logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
இலவங்க பட்டை தூள் சாப்பிடுவதால் ஏற்படும் அதிசய மாற்றங்கள் (Benefits Of Cinnamon Powder In Tamil)

இலவங்க பட்டை தூள் சாப்பிடுவதால் ஏற்படும் அதிசய மாற்றங்கள் (Benefits Of Cinnamon Powder In Tamil)

தற்போது அதிக அளவில் மருத்துவ உலகில் பேசப்பட்டு வரும் மருத்துவ குறிப்புகளில் இலவங்க பட்டை தூளும்(cinnamon Powder) தற்போது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இலவங்க பட்டை(Cinnamon Powder) சாப்பிடுவதால் உடல் எடை குறைவது என்பதையும் தாண்டி உடலுக்கு பல்வேறு விதத்தில் உதவுகின்றது. எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறி மசாலையில் இலவங்கப்ட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இலவங்க பட்டையின் பயன்கள்
இலவங்கப்பட்டை பட்டை பயன்படுத்துகிறது
கறுவா தூள் பக்க விளைவுகள்
FAQs

benefits-of-cinnamon-powder004
இலவங்க பட்டையின் பயன்கள் (Health Benefits of Cinnamon Powder)

ஆன்டிஆக்சிடன்டுகள் (Prevent From Oxidative Damage) 

ஆன்டிஆக்சிடன்டுகள் ஆக்சிஜனேற்றத்தால் உடலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்க உதவுகின்றன. இலவங்கப்பட்டையில் பாலிஃபீனால்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட மிகுந்த செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.

உடல் எடை குறைய (Weight Loss)

அதிக கொழுப்பு உள்ள உணவுகளால் நேரும் தீங்கைத் தணிக்க இலவங்கப்பட்டை உதவக்கூடும். உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் மிகச் சிலவே என்றாலும், உடலின் குளுக்கோஸ் அளவை மாற்றுவதால் இது உடல் எடை குறைவதற்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் இருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.

ADVERTISEMENT

எள் விதையின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்(Sesame Seeds)

நீரிழிவு (Diabetes)

டைப் 2 வகை நீரிழிவுநோயை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புப் பண்புகளைக் குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூஞ்சை எதிர்ப்பு (Fight Bacterial And Fungal Infections)

இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம்/அடைப்பை சரிசெய்ய உதவுகிறது. மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இலவங்கப்பட்டையையும் பயன்படுத்தும் போது, ​​அது ஒரு பருவகால இருமல், ஜலதோஷம் முதல் பெரிய பிரச்சனைகள் வரை பலவற்றில் உதவுகிறது.

நீர்க்கட்டிகள் (Cysts)

சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள் தொகுப்பு உள்ள பெண்களுக்கு உடல் எடை கூடுவதற்குக் காரணமாக இருக்கும் இன்சுலின் எதிர்ப்புப் பண்பைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுகிறது. அதுமட்டுமின்றி, எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் உள்ளவர்களுக்கு அளவுக்கு ஏற்படும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மூளை செயல்பாடு (Prevent Neurological Diseases)

முன்பே குறிப்பிட்டதுபோல், இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன. அவை அல்சீமர் நோய், பர்கின்சன் நோய் போன்ற நரம்பியல் நோய்கள் வருவதைத் தடுக்கவும் உதவக்கூடும். நரம்புகளைப் பாதுகாக்கும் புரதங்களைத் தூண்டி செயல்படுத்துவதன் மூலம் இது மூளை செல்கள் செதமடைவதைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

பற்கள் பாதுகாப்பு (Prevent Oral Problems)

பெப்பர்மின்ட் போலவே, இலவங்கப்பட்டையும் வாயிலிருக்கும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது, இதனால் வேதிப்பொருள்கள் எதுவும் இல்லாமலே சுவாசப் புத்துணர்வைப் பெற முடிகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை அல்லது வாய் நோய்த்தொற்றும் ஏற்படலாம். பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்ட மவுத்வாஷாகவும் இலவங்கப்பட்டை பயன்படும், பற்பொடி மற்றும் பற்பசைகளில் நெடுங்காலமாக இலவங்கப்பட்டை ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

benefits-of-cinnamon-powder-in-tamil
இலவங்க பட்டையை பயன்படுத்தும் முறை (Various Uses Of Cinnamon Powder And Tips)

