logo
ADVERTISEMENT
home / Bollywood
அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!

அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!

எமி ஜாக்சன் சினிமா நடிகைகளில் வித்தியாசமானவர். மற்ற நடிகைகள் எல்லாம் திருமணம் செய்தால் மார்க்கெட் போய்விடும் என்று பயந்து திருமணம் செய்யாமல் இருப்பதும் திருமணம் ஆனாலும் குழந்தை பெற்றுக் கொள்ள தாமதிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் எமி ஜாக்சனோ காதலில் இருக்கும் போதே கர்ப்பம் ஆனார். அதனை ரகசியமாக வைக்காமல் உலகம் முழுக்க தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பம் ஆனவர் என்கிற விஷயத்தை மறைக்காமல் உலகிற்கும் சொன்னார்.

தமிழில் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன் (amy jackson) . லண்டன் பூர்விகமாக இருந்தாலும் எமியின் முகலக்ஷணம் அவரை இந்திய நடிகையாக்கியத்தில் பெரிய ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை. அதன் பின்னர் விஜய் உடன் ‘தெறி’, விக்ரம் உடன் ‘ஐ’ என முக்கியமான பல படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

மேலும் படிக்க – மகன் அத்வைதின் புகைப்படங்களை வெளியிட்ட சுஜா வருணி.

ADVERTISEMENT

Youtube

பாலிவுட் (bollywood) இவரை அன்புடன் வரவேற்க அங்கு சென்று சில இந்திப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் லண்டன் தொழிலதிபரான ஜார்ஜ் பெனாய்டோ மீது காதல் வயப்பட்டார். இதனையும் சமூக வலைத்தளம் மூலம் சகஜமாக பகிர்ந்து கொண்டார். காதல் வயப்பட்டிருக்கும்போதே கர்ப்பமும் ஆகிவிட்ட எமி ஜாக்சன் அதனையும் மறைக்க விரும்பவில்லை.

தன்னுடைய ரசிகர்களுக்கு உண்மையாக இருக்கும் எமி ஜாக்சன் அதனையும் மிக சந்தோஷமாகவே பதிவிட்டார். அதன் பின்னர் இவரது காதல் கணவர் ஜார்ஜ் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது. சில மாதங்களிலேயே எமி ஜாக்சன் வழக்கப்படி பேபி ஷவரும் நடந்தது. (அதாங்க நம்ம ஊர் வளைகாப்பு).

ADVERTISEMENT

அதன் பின்னர் தான் ஒரு நடிகை, தன்னுடைய வளைவுகள் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தாலும் கர்ப்பமான வயிற்றுடன் தொடர்ந்து தன்னுடைய குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பல புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

மேலும் படிக்க – அப்பா நடிக்கறதை நிறுத்தணும்னு அம்மா ப்ரே பண்ணுவாங்க..விக்ரம் மகன் த்ருவ் வெளியிட்ட ரகசியம்

Youtube

ADVERTISEMENT

குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் எமி ஜாக்சன். தாய்மையின் முழு வடிவமாக தன்னை மாற்றிக் கொண்ட எமி ஜாக்சனின் மேற்கூறிய புகைப்படங்கள் பெரும் வைரலானது.

அதைப் போலவே தற்போது தன்னுடைய மகன் ஆண்ட்ரியாஸ் (andreas) உடன் எமி தாய்மையோடு இருக்கும் ஒரு தருணத்தை புகைப்படமாக பிடித்து அதனையும் வெளியிட்டிருக்கிறார். அதே சமயம் அம்மா ஆன பிறகும் தன்னுடைய பிட்னஸ் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.                                                                                                                                                   

 

ADVERTISEMENT

Youtube

மகன் ஆண்ட்ரியாஸ் இருக்கும் இந்தப் புதிய புகைப்படத்தில் ஆண்ட்ரியாஸ் பார்க்க அம்மா ஜாடையில் அதே வட்ட வடிவ முகம் திருத்தமான மூக்கு அழகான உதடுகள் பளிச்சிடும் கண்கள் என அத்தனை அழகாக அம்மாவை உரித்து வைத்திருக்கும் ஜாடையில் இருக்கிறார். ஆனாலும் வளரும்போது முகஜாடை மாறலாம்.

அம்மா எமி மற்றும் மகன் ஆண்ட்ரியாஸ் (baby) இருவரும் ஒரே ஆடையில் இருக்கும் புகைப்படத்தை போட்டு என் வாழ்வின் வெளிச்சம் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் எமி ஜாக்சன். உண்மைதான்.. ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தங்களது குழந்தைதான் வாழ்வின் வெளிச்சமே!

 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT