இன்று வியாழக்கிழமை ஸ்வாதி நட்சத்திரம் தசமி திதி ஆனி மாதம் 26ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
நீங்கள் ஒரு சமயத்தில் ஒருவேலையை மட்டுமே கவனிக்க வேண்டும். எந்த செயலையும் செய்யாமல் அதைப்பற்றி வெறுமனே சிந்தித்து கொண்டிருப்பது உங்களை வேறெங்கும் கொண்டு போய் சேர்க்காது. உடன் பணிபுரிபவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடலாம். பொறுப்புகளை எடுத்து கொள்ளுங்கள். சமநிலை உணவுகளில் கவனம் வையுங்கள்.நண்பர்களால் குடும்ப உறுப்பினர் ஒருவரை ஏமாற்றமடைய செய்வீர்கள்.
ரிஷபம்
வேலை நிலையாக இருக்கும். நீங்கள் புது டீல் அல்லது காண்ட்ராக்ட் அல்லது புது ஆர்டர்களை பெறுவீர்கள்.பொருளாதார விஷயங்களை ஒழுங்கு படுத்தி கொள்ளுங்கள். சமூக உறவுகள் அழைத்தாலும் குடும்பம் காரணமாக அவற்றை நிராகரிப்பீர்கள்.
மிதுனம்
வேலை நிலையானதாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை காரணமாக வருத்தப்படுவீர்கள். நிலுவையில் உள்ள வரவுகளை பெற முயற்சிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களுடன் உரசல் மற்றும் பழிகளை தவிருங்கள்.உங்கள் தொண்டையையும் வயிற்றையும் கவனித்து கொள்ளுங்கள். அலுவலக நண்பர்களோடு நேரம் செலவழியுங்கள்.
கடகம்
வேலை முன்னோக்கி செல்லும்.புதிய பணி அல்லது பதவியை தேடுபவர்களுக்கு இது நல்ல நாள்.கிரியேட்டிவ் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு இது வளமான காலம். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குடும்பம் உடன் இருக்க முடியாததால் தவறான உணவுகளை தவிருங்கள்
சிம்மம்
வேலை வேகம் எடுக்கும். உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.உங்களுக்கு புது ஐடியாக்கள் கிடைத்து அதனை நேர்படுத்துவீர்கள்.உடன் இருப்பவர் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகளை தவிர்க்கவும். உங்கள் குடும்பம் நிதானமாக நடக்கும்.உங்களுக்கு விருப்பமானவர்கள் மற்றும் துணையுடன் நேரம் செலவழிப்பீர்கள். சமூக உறவுகள் நெருக்கடி தரலாம்.
கன்னி
வேலை நிலையாக இருக்கும். உங்கள் மூத்த அதிகாரிகள் அதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள். புதிய பொறுப்புகள் அல்லது புதிய வேலைகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் சொந்த வாழ்க்கையை அலுவலக ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப நாடகம் தொடரும்.நண்பர்களுடன் இன்றைய மாலையை கொண்டாடுங்கள்.
pixabay
துலாம்
வேலை பயனுள்ளதாக ஆரம்பித்தாலும் சக பணியாளர்களால் வேகத்தை இழக்கும். நிலுவை வேலைகள் இழுத்தடிக்கும். அதிக ஸ்ட்ரைன் இல்லாமல் அதன் போக்கில் விடுங்கள்.பண விஷயமாக எந்த முடிவும் இன்று எடுக்க வேண்டாம். குடும்பம் உங்கள் கவனிப்பை தேடும். நீங்கள் ஒருவரை காயப்படுத்தியதால் இந்த நிலை.வெளியில் செல்வதை விட வீட்டில் அமர்ந்து உரசல்களை தவிர்ப்பது எப்படி என்று யோசிப்பது நல்லது.
விருச்சிகம்
வேலை நிலையாக இருந்தாலும் காகித வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் நடுவே மூன்றாம் மனிதர் பிரச்னைகளை உருவாக்கலாம். உண்மை வெளியே வரும். இந்த அழுத்தங்களை வீட்டுக்கு எடுத்து போக வேண்டாம். மற்றவர்களை சந்திப்பதில் உங்களுக்கு விருப்பம் இருக்காது
தனுசு
வேலை நிலையாக இருக்கும் ஆனாலும் நிலுவை பண வசூலில் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கு சிக்கல் வரலாம். ஆத்திரத்தை விட பணம் உங்களுடையது என்கிற எண்ணம் அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் துணை வீட்டில் பிரச்னை ஏற்படுத்தலாம். உங்கள் கவனிப்பை தேடலாம். எமோஷனல் ப்ளேக் மெயில்களை தவிருங்கள். நண்பர்களிடம் உதவி கேளுங்கள்.
மகரம்
வேலை நிறைவாக இருக்கும்.நிலுவையில் இருக்கும் எல்லா வேலைகளையும் சரி செய்வீர்கள்.பணியில் புதிய முன்னேற்றங்களை தருவீர்கள். உங்கள் ஐடியாக்கள் மற்றவர்கள் ஏற்று கொள்ளுமாறு செய்வீர்கள். பழைய வேலைக்கான அங்கீகாரம் இப்போது கிடைக்கலாம். குடும்பமும் நண்பர்களும் உங்களை கண்டு மகிழ்வார்கள்.
கும்பம்
நிறைய கவனம் செலுத்த வேண்டும். அதிக திட்டங்கள் வைத்திருந்தாலும் உங்களால் செயல்படுத்த முடியாமல் போவதை தவிர்க்க இது உதவும்.கண்களை அதிக சிரமம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.தோழமை ஒருவர் புறக்கணிக்க பட்டதாக உணரலாம். ஆனாலும் பேசி புரிய வைப்பீர்கள்.
மீனம்
பணியில் நல்ல விஷயங்கள் நடந்தாலும் நீங்கள் மன ரீதியாக குறைவாக உணர்வீர்கள். கெட்டதை நினைத்து கவலைப்படுவீர்கள் அல்லது உங்கள் சுய பாதுகாப்பின்மையை நினைத்து பயப்படுவீர்கள்.குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் அவ்வப்போது நீங்கள் விளிம்பில் இருக்கிறீர்கள் என்பதால் தாமதமாக குடும்ப விஷயங்களை செட்டில் செய்வீர்கள்.மற்றவர்களை சந்திக்க விரும்ப மாட்டீர்கள்.
ஜோதிட பலனை கணித்தவர் astro ஆஷா ஷா astro
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.