logo
ADVERTISEMENT
home / Astrology
தமிழகமே கொண்டாடும் இந்த அத்தி வரதர் யார்? இவரின் சிறப்புகள் என்ன?பலன்கள் என்ன?பார்க்கலாமா!

தமிழகமே கொண்டாடும் இந்த அத்தி வரதர் யார்? இவரின் சிறப்புகள் என்ன?பலன்கள் என்ன?பார்க்கலாமா!

கடந்த மூன்று வாரமாக தமிழகம் முழுதும் பேசப்படுகிற ஒருவராக அத்தி வரதர் மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் இதனை அசுவாரஸ்யமாக கவனித்த மீடியாக்களும் திடீரென அத்தி வரதரைப் பற்றி எழுத கேமராவும் கையுமாக சென்றிருக்கின்றனர்.

தினமும் அத்தி வரதர் இந்த நிற பட்டாடை அணிந்திருந்தார் அந்த நிற மலர்மாலை அணிந்திருந்தார் என்கிற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துக் கொண்ட இந்த அத்தி வரதர் என்பவர் யார்? ஏன் அவரைக் காண இத்தனை அவசரமாக பக்தர்கள் செல்கின்றனர்?

கடவுள் இல்லை என்று சொல்லப்படும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட அத்தி வரதரை சந்தித்து ஆசி பெறுவது ஏன்? இப்போது தமிழகத்தின் சில இடங்களில் அத்தியால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலையை உருவாக்கி அதற்க்கு பூஜைகள் செய்து வருவது ஏன்? இத்தனை சிறப்பு இவருக்கு மட்டும் ஏன் ?

அவரை எப்படி வணங்க வேண்டும் ? ஏன் வணங்க வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? அவரை சென்று பார்க்க முடியாவிட்டால் தவறானதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை (special report) பதில் அளிக்கிறது.

ADVERTISEMENT

Youtube

40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து அருள் தரும் இறைவன் அத்தி வரதர். 48 நாட்கள் மட்டுமே இவர் மனிதர்கள் பார்வையில் இருப்பார். மனிதர்களுக்கு அருளை வழங்குவார். அதன் பின்னர் மீண்டும் குளத்திற்கு சென்று விடுவார்.

அத்தி வரதர் ஏன் குளத்தில் இருக்கிறார்?

ADVERTISEMENT

முக்தி தரும் 7 முக்கிய நகரங்களில் காஞ்சியும் ஒன்று. கோயில்கள் பல சூழ்ந்த நகரமான காஞ்சியில் அத்தி வரதரின் அருள் பார்வை தற்போது கிடைத்திருக்கிறது. ஒருமுறை ப்ரம்ம தேவன் அஸ்வமேத யாகம் ஒன்றை காஞ்சியில் நடத்த விரும்பினார். அந்த யாகமானது மஹாவிஷ்ணுவின் நன்மைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட யாகம்.

யாகங்களில் சிறந்த யாகம் அஸ்வமேத யாகம் என்பதுதான். ஊரையே இந்த யாகத்திற்கு தயார் செய்த பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதி இடம் இதனைப் பற்றி கூற மறந்து போனார். தனது மனைவியை யாகத்திற்கு அழைக்காததை பிரம்மன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஞானத்தின் கடவுளான பிரம்மனின் மனைவி சரஸ்வதிக்கு இதனால் கோபம் வந்தது.

அத்தி மரங்கள் சூழ்ந்த வனத்தில் இந்த யாகம் நடந்து கொண்டிருந்தது. கோபமுற்ற சரஸ்வதி வேதவதி எனும் ஆறாக உருவெடுத்து யாகம் நடந்து கொண்டிருந்த அத்தி வனத்தை நோக்கி வேகமாக வந்தார். வனத்தில் இருந்த உயிரினங்கள் எல்லாம் அச்சத்தில் நீரில் மூழ்கின. செய்வதறியாது பிரம்மன் விஷ்ணுவை உதவிக்கு அழைத்தார்.

ADVERTISEMENT

Youtube

அஸ்வமேத யாகத் தீயில் இருந்து அத்தி வரதர் எழுந்தருளினார். அத்தி வரதரின் வெப்பம் தாளாத சரஸ்வதி தனது திசையை மாற்றிக் கடலிடம் சரணடைந்தாள். அதன்பின்னர் அத்தி வரதர் பிரம்மனிடம் உன் யாகத்தை நான் காப்பாற்றி விட்டேன். ஆனால் யாகத்தின் வெப்பம் என்னை சுடுகிறது. என்னை நீரில் வைத்து என்னைக் காப்பாயாக என்று கேட்டுக் கொண்டார்.

அன்றில் இருந்துதான் அத்தி வரதர் நீருக்குள் இருந்தபடி உலகை ரட்சித்து வருகிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்தி வரதர் வெளியுலகிற்கு காட்சி அளித்து வேண்டும் வரங்களைத் தருகிறார். 48 நாட்கள் காட்சி அளிக்கும் அத்தி வரதர் முதல் 24 நாட்களில் சயன நிலையிலும் அடுத்த 24 நாட்களில் நின்ற கோலத்திலும் தரிசனம் தருகிறார்.

அத்தி வரதர் என்றால் அத்தி மரத்தில் செய்யப்பட்டவர் என்பது மட்டும் பொருள் அல்ல. அத்தி மரங்கள் நிறைந்த காஞ்சியில் அவதரித்த வரதர் என்றும் பொருள் உண்டு. வரதர் என்றால் வரங்களை அருள்பவர் என்று பொருள். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவர் வெளி வருவதால் மக்கள் கேட்கும் எல்லா விதமான வரங்களையும் நிறைவேற்றிய பின்னரே குளத்திற்குள் செல்கிறார்.

ADVERTISEMENT

ஒருவரின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்த இறைவனை தரிசிக்க முடியும். இதில் இரு சிலருக்கு மட்டுமே இருமுறை அல்லது மும்முறை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இப்போது காட்சி தந்து கொண்டிருக்கும் அத்தி வரதர் ஆகஸ்ட் 17ம் தேதிக்குப் பின்னர் குளத்திற்குள் சென்று விடுவார். அதன் பின் அவரை 2059ம் ஆண்டுதான் பார்க்க முடியும்.

 

Youtube

ADVERTISEMENT

ஒவ்வொரு ராசியினரும் அத்தி வரதரின் உடலின் ஒவ்வொரு பாகத்தை பார்த்து வழிபட அவர்கள் வாழ்வில் பலமடங்கு நன்மைகள் விளையும்.

மேஷ ராசிக்காரர்கள் இறைவன் அத்தி வரதரின் நெற்றி பாகத்தை பார்த்து வணங்க வேண்டும். அவரின் தீக்ஷை கிடைக்கும்.ரிஷப ராசிக்காரர்கள் அத்தி வரதரின் இரு கன்னங்களை கழுத்து வரை பார்த்து வணங்க வேண்டும். செல்வம் பெருகும் வசீகரம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்கள் பெருமாளின் காதில் இருந்து இடது அல்லது வலது தோளைப் பார்த்து வணங்க வேண்டும். தைர்யம், மதிப்பு மரியாதை குடும்ப ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.

கடக ராசிக்காரர்கள் பெருமாளின் அபய கரத்தை பார்த்து வணங்க வேண்டும். நினைத்தது நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். பணம் சேமிக்கும் திறன் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்கள் பெருமாளின் தாடை முதல் தொப்புள் வரை தரிசிக்க வேண்டும். பிரபலமடைதல் பேர் புகழ் அரசு வேலை ஆகியவை கிடைக்கும். கன்னி ராசிக்காரர்கள் வயிறு மற்றும் இடுப்பு பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும். திருமணம் கைகூடும். பிரார்த்தனைகள் பலிதமாகும்.

துலாம் ராசிக்காரர்கள் வரதரின் இடுப்பு முதல் தொடை முழங்கால் வரை பார்த்து வணங்க வேண்டும். அடிவயிறு பார்த்து வணங்குதல் நல்லது. தொழிலில் மேன்மை நடக்கும்.பயமற்ற உத்யோகம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் இறைவனின் பாதங்களை பார்ப்பது சனியின் ஆதிக்கத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும். திடீர் அதிர்ஷ்டம் நோயில் இருந்து விடுதலை ஆகியவை நடக்கும்.தனுசு ராசிக்காரர்கள் தொடைகளை வணங்க கணவன் மனைவி உறவு மேம்படும். தொழில் சிறக்கும்.

ADVERTISEMENT

மகர ராசிக்காரர்கள் வரதரின் நெற்றி மற்றும் முழங்கால்களை பார்த்து வணங்க வேண்டும். நோய்கள் நீங்கள். வேலை ஸ்திரமாகும். வேண்டும் வரங்களைத் தருவார்.கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் பாவங்கள் நீங்க முழுமையாக திருமேனியைத் தரிசிக்க வேண்டும். கணுக்கால் மற்றும் உதடுகளின் தரிசனம் உங்களை வம்பு வழக்கிலிருந்து விடுபட செய்யும். மீன ராசிக்காரர்கள் அத்தி வரதரின் கண்களை பார்த்து வணங்கிட யோகங்கள் பெருகும். அருமை பெருமையான வாழ்க்கை அமையும். பாதங்கள் உங்களுக்கு வண்டி வாகன யோகம் வழங்கும்.

12 ராசிகளில் உங்கள் ராசிக்கு ஏற்றபடி அத்தி வரதரை வழிபட 40 வருடங்களுக்கு ஒருமுறை வரம் தரும் இறைவன் நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் நிறைவேற்றுவார். மனதில் உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வங்களை நினைத்து அத்தி வரதரை வழிபடுவது நல்லது.

அத்தி வரதரை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள் பிரம்மன் வணங்கிய அத்தி வரதராஜ ப்ரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை அவரை டிவி அல்லது யூடியூப் மூலம் பார்த்து தங்கள் பிரார்த்தனை வைக்கலாம். தவறில்லை.

இறைவன் நம் நம் மனதில் இருந்து உருவாகும் ஆழமான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவர். காரணம் அவர் இருப்பதும் நம் இதயத்தில்தான். அதனால்தான் உணர்வுபூர்வமாக ஆழமாக வைக்கப்படும் எல்லா வேண்டுதலுக்கு பதில் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

அத்தி வரதரின் அருள் அனைவருக்கும் கிடைக்க என் வேண்டுதல்கள்.

கோயிலுக்கு செல்லும் வழி, தரிசனம் மற்ற விபரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

 

 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

06 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT