நடிகை சந்தியா (sandhya) இயக்குனர் பாலாஜி சக்திவேல் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர். பள்ளிக்கு செல்லும் போதே நடிக்க வந்த சிறுமியான நடிகை சந்தியா ஸ்கூல் பஸ்சுக்காக பஸ் ஸ்டேண்டில் காத்திருந்த போது இயக்குனர் பாலாஜி சக்திவேலின் கண்களில் பட்டு நடிகையானார்.
தன்னுடைய முதல் படமான “காதல்” திரைப்படம் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த சந்தியா.. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தாலும் கதை தேர்வில் அவர் தெளிவாக இல்லாததால் ஓரங்கட்டப்பட்ட நடிகைகளில் ஒருவரானார்.
பெரும்பான்மையான திரைப்படங்களில் காதல் படத்தில் நடித்த நடிகர் பரத்துடன் இவர் இணைந்து நடித்திருந்ததால் கிசுகிசுக்களுக்கும் ஆளானார்.
Youtube
அதனால் இனி சினிமாவே (cinema) வேண்டாம் என்று ஒதுங்கி சென்னையை சேர்ந்த சந்திரசேகரை மணம் முடித்தார். வழக்கமான நாயகிகள் செய்வதுதான் என்றாலும் சந்தியாவிற்கு எல்லாமே சீக்கிரமே நடந்து விட்டது. திருமணமான முதல் வருடமே முதல் குழந்தையை பெற்றெடுத்த சந்தியா அதன் பின்னர் புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டார்.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே நடிகை சந்தியா போஸ்ட்பார்டம் புளுஸ்(postpartum blues)என்ற மன அழுத்த நோயினால் (syndrome) பாதிக்கப்பட்டுள்ளார். இது பொதுவாக எல்லோருக்கும் ஏற்படாத அரிய நோயாகும். இதனால் மாலை 5 மணி முதல் 7 மணி வரை காரணம் இல்லாமல் அழுது கொண்டே இருப்பது இதன் அறிகுறியாகும்.
Youtube
சந்தியாவும் அதே போன்று தினமும் அழுதிருக்கிறார். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட சந்தியா தன்னுடைய குடும்பத்தினர் உதவியுடன் இந்த நோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறாராம். அதற்கு பிறகு புதிதாக திருமணம் மாணவர்களிடம் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறாராம் நடிகை சந்தியா.
பிரசவத்திற்கு (pregnancy) தயார் ஆக இருக்கும் பெண்கள் இதனை பற்றிய விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!