logo
ADVERTISEMENT
home / Celebrity Life
கருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்!

கருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்!

`தைரியமும் நேர்மையும் மிக்கவர்’ என பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் புகழப்படுபவர், நடிகை கஜோல்.  பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபலமான ஜோடிகளில் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் (kajol) தம்பதியும் உள்ளனர். 

புகழின் உச்சியில் இருக்கும் போதே இவர்கள் காதலித்து கடந்த 1999ஆம்  ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நைசா என்கிற ஒரு மகளும், யூக் என்ற பெயரில் மகனும் உள்ளனர்

பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்காமல் குடும்பபெண்ணாக இல்லறத்தை மட்டும் கவனித்து வருகிறார் கஜோல். இவர் ஏற்கெனவே பிரபுதேவா நடித்த மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். 

ADVERTISEMENT

twitter

சிலவருடங்களுக்கு முன் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.  

பெரும்பாலும் ஊடகங்களில் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்தார் கஜோல்.  இந்நிலையில் நடிகை கஜோல் (kajol) சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘எங்களுடையது கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியான சிறிய குடும்பம். 

குடும்பம்தான் எனக்கு உலகம். நான் குழந்தைகளை கண்ட்ரோல் செய்யமாட்டேன். ஆனால்  என் கணவர் அஜய் எனக்கு அப்படியே நேர் எதிர். அவர் மிகவும் கண்டிப்புடன் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்.  

ADVERTISEMENT

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

மகள் நைசா தான் யாரையாவது காதலிப்பதாக கூறினால் கூட அவளை துப்பாக்கி எடுத்து சுட்டுவிடுவார். அந்த அளவிற்கு கண்டிப்பு, அதனால் என் மகளும் மகனும் எதுவாக இருந்தாலும் என்னிடமே கூறுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

twitter

ADVERTISEMENT

இதற்கு காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியரே இப்படி காதலுக்கு எதிராக பேசலாமா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் தான் கருச்சிதைவுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார்.

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

கடந்த  2001-ம் ஆண்டு, ‘கபி குஷி கபி கம்’ படம் வெளியான காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. 

அதனை தொடர்ந்து இன்னொரு முறையும் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இரண்டாம் முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. 

ADVERTISEMENT

ஆனாலும் மீண்டு வந்தேன். இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

twitter

மேலும், கருச்சிதைவுக்கு ஆளானவர்களை நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள். 

ADVERTISEMENT

இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காகப் பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள் என்று ஆதங்கத்துடன் (kajol)  தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

14 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text