ஐஸ்வர்யா ராய் பச்சன் படங்களில் அதிகம் தோன்றுவதில்லை என்றாலும், விளம்பர படங்களிலும் மற்றும் பல முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவர் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் அவர் கத்தார் ஷோ – 2019 இல் கலந்து கொண்டபோது, ஒரு திகைப்பூட்டும் சிவப்பு நிறத்தில் லெஹெங்கா அணிந்திருந்தார். இதை அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார்! அதை பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஐஸ்வர்யா ராய் யின் அழகின் மீது காதல் வசப்படுவீர்கள். ஆஹா! என்ன அழகு.. என்ற அளவிற்கு அந்த புகைப்படங்கள் அவ்வளவு அழகாய் அமைத்திருக்கிறது.
ஒரு அழகான நீல கடல் பின்னணியுடன், சூரியனின் பிரகாசத்தில் , இன்னும் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் ஒரு பளிச்சிடும் சிவப்பு லெஹெங்காவில் அவர் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம் . இந்த தோற்றத்தை மிக அற்புதமாக பிடித்திருக்கிறார் புகைப்பட நிபுணர்.
இந்த தோற்றத்தில் நாம் பார்க்கவேண்டியது —
1. அழகிய ஸ்மோக்கி கண்கள் –
ஐஸ்வர்யாவை போல ஒரு பழுப்பு நிற ஸ்மோக்கி கண்களை பெற நீங்கள் ஏதேனும் ஒரு பழுப்பு நிற ஐ ஷாடோவை பயன்படுத்தலாம் . அதற்க்கு மேல் கருப்பு நிறத்துடன் ப்ளேன்ட் செய்யுங்கள். தேவைப்பட்டால் கண்களின் நுனிகளில் கொஞ்சம் க்ளிட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
POPxo பரிந்துரைக்கிறது – லோ ரியல் பாரிஸ் ஸ்மோக்கி ஐ ஷாடோ (Rs.750)
2. நுட் அல்லது இலகுவான லிப்ஸ்டிக் –
இதுபோல் ஒரு பளிச்சிடும் ஆடைக்கு ஏற்ற ஒரு இலகுவான லிப்ஸ்டிக்கை பூசுவதில் உங்கள் ஆடையை இன்னும் முன்வைக்க உதவும். இதில் நீங்கள் லிப் க்ளாஸ் அல்லது மேட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
POPxo பரிந்துரைக்கிறது – லாக்மி டு மேட் மூஸ் லிப்ஸ்டிக் (Rs.500)
3. ஜொலிக்கும் சிவப்பு ஆடை –
இது நாட்டின் சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவரான மனீஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை. இதுபோன்ற சிவப்பில் ஒரு ஆடை நம் வட்ராப்பில் இருக்கவேண்டும். ஏனென்றால் இது உங்கள் விசேஷ நாட்களில் உங்களை மிகவும் அற்புதமாக காட்டக்கூடிய ஒரு நிறம்.எங்களுக்கு அவர் அணிந்ததில் பிடித்த மற்ற சிவப்பு (red) நிற ஆடைகள் / தோற்றங்களில் இருந்து உங்களுக்காக –
இது ஒரு மாடர்ன் பெண்மணிக்கான தோற்றம்!
இது பாரம்பரியத்தை காண்பிக்க!
4.அந்த மினுக்கும் ஜிம்மிகி கம்மல் –
அணிகலன்கள் எப்போதும் உங்கள் தோற்றத்தை இன்னும் அழகாக காட்டும் ஒரு பொருள். ஐஸ்வர்யா அணிந்திருக்கும் ஜிம்மிகியை போல ஒரு பெரிய ஜிம்மிகி உங்கள் சிவப்பு அடைக்கு மேலும் அழகு சேர்த்து ஒரு பண்டிகை, விழாக்கால , பார்ட்டி என்று அதன் அடையாளத்தை முன்வைக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது – ஜிமிக்கி கம்மல்
படங்களில் ஐஸ்வர்யா ராய் (aishwarya rai) ஹிந்தியில் ‘ஃபண்ணே கான் ‘ எனும் படத்தில் நடித்திருந்தார். தமிழில், அடுத்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவர் ஒரு பேரழகி என்று அவரின் ஒரு ஒரு தோற்றத்திலும் நிரூபிக்க பட்டுள்ளது. அன்றும்..இன்றும்..என்றும்..இந்த ஜீன்ஸ் பட கதாநாயகி நம் அனைவரின் உள்ளதை கவர்ந்த அழகி தான்!
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.