logo
Logo
User
home / Astrology
இன்று துணிச்சலாக முடிவு எடுக்கும் நான்கு ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று துணிச்சலாக முடிவு எடுக்கும் நான்கு ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று புதன் கிழமை சதுர்த்தி திதி பூரட்டாதி நட்சத்திரம். தை மாதம் 15ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம் 

மகிழ்ச்சி தரும் நாள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். லுவலகத்தில் உற்சாக மான சூழ்நிலை மனதுக்கு மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம் 

எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்னைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம் 

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தனவரவு உண்டு இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணம் உண்டு. எடுக்கும் காரியங்கள் நன்மையில் முடியும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

நீங்கள் நேசிப்பவர் உங்களுக்கானவர்தானா.. இல்லை பிற்பாடு மாறிவிடுவாரா ?

கடகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக் கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

சிம்மம் 

அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செயல்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புது தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள் இனிமையான நாள்.

கன்னி 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

youtube

துலாம் 

குழந்தைகளால் மனக்கவலை உண்டாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே உறவு நிலை சீராக இருந்துவரும் பேச்சுவார்த்தையில் சற்று கவனம் கொள்வது நல்லது பற்றாக்குறை இருந்து வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.  பேச்சில் நிதானம் தேவை. வாகன வகையிலும் சொத்து வகையிலும் ஆதாயம் உண்டு.

விருச்சிகம் 

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால் பொறுமை அவசியம். கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..

தனுசு 

புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகி விடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம் உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம் 

நண்பர்களுக்கு குடும்ப உறவு மேம்படும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகம். இருந்தாலும் வேலையில் நிம்மதி கிடைக்கும். சற்று அலைச்சலுடன் கூடியதாக இருந்தாலும் சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் தேடி வரும். 

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

மீனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                     

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!   

28 Jan 2020

Read More

read more articles like this
good points logo

good points text