logo
ADVERTISEMENT
home / Celebrations
தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பிய பன்ச் வசனங்கள்!

தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பிய பன்ச் வசனங்கள்!

பராசக்தி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற பட வசனங்கள் (movies) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இயல்பான, எளிமையான வசனங்களால்  நடிகர்கள் பார்வையாளர்களை #BestMovieLineEver கவருகின்றனர். இந்த வசனங்களை மக்கள் பலரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வசனங்கள் (movies) என்ன என்பதை இங்கு காணலாம். 

twitter

#BestMovieLineEver நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட வசனங்கள்

 • ‘இதெப்படி இருக்கு’ – 16 வயதினிலே  
 •  ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ – முள்ளும் மலரும் 
 •  ‘இது ரஜினி ஸ்டைல்’ – ஆடு புலி ஆட்டம்  
 •  ‘தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்’ – அலெக்ஸ் பாண்டியன் 
 •  ‘யாரோடைய பாதையிலும் நான் போக விரும்பல… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்… யாரோடைய நிழல்ளையும் நான் சோம்பேறியாக மாட்டேன்… என்னோட நிழல்ல சோம்பேறி உருவாகவும் விட மாட்டேன்…’ – தனிகாட்டு ராஜா 
 •  ‘நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்’ – குரு சிஷ்யன் 
 •  ‘நான் பெண்ண மதிப்பேன், தல வணங்குவேன்… ஆனா உங்கள மாதிரி மதம் பிடிச்ச பெண்ணை பாத்தா என்ன விட்டிருங்க… என் தல முடி கூட ஆடாது’ – மன்னன்
 • ‘நேத்து ஒரு கூலி, இன்னிக்கு ஒரு நடிகன், நாளைக்கு…?’ – உழைப்பாளி
 • ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ – அருணாச்சலம்
 • ‘பொண்டாட்டி, குழந்த, மாமா, மச்சான்னு உறவுல வேகுறத விட, ஒரு கட்ட விறகுல வெந்துட்டு போயிறலாம் – பாபா
 • ‘கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு’ – பாபா
 • ‘ப்ளாக் ஷீப்… ப்ளாக் ஷீப்… மேஹஹஹஹ்’ – எந்திரன்
 • கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் – சிவாஜி

அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!

ADVERTISEMENT

twitter

#BestMovieLineEver நடிகர் அஜித் திரைப்பட பட வசனங்கள்

 • இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்…எல்லா சூழ்நிலையிலும்…’நீ தோத்துட்ட… நீ தோத்துட்டன்னு ‘ உன் முன்னாடி நின்னு அலறினாலும்…நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது – 
 •  என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா – மங்காத்தா
 •  சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு – ஆரம்பம்
 •  எவ்வளவு தூக்குறோங்கிறது முக்கியமில்லை எதை தூக்குறோங்கிறதுதான் முக்கியம் – வீரம்
 •  ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன், அந்த பக்கம் போயிட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்த பக்கமா இல்ல அந்த பக்கமான்னு முடிவு செய்ற நேரம் வந்துச்சு – என்னை அறிந்தால்
 •  மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினால் மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது, முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்தை மாற்ற முடியும் – சிட்டிசன்
 •  படிப்புக்கு காசு வேணும்ன்னா நான் தர்றேன். ஆனால் அந்த படிப்பே காசுன்னா நான் தரவே மாட்டேன் – ரெட்
 • ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைன்னா ஆடிக் காண்பிச்சிரலாம், பாட தெரியலைன்னா பாடி  காண்பிச்சிரலாம், வேலை செய்ய தெரியலைன்னா செஞ்சு காமிச்சிடலாம், ஆனா ஆம்பளை இல்லைன்னு சொன்னா – வரலாறு
 •  உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது  – தீனா 
 •  லைட்ட போட்டு வண்டி ஓட்டணும். லைட்டா போட்டு வண்டிய ஓட்டவே கூடாது – மங்காத்தா
 •  வாய் தப்பு செஞ்சா கண்ணு காட்டி கொடுத்துடும் – அசல் 
 •  நான் பார்த்து பார்த்து தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம்..வெட்ட நினைச்சே கோடாலி கூட உடைஞ்சிடும் – அமர்க்களம் (movies)

சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !

ADVERTISEMENT

twitter

#BestMovieLineEver நடிகர் கமல் திரைப்பட வசனங்கள்

 • நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா… ஹஹஹ தெரியலையேம்மா – நாயகன்
 •  நாலு காசு சம்பாதிக்கனும்னா சாகனும், சம்பாதிச்சு காச வீட்டுக்கு கொண்டாரதுக்குல்ல ரத்த அடி படனும் – நாயகன்
 •  மனச மாத்திகிட்டு மன்னிப்பும் கேக்குர மனுஷன் இருக்கானே அதான் என்ன பொருத்த வரைக்கும் சாமி! – அன்பே சிவம் 
 •  முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்! – அன்பே சிவம்
 •  தேவனா இருக்கிறது முக்கியமா? மனுசனா இருக்கிறது முக்கியமா? – தேவர் மகன்
 •  போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா – தேவர் மகன்
 •  ஒருத்தன் சந்தோஷமா இருக்கும் போது அதை உணர்றதில்ல – விருமாண்டி
 • மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுஷன், மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் வீரன் – விருமாண்டி
 • கண்மனி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்.. அபிராமி அபிராமி – குனா
 •  பூமி ஒண்ணுதான் இதயும் அழிச்சுட்டீங்கன்னா அப்புறம் சந்திரனுக்கா போவீங்க – தசாவதாரம்
 •  கடவுள் இல்லைன்னா சொன்னேன் இருந்திருந்தா நல்லாயிருக்கும் – தசாவதாரம் 
 • மறதி ஒரு தேசிய வியாதி – உன்னை போல் ஒருவன்

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

twitter

ADVERTISEMENT

#BestMovieLineEver நடிகர் விஜய் திரைப்பட வசனங்கள்

 • நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் – போக்கிரி 
 •  யார் அடிச்சி பொரி கலங்கி பூமி அதிருதோ அவன் தான் தமிழ் – போக்கிரி
 •  ஐயம் வெயிட்டிங் – துப்பாக்கி 
 •  எங்களுக்கு நண்பன்னா தோள்ல்ல கைபோடவும் தெரியும், எதிரின்னா தோலை உரிக்கவும் தெரியும் – திருமலை 
 • வாழ்க்கை ஒரு வட்டம்டா இதுல தோக்கறவன் ஜெயிப்பான் ஜெயிக்கறவன் தோப்பான்
 •  பூமிக்குள்ள போனவன் புழுதியில் இருந்து வர்றான்னு பாக்குறியா..புயல் எப்போதும் புழுதியில் இருந்து தாண்டா வரும்
 •  இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம்..இந்த இடம்..எங்கேயுமே எனக்கு பயம் கிடையாதுடா…ஏன்னா ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா…. – கில்லி
 •  நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். நீ வேற காட்டு காட்டுன்னு சொல்றே. காட்டாம இருந்தா நல்லா இருக்குமா? – வேலாயுதம்
 •  மெயினு பேசும்போது சைடு எல்லாம் சைலண்ட்டா இருக்கணும், சவுண்டு வந்துச்சு சங்கறுத்துருவேன் –  சுறா
 •  நான் எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே  – ஆதி
 •  நான் கான்வெண்ட்ல படிச்சிட்டு வந்த கலெக்டர் இல்லடா, கார்ப்பரேஷன் ஸ்கூலு. அறுத்துறுவேன் சங்கை – மதுர 
 •  யாரு கிட்டையும் இல்லாத கெட்ட பழக்கம் – பைரவா 
 •  பொறுக்கிங்கள அழிக்க நீங்க நினைச்சா முடியும். நினைக்க மாட்டீங்க….ஆனா இந்த கிரி நினைச்சிட்டான்..முடிச்சிருவாண்டா….- திருப்பாச்சி
 •  பணக்காரன் யூஸ் பண்ற ஒரு காண்டம்ல்ல ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் வேணும்ன்னா ஒரு ஏழை குழந்தை தன்னுடைய வாழ்க்கையில ஸ்ட்ராபெர்ரியை நினைச்சு பார்க்க முடியுமா – கத்தி

twitter

#BestMovieLineEver நடிகர் விஜய் சேதுபதி திரைப்பட வசனங்கள்

 • இங்க எல்லார் வாழ்க்கையிலையும் பிரச்சனை இருக்கு, பிரச்சனையை பார்த்து ஓடி ஒளிஞ்சா… அது துரத்தும் நம்ப ஓடணும், அதுவே நம்ப திரும்பி, நின்னு முறைச்சா… இவ்வவு நேரம் இவன தான துரத்துனோம் என்கிற வெட்கமே இல்லாம தலைதெறிக்க ஓடும், நம்ம ஓடனும்மா இல்ல அத ஓட விடணுமா – 
 • ராமன் கெட்டவனா… ராவணன் கெட்டவனா… – ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
 • இதுக்கொரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும், ஒரு முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும் – சூது கவ்வும்
 • லவ்னா ஆயிரம் பிரச்சனை இருக்கும், சண்டை வர தான் செய்யும் ஒரு கேப் விழ தான் செய்யும் –  நானும் ரவுடி தான் 
 • எப்பவும் மற்றவர்களை கிழே இறக்கிவிட்டு நாம் மேலே வருவது தப்பு, நாம் மேலே சென்று இடம் இல்லை கொஞ்சம் கீழே இறங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால் அவங்களே இறங்கி விடுவார்கள் – ஜூங்கா 
 • இந்த இடத்திற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளேன் – ஜூங்கா 
 • நம்ம மனசுக்கு எது சரின்னு தோணுதோ அத தான் செய்யணும், அத தான் பேசணும் – 
 • உன் கண்ணுக்கு நல்லவனாக தெரிந்தால் நடிக்கிறேன் என்று அர்த்தம், கெட்டவனா தெரிஞ்சா உண்மையாக இருக்கிறேன் என அர்த்தம் – 
 • ப்பா யார்டா இது பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு வந்து நிக்கிறது – நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 
 • என்ன ஆச்சு, கிரிக்கெட் விளையாண்டோம் பால் மேல போச்சு நீ தானே பால் போட்ட? ஸ்லிப் ஆய்ட்டானா, கீழ விழுந்துட்டானா இங்க அடி பட்டிருக்கும், இங்க தான் மெடுலா ஆப்லங்கேட்டா  இருக்கு – நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
 • ஒரு கத சொல்லட்டுமா சார் – விக்ரம் வேதா
 • ஒரு சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும், அதை மிஸ் செய்தால் அதனை நினைத்தே வாழ்க்கை வீணாகிவிடும் – காதலும் கடந்து போகும்
 • நம்ம சாவு நம்ம கைல இருக்காது தனி கெத்து – விக்ரம் வேதா

twitter

ADVERTISEMENT

#BestMovieLineEver நடிகர் சிம்பு திரைப்பட வசனங்கள்

 • உன் கண்கள் வழியா அவங்க என்னை பார்க்கலைனு நினைக்கறேன் – விண்ணை தாண்டி வருவாயா
 • உலகத்தில எத்தனை பொண்ணுங்க இருந்து நான் ஏன் ஜெசி ஜெசின்னு சொல்றேன் – விண்ணை தாண்டி வருவாயா
 • அம்மாவிற்கு பிறகு நான் தான் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் – வந்தா ராஜாவாக தான் வருவேன் 
 • கெத்து தான் என் சொத்து – வந்தா ராஜாவாக தான் வருவேன் 
 • என்ன நம்பி கெட்டவங்க யாரும் இல்ல.. என்ன நாம்பாம கெட்டவங்க பலர்.. – வந்தா ராஜாவாக தான் வருவேன் 
 •  நா பொண்ண காதலிச்சுருக்கனும், உன்ன காதலிச்சுருக்க கூடாது – வல்லவன்  
 • ஜீன்ஸ் போட்டவெல்லாம் நல்லவளும் கிடையாது, சுடிதார் போட்டவெல்லாம் கெட்டவளும் கிடையாது – மன்மதன்

twitter

#BestMovieLineEver நடிகர் தனுஷ் திரைப்பட வசனங்கள்

 • என்ன மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’, – படிக்காதவன் 
 • சார் நீங்க தான் இறங்குனாதான் லோ கிளாஸ், நாங்கல்லாம் இருக்கிறதே லோ கிளாஸ் – படிக்காதவன்
 • ஒருத்தன் செத்தா முடியுற சண்டையில்ல, ஜெயிக்குறமோ, தோக்குறமோ முதல்ல சண்ட செய்யனும்,  குடிசையோ, குப்பமேடோ நம்மதான் இத பாத்துக்கனும். நாம இதுக்காக சண்டை செய்யனும் – வட சென்னை 
 • தெண்டச் சோறு எப்பவுமே திமிரா தான் இருக்கனும்… தெண்டச்சோறு குனிஞ்சா கும்மீடுவாங்க… – வேலையில்லா பட்டதாரி 
 • வேலைக்குப் போகலனா நீங்க பேரு வச்சு வளத்த உங்க நாய்கூட உங்கள மதிக்காது – வேலையில்லா பட்டதாரி 
 • அம்மா இல்லாதவங்க கிட்ட போயி கேளு… அம்மா அடிக்கறதுல எவ்வளவு சந்தோசம்னு அவங்க சொல்வாங்க… – வேலையில்லா பட்டதாரி 
 • செஞ்சுடுவேன் – மாரி 
 • வந்தது, வாழ்ந்தது, செஞ்சது, சேர்த்ததுங்குறதவிட நமக்கப்பறம் எது நின்னதுன்றதுதான்டா மேட்டரு – கொடி 
 • எனக்கு அரசியலும் தெரியும், அது நல்லவங்கள என்ன பண்ணும்னும் தெரியும் – கொடி

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
09 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT