இன்று சனிக்கிழமை நவமி திதி ரேவதி நட்சத்திரம் மார்கழி மாதம் 19ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே மகிழ்வான மனநிலை உங்கள் நாளை அலங்கரிக்கும். உங்கள் குடும்பம் இன்றைக்கு மிக நிம்மதியாக இருக்கும். அதே சமயம் உங்கள் அதிகப்படியான ஆளுமை உணர்வால் அவர்கள் சந்தோஷத்தை கேள்விக்குறியாக்காமல் இருங்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே அதிகமான வாக்குவாதங்கள் உங்கள் வாழ்வை காவு வாங்கலாம். எளிதாக ஆரம்பித்தாலும் இறுதியில் கசப்புகளில் முடியும் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.பணியிடத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே நாள் நன்றாக இருக்கிறது. அதனால் உங்கள் நல்ல பழக்கவழக்கங்களை தொடருங்கள். கிரக நிலை கொஞ்சம்தான் சரியாகி இருக்கிறது. அதனால் செய்யும் பணிகளில் முழுக்கவனமும் அர்ப்பணிப்பும் அவசியம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே கவனகுறைவு காரணமாக சில இழப்புகள் ஏற்படலாம். இதனை தோற்கடிக்க நீங்கள் த்யானம் யோகா போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். முதலீடுகளை பிரித்து போடுவது லாபத்திற்கு வழிவகுக்கும்.
சிம்மம் :
சிம்ம ராசி நேயர்களே நிலுவை பணிகள் எல்லாம் தீர்வுக்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரிப்பது வாழ்க்கைக்கு நன்மை தரும். குடும்பத்தில் குழப்பங்கள் இல்லாமல் இருக்க பொறுமையை கடைபிடிக்கவும். நேசிக்கும் நபரிடம் நேசத்தை கூறி விடுங்கள்.
கன்னி :
தாயின் மனம் கோணாமல் நடப்பதால் தேவதைகளின் ஆசிர்வாதம் கிடைக்கும். எடுத்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் கூடுதல் உழைப்பும் அவசியமாகும். ஆரோக்கியம் சிறக்கும்.
துலாம் :
துலா ராசி நேயர்களே இவ்வளவு காலமாக மனத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாட்டு வியாபாரங்கள் நல்ல செய்தி கொண்டு வரும். புதிய சொத்து சேர்க்கை வரும் வாய்ப்பிருக்கிறது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே குடும்ப உறுப்பினர்கள் உங்களை மகிழ்விப்பார்கள் . பெரியோர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.வேலை நிமித்தம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அமைதியாக இருக்க வேண்டும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே எதிர்பாராத பணவரவு ஏற்படும். பிரிந்து சென்ற உறவுகளை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யலாம்.
மகரம் :
மகர ராசி நேயர்களே வியாபார லாபங்கள் அமோகமாக நடக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் அனுசரணை உங்களை நிம்மதியாக்கும். உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். பயணம் செல்லும் வாய்ப்பிருக்கிறது.
கும்பம் :
கும்ப ராசி நேயர்களே இன்று நாள் மெதுவாக நகரும். காரணம் நீங்கள் சோம்பலாக இருக்கிறீர்கள். இதனால் சில தடைகள் தாமதங்கள் ஏற்படும். விவாதங்களில் எச்சரிக்கை வேண்டும். விடாமல் முயற்சி செய்வது நற்பலன் தரலாம்.
மீனம் :
மீன ராசி நேயர்களே நட்சத்திரங்களின் சேர்க்கை நன்றாக இல்லை. அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். உணவில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.ஒரு முக்கியமான முடிவினை பற்றி கவலை கொள்வீர்கள். மன அழுத்தம் காரணமாக அசிடிட்டி ஏற்படும்.
predicted by astro asha shah
உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி
கவனிக்க கூட யாருமற்ற நிலையில் நடிகை ஷர்மிளா.. அரசு மருத்துவமனையில் அனுமதிப்பு
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!