமுத்துவின் அழகான பாடல் வரிகளில் இந்த பாடல் உள்ளது. “பூங்காற்று திரும்புமா… என் பாட்டை விரும்பும்” என இனிமையான இசையில் தொடங்கும் இந்த படத்தில் சிவாஜி மற்றும் ராதா நடித்துள்ளனர்.
நடிகர், நடிகை : சிவாஜி, ராதா
படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
பாடகர்ள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஆண்டவன் படைச்சான் (Aandavan Padachaan)
பி. எஸ். ரங்கா இயக்கிய நிச்சய தாம்பூலம் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. கண்ணதாசன் வரிகளால் ” ஆண்டவன் படிச்சான் என்கிட்ட கொடுத்தான்” என தொடங்கும் இந்த பாடல் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.
நடிகர், நடிகை : சிவாஜி கணேசன், ஜமுனா
படம் : நிச்சய தாம்பூலம்
இசை : டிஎம் சௌந்தர் ராஜன்
பாடகர்கள் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
அடி ராக்கம்மா கைய தட்டு (Rakkamma Kaiya Thattu)
தளபதி படத்தில் இளையராஜா இசையில் அமைத்துள்ள அனைத்து பாடல்களும் ரசிக்கும் வகையிலே உள்ளது. அதில் அடி ராக்கம்மா கைய தட்டு பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியன், ஸ்வர்ணலதா காம்போ இசையில் மனதை நெருடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : ரஜினிகாந்த், சோபனா
படம் : தளபதி
இசை : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியன், ஸ்வர்ணலதா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மலர்களை போல் தங்கை (Malargalai Pol Thangai)
புகழ்பெற்ற பாசமலர் திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. டி. எம். சௌந்தர ராஜன் இசையில் வெளியான இந்த பாடல் அண்ணன்-தங்கை பேச உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்று வரை இந்த பாடல் அழியாத புகழ் பெற்றுள்ளது.
நடிகர், நடிகை : சிவாஜி கணேசன், ராஜம், சாவித்ரி
படம் : பாசமலர்
இசை : விசுவநாதன்-ராமமூர்த்தி
பாடகர் : டி. எம். சௌந்தர ராஜன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் (Ninaipathellam Nadanthu Vittaal)
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலையம் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. கண்ணதாசன்வரிகளில் ” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம்” என தொடங்கும் பாடல் வாழக்கையில் நினைக்கும் அனைத்தும் கிடைத்து விடாது என்ற கருத்துத்தை முன்னிருத்தி சிறந்த மோட்டிவேஷனல் பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : கல்யாண் குமார், தேவிகா
படம் : நெஞ்சில் ஓர் ஆலையம்
இசை : விசுவநாதன்-ராமமூர்த்தி
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மல்லிகை என் மன்னன் (Malligai En Mannan)
தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ” என காதல் வரிகளை கொண்டுள்ளது. வாலியின் வரிகளில் சிறந்த இனிமையான பாடலாக இந்த பாடல் உள்ளது. எம். எஸ். விஸ்வநாதன் இசையில் வெளியான இந்த பாடல் ரசிங்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர், நடிகை : முத்தமாரன், விஜயா
படம் : தீர்க்க சுமங்கலி
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : வாணி ஜெயராம்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
சிறந்த இனிமையான தமிழ் பாடல்கள் (Tamil Melody Songs)
தமிழ் சினிமாவில் எண்ணற்ற இனிமையான பாடல்கள் உள்ளன. சில பாடல்களை கேட்கும் போதே நம் மணம் அறியாமல் நம் கரைவதும் உண்டு. சினிமா பாடல்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அத்தைகைய சிறந்த பாடல்கள் குறித்த விவரங்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பாதி கதவு (Oru Paadhi Kadhavu)
தாண்டவம் படத்தில் இடம்பெற்றுள்ள “ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி” பாடல் சிறந்த இனிமையான பாடலாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையிலான உறவை வெளிப்படும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கும். G. V. பிரகாஷ் குமார் இசையில் அமைந்துள்ள அற்புதமான பாடல்களில் இதுவும் ஓன்று.
நடிகர், நடிகை : விக்ரம், அனுஷ்கா
படம் : தாண்டவம்
இசை : G. V. பிரகாஷ் குமார்
பாடகர்கள் : ஹரிசரண் , வந்தனா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
அன்பே என் அன்பே உன் (Anbe En Anbe)
தாம் தூம் படத்தில் உள்ள “அன்பே என் அன்பே உன் விழி பார்த்து” பாடல் சிறந்த காதல் பாடலும் ஆகும். இந்த பாடலில் ஜெயம் ரவி, கங்கனா ரனாத் உண்மையான காதலர்கள் போலவே நடித்துள்ளனர். நா. முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகை : ஜெயம் ரவி, கங்கனா ரனாத்
படம் : தாம் தூம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
புத்தம் புது காலை (Putham Pudhu Kaalai)
மேகா திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களுமே இனிமையாக அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற “புத்தம் புது காலை” என்ற பாடலாகும். ” புத்தம் புது காலை.. பொன்னிற வேளை.. என் வாழ்விலே.. என்று தொடங்கும் மெலோடி பாடல் மனதை வருடும்.
நடிகர், நடிகை :
படம் : மேகா
இசை : இளையராஜா
பாடகர் : அனிதா கார்த்திகேயன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
வெளிச்ச பூவே (Ethir Neechal)
எதிர் நீச்சல் படத்தில் வெளியான வெளிச்சப் பூவே பாடல் சிறந்த காம்போ பாடலாக உள்ளது. அனிருத் இசையில் மோஹித் சவுகான், ஸ்ரேயா கோஷல் குரலில் சிறந்த மென்மையான பாடலாக இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : சிவா கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த்
படம் : எதிர் நீச்சல்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடகர்கள் : மோஹித் சவுகான், ஸ்ரேயா கோஷல்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க – அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
நதியே நதியே (Nathiye Nathiye Kaadhal Nathiye)
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ரிதம் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே எனபெண்களின் சிறப்பை போற்றும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. பாடலின் வரிகள் முழுவதும் நீரையும், பெண்ணையும் ஒப்பிட்டு பெருமைபடுத்தியிருப்பார்கள்.
நடிகர், நடிகை : அர்ஜுன், ஜோதிகா
படம் : ரிதம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர் : உன்னி மேனன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
யமுனை யாற்றிலே (Yamunai Arthile)
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள தளபதி படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. காதலனை பிரிந்த காதலி அவரை நினைத்து மனம் உருகி பாடும் வகையில் இந்த பாடலின் வரிகள் இருக்கும். “ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ.. ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ” என இந்த பாடலை கேட்கும் போதே அனைவரது மனமும் அவர்களது காதலரை நினைவுகூரும் வகையில் வாலியின் பாடல் வரிகள் அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : ரஜினிகாந்த், ஷோபனா
படம் : தளபதி
இசை : இளையராஜா
பாடகர் : மிதாலி பானர்ஜி பாவ்மிக்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
என்ன விலை அழகே (Enna Vilai Azhage)
இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம் படத்தில் இந்த ரொமான்டிக் பாடல் இடம் பெற்றுள்ளது. ” என்ன விலையழகே… சொன்ன விலைக்கு வாங்க வருவேன் … விலை உயிர் என்றாலும் தருவேன்” என்ற அற்புதமான வாலியின் வரிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாடல் தற்போதும் இளைஞர்களின் விருப்பப்பாடலாக இருந்து வருகிறது.
நடிகர், நடிகை : குணால் சிங், சோனாலி, நாசர்
படம் : காதலர் தினம்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர் : உன்னி மேனன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
பூக்கள் பூக்கும் தருணம் (Madharazapattinam)
இயக்குனர் ஏ.எல். விஜய் தயாரிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தில் ” பூக்கள் பூக்கும் தருணம்” பாடல் இடம் பெற்றுள்ளது. நா. முத்துக்குமார் வரிகளில் சிறந்த இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பாடலுக்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து அவரே பாடியும் உள்ளார்.
நடிகர், நடிகை : ஆர்யா, எமி ஜாக்சன்
படம் : மதராசப்பட்டினம்
இசை : ஜி. வி. பிரகாஷ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ், ஆந்தரே, ஹரிணி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
வெட்டி வேறு வாசம் (Vetti Veru Vasam)
முதல் மரியாதையை படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இளையராஜா இசையில், வைரமுத்து வரிகளை பாடகர்கள் எஸ். ஜானகி மற்றும் மலைசியா வாசுதேவன் பாடியுள்ளனர். ஒரு இசை பாடலாமே இந்த பாடலில் பணியாற்றுள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர், நடிகை : சிவாஜி கணேசன், ராதா
படம் : முதல் மரியாதை
இசை : இளையராஜா
பாடகர்கள் : எஸ். ஜானகி, மலைசியா வாசுதேவன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை (Poongatrile Un Swasathai)
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. வைரமுத்து வரிகளை அழகாக எடுத்து காட்டும் வகையில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிறந்த இனிமையான பாடலான இந்த பாடல் பிரிந்த காதலர்கலர்களை கூட ஒன்று சேர்த்து விடும் என கூறலாம்.
நடிகர், நடிகை : ஷாருக்கான், மனிஷா கொய்ராலா
படம் : உயிரே
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஸ்வர்ண லதா, உன்னி மேனன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
ரொமான்டிக் தமிழ் பாடல்கள் (Romantic Tamil Songs)
தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரொமான்டிக் பாடல்கள் உள்ளன. சில நடிகர், நடிகைகள் உண்மையான காதலர்கள் போல் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருப்பார்கள். தொடர்ந்து ரொமான்டிக் பாடல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் தான் உள்ளது. சில சிறந்த ரொமான்டிக் பாடல்கள் குறித்த தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
சோனியா சோனியா (Soniya Soniya)
புவன சந்திரா இயக்கத்தில் வெளியான ரட்சகன் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. பிரவீன் காந்தி வரிகளில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இரண்டை அர்த்தங்கள் நிறைந்த பாடலாக இந்த பாடல் உள்ளது. இதனால் இந்த பாடலில் ரோமாட்டிக்கிற்கு குறைவில்லை.
நடிகர், நடிகை : நாகர்ஜுனா, சுஷ்மிதா சென்
படம் : ரட்சகன்
இசை : ஏ . ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரிணி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நீ பார்த்த விழிகள் (Nee Paartha Vizhigal)
ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் வெளியான மூணு படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. படத்தில் மட்டுமின்றி இந்த பாடலிலும் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். தனுஷின் வரிகளின் “நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்….. கேட்டாலும் வருமா, கேட்காத வரமா” என தொடங்கும் இந்த பாடல் சிறந்த ரொமான்டிக் பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : தனுஷ், ஸ்ருதி ஹாசன்
படம் : மூணு
இசை : அனிருத்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், ஸ்வேதா மோகன், விஜய் யேசுதாஸ்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
காற்றே என் வாசல் வந்தாய் (
வசந்த் இயக்கத்தில் வெளியான ரிதம் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. வைரமுத்து வரிகளில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில் காற்றே என் வாசல் வந்தாய் என இனிமையாக தொடங்கும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர், நடிகை : அர்ஜுன், ஜோதிகா
படம் : ரிதம்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன், கவிதா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
புது வெள்ளை மழை (Putthu Vellai Mazhai)
மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான காதல் படம் ரோஜாவில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது… இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது… இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது” என்ற வைரமுத்துவின் வரிகள் மனதை வருடுகிறது.
நடிகர், நடிகை : அரவிந்த் சாமி, மதூ
படம் : ரோஜா
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : சுஜாதா மோகன், உன்னி மேனன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஸ்நேகிதனே ஸ்நேகிதனே (Snegithane)
அலைபாயுதே படத்தில் உள்ள சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும். ” ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே..சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு ஸ்நேகிதனே..” என்ற வைமுத்து வரிகளில் மாதவன் மற்றும் ஷாலினி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர், நடிகை : மாதவன், ஷாலினி
படம் : அலைபாயுதே
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : சாதனா சர்க்கம், ஸ்ரீநிவாஸ்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
அன்பே அன்பே கொள்ளாதே (Anbe Anbe Kollathe)
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. பெண்ணின் அழகை வர்ணிக்கும் வகையில் வைரமுத்து வரிகள் அமைந்துள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் திரும்ப கேட்க தூண்டும் பாடலாக இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : பிரசாந்த், ஐஸ்வர்யா ராய்
படம் : ஜீன்ஸ்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஹரிஹரன், அனுராதா சர்மா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
பிறை தேடும் இரவிலே (Pirai Thedum)
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து அவரே, அவரது மனைவி சைந்தவியுடன் இந்த பாடலை பாடியுள்ளார். பிறை தேடும் இரவிலே என தொடங்கும் இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார்.
நடிகர், நடிகை : தனுஷ், ரிச்சா
படம் : மயக்கம் என்ன
இசை : ஜி. வி. பிரகாஷ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ், சைந்தவி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
இன்னும் கொஞ்ச நேரம் (Innum Konjam Naeram)
மரியான் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. கபிலலின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் சிறந்த இனிமையான பாடலாக உள்ளது. ” இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன ” என தொடங்கும் இந்த பாடல் காதலர்களுக்கு இடையிலான அன்பை வெளிப்படுத்தும் பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : தனுஷ், பார்வதி
படம் : மரியான்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஸ்வேதா மோகன், விஜய் பிரகாஷ்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஒன்றா ரெண்டா ஆசைகள் (Kaakha Kaakha)
கவுதம் மேனன் தரப்பில் வெளியான காக்க காக்க திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுத்தில் அமைந்த இந்த பாடல் சிறந்த ரொமான்டிக் பாடலாக உள்ளது. இந்த பாடலில் சூர்யா, மற்றும் ஜோதிகா இடையே காதல் மலர்ந்திருப்பதை காண முடியும்.
நடிகர், நடிகை : சூர்யா, ஜோதிகா
படம் : காக்க காக்க
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடகர்கள் : பம்பாய் ஜெயஸ்ரீ
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
என்னோடு நீ இருந்தால் (Ennodu Nee Irundhaal)
சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ” என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்” பாடல் காதலர்களுக்கு இடையிலான பிணைப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : விக்ரம், எமி ஜாக்சன்
படம் : ஐ
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
தமிழ் காதல் பாடல்கள் (Tamil Love Songs)
தமிழ் சினிமாவில் காதலுக்கு பஞ்சம் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா என தமிழ் சினிமாவில் நிஜ ஜோடிகளும் உள்ளனர். காதல் செய்பவர்கள், தோல்வி அடைந்தவர்கள், காதலர்களை பிரித்து இருப்பவர்களுக்கு என தனித்தனியாக பாடல்கள் உள்ளன. அவற்றில் சிறந்த சில பாடல்கள் உங்களுக்குகாக இங்கே.
உன் நெனப்பு நெஞ்சுக்குழி (Un Nenappu)
மாறன் இயக்கத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. அருள்நிதி, மஹிமா இந்த பாடலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த பாடலுக்கு சாம் சிஎஸ் இசையமைத்து அவரே பாடியுள்ளார்.
நடிகர், நடிகை : அருள்நிதி, மஹிமா
படம் : இரவுக்கு ஆயிரம் கண்கள்
இசை : சாம் சிஎஸ்
பாடகர்கள் : சத்யா பிரகாஷ், சின்மயி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மழை குருவி (Chekka Chivantha)
மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படமான செக்க சிவந்த வானம் படத்தில் மழை குருவி பாடல் ரசிங்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயன்யா, சிம்பு ஜோடிக்கு இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல் வரிகளில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் பெரும்பாலோனரின் ரிங்க்டோனாக உள்ளது.
நடிகர், நடிகை : தயன்யா, சிம்பு
படம் : செக்க சிவந்த வானம்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
முன்பே வா என் அன்பே (Munnbe Vaa En Anbe)
ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் எவர் க்ரீன் பாடலாக இருந்து வருகிறது. வாலியின் வரிகளில் ” முன்பே வா என் அன்பே வா பாடல்” சிறந்த காதல் பாடலாக உள்ளது. பெரும்பாலோரின் விருப்ப பாடலாக இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : சூர்யா, ஜோதிகா
படம் : ஜில்லுனு ஒரு காதல்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நெஞ்சுக்குள் பெய்திடும் (Vaaranam Ayiram)
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்த பாடளுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சிறந்த காதல் மெலடி பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : சூர்யா, சமீரா ரெட்டி
படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடகர்கள் : ஹரிஹரன், தேவன், பிரசன்னா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
அன்பே பேரன்பே (Anbe Peranbe)
என்ஜிகே படத்தில் சமீபத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உமா தேவி வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் சிறந்த இசை குழுவினர் இந்த பாடலை இயற்றியுள்ளனர். பாடல் வெளியான குறைந்த நாட்களிலே அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
நடிகர், நடிகை : சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்
படம் : என்ஜிகே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
உன்னோடு வாழாத (Unnodu Vazhatha)
அமர்க்களம் படத்தில் வெளியான இந்த பாடலில் அஜித் மற்றும் ஷாலினி நடித்திருப்பார்கள். ” உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…. என் உள் நெஞ்சு சொல்கின்றது” என தொடங்கும் இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது வரை சிறந்த காதல் பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : அஜித், ஷாலினி
படம் : அமர்க்களம்
இசை : பரத்வாஜ்
பாடகர் : கே. எஸ். சித்ரா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
வசீகரா என் நெஞ்சினிக்க (Vaasegara En Nenjinikka)
மின்னலே படத்தில் வெளியான இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பாடலாக உள்ளது. ஹரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த பாடலில் மாதவன், ரீமா சென் சிறப்பாக நடித்திருப்பார்கள். சிறந்த காதல் பாடலாக இப்போதும் இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : மாதவன், ரீமா சென்
படம் : மின்னலே
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஒத்தையடி பாதையில (Othaiyadi Pathayila)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. தற்போது அனைத்து இளைஞர்களுக்கும் பிடித்த பாடலாக இந்த பாடல் உள்ளது. குறிப்பாக டிக் டாக் எனப்படும் பொழுது போக்கு செயலியில் இந்த பாடல் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகை : தர்ஷன்ம, ஐஸ்வர்யா ராஜேஷ்
படம் : கனா
இசை : திப்பு நினன் தாமஸ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்திரன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
இணையே என் உயிர் துணையே (Inayae Song)
தடம் படத்தில் வெளியான இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி அதிகமானோரை கவர்ந்துள்ளது. மதன் கார்கியின் அழகான வரிகளில் அருண் ராஜ் இசையில் இந்த பாடல் சிறந்த பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : அருண் விஜய்
படம் : தடம்
இசை : அருண் ராஜ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், பத்மலதா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் (Unnale Ennalum)
அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. நா. முத்துக்குமார் வரிகளில் பாடல் இனிமையாக அமைந்துள்ளது. விஜய் மற்றும் சமந்தா இந்த பாடலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர், நடிகை : விஜய், சமந்தா
படம் : தெறி
இசை : ஜி. வி. பிரகாஷ்
பாடகர்கள் : ஹரிகரன், சைந்தவி
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
சமீபத்தில் வெளியான தமிழ் பாடல்கள் (Tamil Latest Songs)
தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை வாய்ந்த இசையமைப்பாளர்களும், பாடகர்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப பாடல்களை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாடல்களை இங்கே காணலாம்.
ரவுடி பேபி (Rowdy Baby)
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தில் ரவுட் பேபி பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 வது இடத்தை இந்த பாடல் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேச இசைப்பட்டியலில் இடம் பிடித்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமை இதற்கு கிடைத்தது. ரவுடி பேபி பாடலில் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
நடிகர், நடிகை : தனுஷ், சாய் பல்லவி
படம் : மாரி 2
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடகர்கள் : தனுஷ், தீ
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
கண்ணம்மா உன்ன (Ispade Rajavum Idhaya Raniyum)
இஸ்பேட் ராஜா இதய ராணி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா உன்ன மனசில் நெனைக்கிறேன் பாடல் தற்போது பெரும்பாலான இளைஞர்களின் ரிங் டோனாக இருந்து வருகிறது. சாம் சி எஸ் இசை படத்திற்கு மேலும் காதலை ஊட்டுகிறது.
நடிகர், நடிகை :ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சிநாத்
படம் : இஸ்பேட் ராஜா இதய ராணி
இசை : சாம் சி.எஸ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
டக்குனு டக்குனு (Takkunu Takkunu)
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டக்குனு டக்குனு’ பாடல் ஹிப்ஹாப் தமிழா இசையில் மாஸாக உள்ளது. இப்பாடல் வெளியான உடனேயே இணையத்தில் ரசிங்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர், நடிகை : சிவகார்த்திகேயன், நயன்தாரா
படம் : மிஸ்டர் லோக்கல்
இசை : ஹிப்ஹாப் தமிழா
பாடகர் : அனிருத்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
வெள்ளாட்டு கண்ணழகி (Mehandi Circus)
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி என தொடங்கும் மெலோடி பாடல் பெரும்பாலோனோர் கவனத்தை ஈர்த்துள்ளது. புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த பாடல் ஷான் ரோல்டன் இசையில் மனதை வரும் காதல் பாடலாக உள்ளது.
நடிகர், நடிகை : ரங்கராஜ், சுவேதா திரிபாதி
படம் : மெஹந்தி சர்க்கஸ்
இசை : ஷான் ரோல்டன்
பாடகர் : ஷான் ரோல்டன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
இளமை திரும்புதே (Ilamai Thirumbuthe)
நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களின் மணம் கவர்ந்த பேட்ட படத்தில் இளமை திரும்புதே பாடல் அமைந்துள்ளது. “இளமை திரும்புதே புரியாத புதிராச்சே இதய துடிப்பிலே” என்ற தனுஷின் பாடல் வரிகளில் ரஜினிக்கு இயல்பாகவே இளமை திரும்பிய விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. பாடல் வெளியான சில நாட்களிலே மில்லியன் கணக்கானோர் இந்த பாடலை கண்டு ரசித்துள்ளனர்.
நடிகர், நடிகை : ரஜினி, த்ரிஷா
படம் : பேட்ட
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
பாடகர் : அனிருத் ரவிச்சந்திரன்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
வா வா பெண்ணே (Vaa Vaa Penne)
உறியடி 2 திரைப்படத்தில் வெளியாகியுள்ள வா வா பெண்ணே பாடல் சித் ஸ்ரீராம் குரலில் இனிமையாக அமைந்துள்ளது. இளம் காதலர்களுக்கு இடையிலானா ரொமான்டிக் பாடலாக இந்த பாடல் உள்ளது.
நடிகர், நடிகை : விஜய் குமார், விஸ்மயா
படம் : உறியடி 2
இசை : கோவிந்த் மேனன்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், ப்ரியங்கா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
யாயும் யாயும் (Sagaa)
சகா படத்தில் இடம்பெற்றுள்ள யாயும் யாயும் பாடலை இதுவரை கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இருந்து இந்த பாடலின் வரிகள் எடுக்கப்பட்டுள்ளன. “யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ” என்று கருத்துள்ள இந்த வரிகளை நரேஷ் ஐயர், ரிடா பாடலாக பாடியுள்ளனர்.
நடிகர், நடிகை : சரண், நீரஜா, ஸ்ரீராம்
படம் : சகா
இசை : ஷபீர்
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ரிடா
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நெஞ்ச உனக்காக (Sindhubaadh)
சிந்துபாத் படத்தில் வெளியான “நெஞ்ச உனக்காக நான் பதிக்கி வைச்சேன்” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் மனதுக்கு இனிமையாக அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : விஜய் சேதுபது, அஞ்சலி
படம் : சிந்துபாத்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடகர் : ஹரிச்சரண்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க – சினிமாவில் சுதந்திர தாகம் : தேசப்பற்றை உணர்த்தும் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள்!
மறுவார்த்தை பேசாதே (Maruvarthai Pesathe)
என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் “மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு” பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் இன்னும் வெளியாக நிலையில் முன்னதாக பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சித் ஸ்ரீராம் குரலில் மனதை கரைய வைக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : தனுஷ், மேஹா ஆகாஷ்
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா
இசை : தர்புகா சிவா
பாடகர் : சித் ஸ்ரீராம்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
நெஞ்சில் மாமழை (Nenjil Maamazhai)
மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்த நிமிர் திரைப்படத்தில் “நெஞ்சில் மாமழை” பாடல் இடம்பெற்றுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையில் மெலோடி பாடலாக அமைந்துள்ளது.
நடிகர், நடிகை : உதயநிதி, பார்வதி நாயர்,
படம் : நிமிர்
இசை : அஜனீஷ் லோக்நாத்
பாடகர் : ஸ்வேதா மோகன், ஹரி சரண்
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.
மேற்கண்ட சிறந்த பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.