தேங்காய் எண்ணெயை(coconut oil) சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் சரும அழகுப் பராமரிப்பதில் சிறப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான்.
தேங்காய் எண்ணெயை(coconut oil) முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை(coconut oil) முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.
- தேங்காய் எண்ணெயில்(coconut oil) உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும்.
- மேலும் இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில்(coconut oil) சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.
- தேங்காய் எண்ணெயை(coconut oil) தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய்(coconut oil) பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய்(coconut oil) பயன்படுத்த வேண்டும்.
- அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய்(coconut oil) பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய்(coconut oil).
- தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.
ஆமணக்கு எண்ணெய் நன்மைகளையும் படிக்கவும்
- தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய்(coconut oil) துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.
- சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய்(coconut oil) துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.
- தேங்காய் எண்ணெயில்(coconut oil) உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.
- இரவில் தூங்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப்(coconut oil) பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் முழுவதும் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
- உங்களுக்கு சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படுமாயின், தேங்காய் எண்ணெயை(coconut oil) கைகளுக்கு தடவலாம். மேலும் தேங்காய் எண்ணெயை கைகளுக்குத் தடவினால், நீண்ட நேரம் சருமத்தில் ஈரப்பசை தங்கியிருக்கும்.
- தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- கால்களில் உள்ள முடியை நீக்கும் முன், தேங்காய் எண்ணெய்(coconut oil) சருமத்தில் தடவிக் கொண்டு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு, முடியும் எளிதில் வெளிவரும்.
- தினமும் தேங்காய் எண்ணெயைக்(coconut oil) கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
எல்லாரும் எதிர்பார்த்த பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஜுன் 23ம் தேதி! போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பளபளப்பான அழகான உதட்டை பெற! லிப்ஸ்டிக் போடுவதற்கான எளிய முறைகள்!
உடலில் அதிகமான வியர்வை வெளியேறுவது ஏன்? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo