logo
ADVERTISEMENT
home / Celebrity Life
இணையத்தை கலக்கும் நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்!

இணையத்தை கலக்கும் நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்… குவியும் லைக்ஸ்!

2017-யில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் ‘மீசைய முறுக்கு’. இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருந்தார். ஆத்மிகா அறிமுகமான முதல் படம் இதுதான் எனினும் முதல் படத்திலேயே தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து ஆத்மிகா நடித்துள்ள படம் ‘நரகாசூரன்’. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகாவுடன் இணைந்து அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இதற்கு ரான் யோஹான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

twitter

இதனிடையே சமீப காலமாக ஆத்மிகா (aathmika) சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஆத்மிகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

படுக்கையறையில் வெறும் வெள்ளை நிற ஷர்ட் மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைக்கும் தொகுப்பாளினி நட்சத்திரா!

ADVERTISEMENT

ஆத்மிகாவின் ரசிகர்களிடம் இருந்து வரும் ஹார்ட்டின்களும், ஹாட்டி, க்யூட்டி போன்ற கமெண்ட்டுகளும் அதிகமாகியுள்ளது.  மேலும் சமீபத்தில் ஆத்மிகா வெளியிட்ட க்ளிட்டர் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்த புகைப்படத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்திருந்தார். 

அந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் எக்கச்சக்க கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இதனால், செம்ம குஷியாகியுள்ள ஆத்மிகா, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சற்றுமுன் பதிவிட்ட அவரது இந்த ஹாட் புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.   இதனிடையே நடிகை ஆத்மிகா (aathmika) எப்பொழுது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டாலும் அவரை ஆண்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள். 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசித்தேன்….. மனம் திறந்த அமலா!

ADVERTISEMENT

அவர் பார்க்க ஆண் போன்று இருப்பதாக கலாய்க்கிறார்கள். இதனால் கோபமடைந்த ஆத்மிகா தன்னை கலாய்த்த ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், நீங்கள் என்னை இந்த லெஜன்டுகளுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. 

twitter

இந்த பதில் உங்களுக்கு மட்டும் அல்ல உங்களை போன்ற அனைவருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்து எனக்கு சிரிப்போ, கவலையோ வரும் என்று நினைக்கிறீர்களா?அது தான் தவறு. எனக்கு எதுவும் தோன்றவில்லை. 

ADVERTISEMENT

உங்களை நினைத்து தான் பரிதாபமாக உள்ளது. ஆண், பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்களின் புரிதலை நினைத்து பாவமாக உள்ளது. பார்க்க எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை.

பார்க்க நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. நீங்கள் ரித்திக் ரோஷன் போன்றே இருந்தாலும் உங்களின் இதயம் தூய்மையானதாக இல்லாததால் நீங்கள் அழகில்லை என்றே நினைக்கிறேன். அடுத்தவர்களை காயப்படுத்தி இன்பம் காண்கிறீர்கள். 

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி… ரசிகர்கள் மகிழ்ச்சி!

உங்களின் இந்த குணம் மாற நான் பிரார்த்தனை செய்கிறேன். அழகு உள்ளிருந்து வர வேண்டும். வெற்றி, அழகு, உடை, பார்வை, நடை இப்படி பலவற்றுக்காக கலாய்க்கப்படும் பெண்களின் சார்பாக நான் இதை எழுதுகிறேன் என குறிப்பிட்டிருந்தார். ஆத்மிகாவின் (aathmika) இந்த பதிலை அடுத்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

24 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text