ஆர்யா(arya) சாயிஷா இருவரும் காதலர் தினத்தில் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மார்ச் 10ம் தேதி இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டனர்.
திருமணம் முடித்த கையோடு மார்ச் 14ம் தேதி தமிழ்நாட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆர்யா(arya)-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 14ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது இருவரும் தேனிலவு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சாயிஷா பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கும் சாயிஷாவை ஆர்யா(arya) புகைப்படம் எடுத்துள்ளார்.
Soaking in the sun with my love! ☀️
Pic courtesy- Husband @arya_offl 😘😘😘#honeymoon pic.twitter.com/FNjYBVG3eY— Sayyeshaa (@sayyeshaa) March 21, 2019
நல்ல சூரிய ஒளியில் ஆர்யாவின்(arya) அன்பில் மூழ்கி இருப்பதாக சாயிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேனிலவு புகைப்படம் வைரலாகும் இந்த தருணத்தில் பலர் அபர்ணதிக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளனர். அபர்ணதியும் தற்போது திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது கூடுதல் தகவல்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஆர்யா(arya) – சாயிஷா இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது திருமணத்துக்கு பிறகும் ஆர்யா – சாயிஷா இருவரும் ஜோடி சேரவுள்ளனர். ‘டெடி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, சக்தி சவுந்தர்ராஜன் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியானது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் ஆர்யாவுடன் கரடி ஒன்றும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷாவிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஒரு வேலை அபர்ணதியும் சாயிஷாவும் ஒரே படத்தில் ஆர்யாவுடன்(arya) நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும் ஆர்யா(arya) நிலைமை தான் பாவம்!.
ஆர்யா(arya) திருமணம் முடிந்து தேனிலவிற்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஆனால் அபர்ணதி இன்னும் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஆர்யாவுடனாக பெயரை நீக்காமல் அபர்ணதி ஆர்யா என வைத்துள்ளார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
The love of my life and my happily ever after…my husband! @arya_offl pic.twitter.com/j9iEfUs839
— Sayyeshaa (@sayyeshaa) March 11, 2019
Super happy to join the amazing team of #Yuvarathnaa 💃
Can’t wait to share screen space with @PuneethRajkumar sir under the direction of @SanthoshAnand15 sir! Thank you @hombalefilms for my exciting Kannada debut! pic.twitter.com/pl33UTeiQv— Sayyeshaa (@sayyeshaa) February 25, 2019