தீபிகா படுகோன் அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஹீரோயின். நடிப்பு மட்டுமே இல்லாமல் அவரது அழகும் இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் தீபிகா படுகோன் (Deepika padukone) தனது அழகை எப்படி பராமரிக்கிறார் மற்றும் மேம்படுத்துகிறார் என்பது பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.
அவரது அழகின் ரகசியம் பற்றி அவரே வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சாரா அலிகானின் எடைக்குறைப்பு ரகசியம் மற்றும் தனது PCOS ஐ அவர் வென்ற விதம் – ஆய்வும் தீர்வும்
க்ளென்சிங்
அழகான மற்றும் ஆரோக்கியமான மினுமினுக்கும் சருமம் வேண்டும் என்றால் க்ளென்சிங் மிக முக்கியமான ஒன்று. அதற்காக மிக மென்மையான க்ளென்சிங் சோப் பயன்படுத்துகிறேன். மென்மையான பொருள்களை தான் எனது சருமத்திற்கான பயன்படுத்துகிறேன்.
பேஷியல்
நீங்கள் சரியான இடைவெளிகளில் முகத்திற்கு மசாஜ் செய்வது முக்கியம். அதே சமயம் அடிக்கடி சரும சுத்தம் செய்வதையும் நிறுத்தி விட வேண்டாம். இரண்டையும் செய்வதால் பலன் இரட்டிப்பாகும்.
முழு உடல் மசாஜ்
வாரத்துக்கு இரண்டு முறை நீங்கள் முழு உடல் மசாஜ் செய்யலாம். நான் வாரம் இருமுறை மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெயால் எனது உடல் முழுக்க மசாஜ் செய்து கொள்கிறேன். ஸ்பா செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே குளிப்பதற்கு முன்னர் உடல் முழுதும் தேங்காய் எண்ணெய் தடவி லைட்டாக மசாஜ் செய்து ஒரு மணிநேரம் ஊற விட்டு பின்னர் குளிக்கலாம்.
கூந்தல் பராமரிப்பு
பாரம்பரிய மரபுகளை இதில் பின்பற்றி வரும் தீபிகா தலைமுடிக்கும் சிறு வயது முதலே தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறார். வாரம் ஒருமுறை மிதமான சூட்டில் தேங்காய் எண்ணையை தலையில் தடவி லேசாக மசாஜ் செய்வதால் தலை முடி ஆரோக்கியமாகும் என்கிறார் தீபிகா.
சன்ஸ்க்ரீன்
எப்போதும் சன்ஸ்க்ரீன் தான் தனது உடலை பாதுகாக்கிறது என்று நம்புகிறார் தீபிகா. நிறைய பேர் சன்ஸ்க்ரீன் போட மறப்பது வாடிக்கை. இதனை தவிர்க்க எப்போதும் கையோடு வைத்திருக்கும் பொருள்களில் சன்ஸ்க்ரீனையும் சேர்த்திருக்கிறார் தீபிகா. இதனால் அவர் எங்கு போனாலும் சன்ஸ்க்ரீனை மறப்பதேயில்லை
கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!
முகத்தில் நாம் கவனிக்க வேண்டிய இடங்கள்
தீபிகாவின் அழகு என்பது அவரது பொலிவான முகம் பாலிஷான தேகம் அழகிய சிரிப்பு மட்டும் அல்ல. அவரது கண்களும் இதில் முக்கியமானவை. அடர்த்தியான ஐ லைனர் மற்றும் ப்ரவுன் நிற ஐ ஷேடோ அவருக்கு பொருத்தமாக இருப்பதாக கூறுகிறார். புருவங்கள் அடர்த்தியாக இருப்பதையே அவர் விரும்புகிறார்.
உதடு என்று வரும் போது லிப்ஸ்டிக்கின் நிறங்கள் போல்டாக இருக்குமாறு அவர் பார்த்து கொள்கிறார். இது அவரின் விருப்ப நிறமான அடர் சிவப்பு நிறம் போன்றவைகளை பயன்படுத்துவதை குறிக்கிறது. இருப்பினும் உடையின் நிறத்திற்கேற்ப அவர் சில சமயங்கள் பீச் பிங்க் போன்ற நிறங்களையும் பயன்படுத்துவாராம்.
இவைதான் தீபிகா படுகோனின் அழகிற்கான ரகசிய குறிப்புகள். இவற்றில் இருந்து உங்கள் தேகம் மற்றும் முகத்திற்கு தேவையான குறிப்புகளை எடுத்து பயன்படுத்தி பாருங்கள். உங்கள் தேகமும் பாலீஷாகும் ஆச்சர்யத்தை நீங்களே உணரலாம்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo