logo
Logo
User
home / Astrology
யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் ?

யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் ?

இன்று திங்கள் கிழமை நவமி திதி கார்த்திகை நட்சத்திரம் தை மாதம் 20ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்               

மேஷம்

உங்களது உணர்வுகளை தெளிவாகவும் அதே சமயம் மென்மையாகவும் வெளிப்படுத்துங்கள். மற்றவரைக் காயப்படுத்தி விடுவோமா என்கிற பயத்தில் நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை மற்றவரும் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

ரிஷபம்

உங்கள் மனதுக்கு தெரியும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. ஆனால் உங்கள் மீதே உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறது.உங்கள் காரண அறிவை பயன்படுத்தாமல் உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கடைபிடியுங்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள். தைரியமாக முடிவெடுக்க உங்கள் உள் குரலை கேளுங்கள்.

மிதுனம்

மற்ற மனிதர்களின் வார்த்தைகளை விட்டு விட்டு அவர்களது உடல் மொழியை கவனியுங்கள். சில சமயம் சொல்வது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட வேண்டாம். நன்கு ஆராய்ந்த பிறகு முடிவெடுங்கள். உண்மைகளைக் கண்டறியுங்கள்.

கடகம்

உங்கள் அடி மனதில் ஆழத்தில் உங்களை குணப்படுத்துதல் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால் அது தீர்வதற்கான அறிகுறிகள் வரலாம். சீக்கிரமாக குணமாவீர்கள். உங்கள் எமோஷனல் பக்கங்களும் குணமாகும். ஆரோக்கியம் , பொருளாதாரம் என எல்லா விதத்திலும் நீங்கள் குணமாவீர்கள்.

சிம்மம்

தேவதைகள் உங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை இப்போது அளிக்கும் நேரம் இது. நீங்கள் இதற்கான அறிகுறிகளை பாடல்கள், துண்டு பிரசுரங்கள் கனவுகள் மூலம் பெறுவீர்கள். உங்கள் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு வார்த்தை மற்றும் உருவங்களை நீங்கள் நன்றாக கவனியுங்கள். தேவதைகள் உங்களுக்கு வெவ்வேறு விதங்களில் தகவல் அனுப்பலாம். கவனம்.

கன்னி

ப்ரியம் உங்களை பல்வேறு விதங்களில் வந்தடையும். அது உங்கள் வேலை செய்யும் இடத்தில இருந்து வரும் நல்ல சேதியாக வரலாம் அல்லது அல்லது உங்கள் வாழ்வின் காதலை நீங்கள் கண்டடையலாம். நீங்கள் ப்ரியத்தோடு முழுமையாக இருக்க வேண்டிய ஒரு நாள் இது.

துலாம்

இன்று நீங்கள் எமோஷனல் ஆகவும் சென்சிடிவ் ஆகவும் இருப்பீர்கள். உங்கள் எமோஷனல் பக்கத்தை ஏற்று கொள்ளுங்கள். அது பற்றி கூச்சப்பட வேண்டாம். நீங்கள் அருகில் இருக்கும் ஏதாவது ஒன்றை நேசிக்கலாம். அக்கறை செலுத்தலாம். உங்களுக்கு அருகே ஒரு செடியை வளர்த்துங்கள். அது உங்கள் உணர்வுகளை உயர்த்தும்.

விருச்சிகம்

நீங்கள் தேடும் பதில்கள் எல்லாம் உங்கள் இடத்தில் தான் இருக்கிறது. கொடுக்கவும் வாங்கவும் திறந்த மனதோடு இருங்கள். ஒரு சிலர் பரிசோ பரம்பரை சொத்தையோ பெறலாம். ஒரு சிலர் அவர்களது கனவுகள் மற்றும் இலக்குகளை அடையலாம். பேரருளைப் பெற தயாராக இருங்கள்.

தனுசு

மோசமான வார்த்தைகள் மற்றும் எதிர்மறை விமர்சனங்களில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள், உங்களை கீழே தள்ளும் அல்லது கையாள நினைக்கும் ஆட்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்களுடைய கெட்ட சக்தி உங்களை வறண்டு விட செய்யலாம். அது உங்கள் உற்பத்தி திறன் மற்றும் படைப்புத் திறனை குறைத்து விடலாம்.

மகரம்

அடுத்தவர்களுக்காக எப்போதும் காத்திருங்கள். உங்களிடம் ஒருவர் உதவி கேட்கலாம். பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்யும் ஒருவருக்கு இந்த பிரபஞ்சம் பேரருளை அள்ளிக் கொடுக்கும். சரியான மனிதர்களை சரியான வாய்ப்புகளை உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

கும்பம்

மனதில் உள்ள அத்தனை கவலைகளையும் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அதனை நீங்களே படித்து விட்டு ” நான் இதனை எல்லாம் சரி செய்வேன் ” என்று சத்தமாக கூறுங்கள். அதன் பின் அந்தக் காகிதத்தை கிழித்து வீசி விடுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு தேவையானவை என்னென்ன என்பதை ஒரு மஞ்சள் காகிதத்தில் சிவப்பு மையால் எழுதி ஒரு நல்ல பெட்டியில் அதனைப் பூட்டி வையுங்கள்.

மீனம்

ஆரோக்யமானதை சாப்பிட்டு உங்கள் உடல்நலனை கவனியுங்கள். அதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் உங்கள் உடல்நலனை பாதிக்கலாம். நச்சுக்களை நீக்கும் டயட் ஒன்றை நீங்கள் பின்பற்றுங்கள். எதிர்மறை எண்ணங்களையும் சேர்த்தே நீக்குங்கள். உங்கள் மனமும் உடலும் பரிசுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.        

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!அறிமுகமாகிறது

#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

31 Jan 2020

Read More

read more articles like this
good points logo

good points text