logo
Logo
User
home / Astrology
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்

தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்

இன்று சனிக்கிழமை சப்தமி திதி அஸ்வினி நட்சத்திரம் தை மாதம் 18ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்

மேஷம்

பயப்படாமல் நம்பிக்கையோடு முன்னேறுங்கள். ரிஸ்க் எடுக்க பயந்து முன்னேறாமல் இருந்தால் இப்போது இருப்பது போன்ற அதே வாழ்கையத்தைத்தான் வாழ முடியும். உங்கள் பயத்தையும் சந்தேகத்தையும் துறந்து உங்கள் சௌகர்ய இடத்தில இருந்து நகர்ந்து வந்தால் சிறப்பானவை உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷபம்

நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்களோ அதில் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் முதலடியை எடுத்து வைத்தால் வாய்ப்புகள் குவிவதை உங்களால் உணர முடியும். இது உங்களை முன்னே நகர்த்த உதவி செய்யும். தீவிர முயற்சியை கையில் எடுக்கவும்.

மிதுனம்

உங்கள் மனதில் உள்ள குற்ற உணர்ச்சி , கோபம் மற்றும் வருத்தங்களை வெளியே கொட்டி விடுங்கள். முகமூடி அணியாமல் நிஜமாக இருங்கள். இது நடுநிலையாக இருக்க வேண்டிய நேரமல்ல ஆகவே உங்கள் தொடர்புகள் மற்றும் மற்றவர்களோடு கலந்து பேசுகையில் கவனமாக இருங்கள்.

கடகம்

நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செயல்படுத்துங்கள். உங்கள் அம்மாவின் உறவில் ஒருவர் உங்களுக்கு உதவுவார். தவறு செய்வது சகஜம் என்பதை உணர்வீர்கள். தோல்வி வந்தால் பரவாயில்லை தான் ஆனால் அதற்காக இலக்குகளை கைவிடாதீர்கள்.

சிம்மம்

வித்யாசமான கோணங்களில் விஷயத்தை பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். உயர்ந்த நோக்கங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவி செய்யும். எல்லைகளை வரையாமல் பார்வையை அகலப்படுத்துங்கள். வாய்ப்புகள் உங்கள் வசம்.

கன்னி

உங்களால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக எல்லா விஷயங்களையும் செய்யுங்கள். உங்கள் எல்லைகளைத் தாண்டி நகருங்கள். நீங்கள் ஆச்சர்யப்படும் வகையிலான வாழ்க்கை காத்திருக்கிறது. தீர்மானத்தோடும் அர்ப்பணிப்போடும் உங்கள் வேலைகளை செய்யுங்கள்.

துலாம்

காரணமே இல்லாமல் சலிப்படைவீர்கள் அல்லது தொலைந்தது போலவோ குழப்பமாகவோ உணர்வீர்கள். இது உங்கள் சக்தி வீணாக விரயம் ஆனதுதான் காரணம். அவற்றை சேகரியுங்கள். இயற்கையோடு ஒன்றாகி அதன் சக்திகளை உள்வாங்குங்கள்.

விருச்சிகம்

உங்கள் சக்தியை திரும்ப பெறும் நேரம் இது. தேவதைகள் மற்றும் நல்ல ஆன்மாக்களிடம் இருந்து உதவிகளை பெறுங்கள். பிரபஞ்சமும் தேவதைகளும் ஒன்றாக உங்களை சேரும் நேரம் இது. உங்கள் கனவுகள் விருப்பங்கள் என எல்லாம் பூர்த்தியாகும் நேரம். ஆனால் உங்கள் முயற்சியும் தேவை.

தனுசு

இது உங்கள் சுய சந்தோஷத்துக்காக வேலை செய்யக்கூடிய பாசிட்டிவ் தருணமாகும். நீங்கள் எதிர்கொள்ள தயாராக காத்திருக்கும் வாழ்க்கைக்கு பின்னே அமைதி, நிம்மதி, ஆனந்தம் பேரருள் ஆகியவை நிறைந்து கிடக்கின்றன. காதலோடும் ஆர்வத்தோடும் பணியாற்றுங்கள். இது உங்களுக்கு சந்தோஷம் மற்றும் நேர்மறையை தரும்.

மகரம்

உங்கள் தாத்தா பாட்டி அப்பா அம்மா அனைவரும் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கும் உங்கள் எல்லைகளை தகர்த்தெறியுங்கள். பரம்பரையாக கடைபிடித்த வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. பழைய நம்பிக்கைகளையும் பயங்களையும் தகர்த்தெறியுங்கள்.

கும்பம்

காதலை வரவேற்க திறந்த மனதோடு இருங்கள். நீங்கள் நேசிக்க கூடியவர். மற்றவரை நேசிக்கவும் உங்களை மற்றவர் நேசிக்கவும் தகுதியானவர். பழையதை நினைத்து வருத்தப்படாதீர்கள். பழைய காதலை விட்டு நகர்ந்து வாருங்கள்.

மீனம்

உங்கள் தேவைகளை நீங்கள் உங்கள் தற்காப்பாக பயன்படுத்துவதை தவிருங்கள். வெளிப்படையாக மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள். இது சரி செய்வதற்கான நேரம். நல்லிணக்கத்தை நாடுங்கள். அமைதி மற்றும் ஆனந்தம் உங்களை நாடி வரும்.

 

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

31 Jan 2020

Read More

read more articles like this
good points logo

good points text