கரும்புள்ளிகள் எப்போதும் நம் அழகிற்கு மிக பெரிய தொல்லைதான். பருக்களால் ஏற்படும் தழும்புகள் மற்றும் நிரந்தர கரும்புள்ளிகளை நீக்க பன்னீர் ரோஜா (panneer rose) உதவுகிறது.
பன்னீர் ரோஜாவின் இதழ்களை வேப்பிலையோடு சேர்த்து சில துளிகள் எலுமிச்சை விட்டு அரைக்கவும். இதனை முகத்தில் தடவி பன்னீர் வாட்டர் மூலம் நனைத்த பஞ்சினை கண்களில் வைத்து 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.
இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் காணாமல் போகும். முகப்பருக்கள் முகவரி மாற்றிப் போகும்.
Youtube
உதடுகள் கருமையாக இருக்கிறதே என்று கவலைப்படுபவர்கள் சிறிது பன்னீர் ரோஜா இதழ்களை எடுத்து பால் விட்டு அரைத்து அதனை உதட்டில் பூசவும். இயல்பான சிவந்த நிறத்திற்கு உதடுகள் மாறும்.
பன்னீர் ரோஜா இதழ்களை நிழலில் காயவைத்து உலர்த்தி அதனுடன் நான்கைந்து பூலாங்கிழங்கு சேர்த்து பயத்தம்பருப்பும் சேர்த்து அரைத்தால் கிடைக்கும் பொடியினைக் கொண்டு குளித்து வர சரும நோய்கள் எல்லாம் காணாமல் போகும்.
Youtube
ஒரு கப் மல்லிகை பூவுடன் 4 கிராம்பு சேருங்கள். இதனுடன் சுத்தமான சந்தனம் சேர்த்து வெதுவெதுப்பான நீர் விட்டு லேசாக கல்லில் மசிக்கவும். இதனுடன் பன்னீர் ரோஜா இதழ்களை சேர்த்து நெற்றி முகம் போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள். அதன் பின்னர் முகம் கழுவினால் அங்கங்கே உள்ள கருந்திட்டுக்கள் நீங்கி சருமம் ஒரே சீரான நிறம் பெறும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!