 • இலவங்க பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர்  விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து  காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.
 • சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு  வந்தால் விஷம் முறியும்.
 • வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்கள் மற்றும் வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும்  சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும்.
 • குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு பட்டையை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.
 • மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.
 • சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.
 • 16 அவுன்ஸ் டீ தண்ணீருடன் 2 மேசைக் கரண்டி தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு இறங்கிவிடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்திரவுகள் குறையும்.
 • ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.
 • ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து  சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.
 • தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.
 • இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும், அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.

benefits-of-cinnamon-powder-in-tamil
இலவங்க பட்டை அதிக அளவு எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் (Side Effects Of Cinnamon Powder)

கல்லீரல் பழுது (Liver Damage)

சராசரியாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு நாளுக்கு 5 mg அளவு பட்டையை தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை டீஸ்பூன் அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பல ஆய்வுகள் இந்த இலவங்கப்பட்டையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பழுது ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கிறது.

கேன்சர் (Increase The Risk Of Cancer)

ஆய்வு ஒன்று அதிகமாக இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நுரையிரல், கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் அறிவியியலாளர்களும் இந்த இலவங்கப்பட்டையை தொடர்ந்து அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடலின் உள் உறுப்புகள் பழுதுபட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

வாய்ப்புண் (May Cause Mouth Sores)

சிலர் இலவங்கப்பட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட காரணத்தினால், வாய்ப்புண் உண்டானதையும் அனுபவித்துள்ளனர். இதனை அதிகமாக சாப்பிடும் போது வாயில் அரிப்பு, எரிச்சல், பல் வலி போன்றவை உண்டாவதையும் உணர்ந்துள்ளனர்.

இரத்த சர்க்கரை அளவு (May Cause Low Blood Sugar)

இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பது தெரிந்த உண்மை தான்..! ஆனால் இதனை அதிகமாக சாப்பிடும் போது உங்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக குறைந்து விடும்.

benefits-of-cinnamon-powder006
இலவங்க பட்டை தொடர்பான கேள்விகள் (FAQs)

இலவங்க பட்டை உடல் எடையை குறைக்க உதவுமா?

குறிப்பிட்ட அளவு வெரும் வயிற்றில் தினமும் எடுத்து வந்தால் உடல் எடை கட்டாயம் குறையும்.

இலவங்க பட்டை சாப்பிடுவதால் நீழிலிவு பிரச்சணை சரியாகுமா?

டைப் 2 வகை நீரிழிவுநோயை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இன்சுலின் அளவை குறைக்கும் பண்பு இலவங்க பட்டையில் இயல்பாகவே இருக்கின்றது.

ADVERTISEMENT

இலவங்க பட்டை வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்குமா?

உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் மிகச் சிலவே என்றாலும், உடலின் குளுக்கோஸ் அளவை மாற்றுவதால் இது உடல் எடை குறைவதற்கு உதவக்கூடும் என்று கூறப்படுகிறது.

இலவங்க பட்டை செரிமான பிரச்சணையை சரி செய்யுமா?

அன்றாட உணவில் சேர்க்கும் கறி மசாலையில் இலவங்கப்ட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இலவங்க பட்டை பற்களை பாதுகாக்குமா?

வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை அல்லது வாய் நோய்த்தொற்றும் ஏற்படலாம். பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்ட மவுத்வாஷாகவும் இலவங்கப்பட்டை பயன்படும், பற்பொடி மற்றும் பற்பசைகளில் நெடுங்காலமாக இலவங்கப்பட்டை ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

இலவங்க பட்டை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும்?

இலவங்க பட்டை தூளை தினமும் உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் இருக்கும் இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் அடிக்கடி பெலவீனமின்றி இருக்க உதவுகின்றது.

ADVERTISEMENT

இலவங்க பட்டை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் எதும் வருமா?

இலவங்க பட்டை சாப்பிடுவதால் கல்லீரல், கேன்சர், வாய்ப்புண் போன்ற பிரச்சணைகள் வருவதாக தெரிவிக்கின்றனர். எனினும் இவையனைத்தும் அதிக அளவு எடுத்துக்கொண்டால் மாத்திரமே இந்த பக்க விளைவு ஏற்படும்.

இலவங்க பட்டை சருமத்திற்கு சிறந்ததா?

இலவங்க பட்டை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதனால் இரத்த சோகை மற்றும் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலவங்க பட்டை முகத்தில் தடவலாமா?

இலவங்க பட்டை முகத்தில் தடவுவதற்கு ஏற்றதாக இது வரை எந்த ஆய்வுகளும் தெரிவிக்கவில்லை.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

16 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT