KhayalRakhna By Philips
  Power Women List

  Advertisement

  Celebrity Life

  25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!

  Swathi SubramanianSwathi Subramanian  |  Jan 27, 2020
  25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!

  Advertisement

  சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். 

  இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய  போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.

  இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் 

  twitter

  ஆனால் வரலட்சுமி (varalaxmi) அதனை பெற்றார். இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.  

  பின்னர் விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. 

  இவர் நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படம் விரைவில் வெளியாக உள்ளது.  இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், இதுவொரு நீண்ட கடினமான பயணம். 

  ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி… ரசிகர்கள் மகிழ்ச்சி!

  நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. ஆனால் கண்டிப்பாக கனவுகள் ஒருநாள் நிஜமாகும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். 

  இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்து உள்ளேன். இப்போது நான் 25 படங்களில் நடித்து முடித்துள்ளேன் என்பதே பெரிய அளவு கோலாக (varalaxmi) எனக்கு தெரிகிறது.

  twitter

  என்ன நடந்தாலும் என்னுடன் நின்று என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் என்னை இன்னும் வலிமை ஆக்கியது. 

  உங்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதமாக என்னை நிற்க வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. என் மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என் அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 

  இணையத்தை கலக்கும் நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்!

  நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றியென என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். என் நல்லது கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த எனது ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கும் என் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 

   

  twitter

  25 படங்களை முடித்ததை நான் ஆசிர்வாதமாக உணர்கிறேன். என்னுடன் இருந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் நன்றி. என்றும் என் பணியில் சிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர அர்ப்பணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.  

  குறுகிய காலத்திலேயே 25 படங்களில் வெற்றிகரமாக நடித்துள்ளதை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரலட்சுமி சரத்குமார் (varalaxmi) இதனை தெரிவித்திருக்கிறார்.

  நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!