logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்

உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்

மெட்ரோ சிட்டி என்றாலே ஒரு சிறிய வேலை அல்லது அவுட்டிங் என்றால் ஓரிரு மணி நேரம் ஆகிவிடும். இதில் நீங்கள் வீகென்ட் வெளியில் சென்று விட்டு ,ஷாப்பிங் , பீச் ,படம் பார்த்து விட்டு திரும்பும் போது பசி என்றால் அதை நள்ளிரவில் சமாளிப்பது மிக கடினம் . உங்கள் பசிக்கு பரிசாக நாங்கள் சில சிறந்த உணவகங்களை அளிக்கிறோம். இது லேட் நைட்டில் இருந்து காலை வரை திறந்து செயல்படும் உணவகங்கள். சில இடங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும்!!இனி பசித்தால் பதற வேண்டாம்.

1.ப்ரியூ பைட்ஸ் , எழும்பூர் (Brew bites, Egmore) –

மொண்டியத் ரோட்டில் இருக்கும் இந்த ரெஸ்டாரண்ட் உங்களுக்கு தேவையான அனைத்தையும் லேட் நைட்டில் (late night) அளிக்கிறார்கள். இது ஒரு சிறிய இடமாக இருந்தாலும் நன்றாக பராமரிக்க பட்ட ஒரு இடம். எல்லா வகையான சாப்பாடும் இருக்கும் இந்த உணவகத்தில், கொட்டும் பனியில் நள்ளிரவில் , உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பசியை போக்கிக்கொள்ளலாம்!

செயல்படும் நேரம்  – இது 24 மணி நேரமும் செயல்படும் ஒரு உணவகம்.

4

ADVERTISEMENT

2.ட்வைலைட் , நுங்கம்பாக்கம் (Twilight, Nungambakkam)  –

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் நீங்கள் நிறைய ஷாப்பிங் செய்திருப்பீர்கள். உங்கள் பசியை போக்க டவைலைட்டிற்கு சென்று பாருங்கள்!  இங்கு சைனீஸ் , நார்த் இந்தியன் (North Indian) டிஷ் , கான்டினென்டல் என அணைத்து வகையும் உண்டு. உங்கள் நள்ளிரவு பசியை போக்கிக்கொள்ள இதுவே ஒரு சிறந்த இடம். இங்கு டேக்-ஹோம் வசதியும் உள்ளது.ஒரு வேலை நீங்கள் இங்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டால், இவர்கள் ஹோம் டெலிவரி சேவையையும் செய்வார்கள்.

செயல்படும் நேரம் – 7pm – 7am 

3.மத்ஸ்யா , எழும்பூர் – (Mathsya, Egmore) 

5

படம்

ADVERTISEMENT

உங்களுக்கு ஒரு நல்ல சவுத் இந்தியன் (South Indian) உணவு தேவை என்றால், எழும்பூரில் உள்ள மத்ஸ்யாவிற்கு சென்று பாருங்கள். இங்கு உள்ள தோசை, இட்லி,வாடா என்று அணைத்து வகைகளும் உங்கள் பசியை போக்கிவிடும். மத்ஸ்யா ஒரு சைவ உணவகம்(food). ஆகையால், சைவம் சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்! மத்ஸ்யா பல ஆண்டுகளாக இதுபோல் இரவில் நீண்ட நேரம் செயல்பட்டு வருகிற ஒரு புகழ்பெற்ற ரெஸ்டாரண்ட் என்றும் குறிப்பிடத்தக்கது.

செயல்படும் நேரம் – 7pm – 2 am 

4.ஹாய் லுக் , அடையார் (Hi Look, Adyar) 

சர்தார் படேல் ரோட்டில் இருக்கும் ஹாய்-லுக் மற்றுமொரு சிறந்த லேட் நைட் உணவகம். ஈட்ட செல்லும் வழியில் இருக்கும் இந்த உணவகம் அங்கிருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தனது பசியை போக்கிக்கொள்ள ஒரு சிறந்த இடம் ! சர்தார் படேல் ரோடு மவுண்ட் ரோட்டிலிருந்து கிண்டி -அடையாறு வரைக்கும் நீடிப்பதினால், இங்கு பயணிப்பது எளிதாகும்! 

செயல்படும் நேரம் – 24 மணி நேரம் 

ADVERTISEMENT

5.மிட் நைட் எக்ஸ்பிரஸ்  TTK road ( Mid Night Express) : 

சென்னையில் ஒரு நல்ல செட்டிநாடு உணவு சாப்பிட உங்களுக்கு தோன்றினால், இங்கு செல்லுங்கள். இங்கு ச்மமீபத்தில் நார்த் இந்தியன் மற்றும் சைனீஸ் வகைகளும் சேர்த்திருக்கிறார்கள். இங்கு நீங்கள் உட்காந்து சாப்பிட விரும்பவில்லை என்றால் டெலிவரி வசதியும் உள்ளது. ஆஹா! நள்ளிரவில் டெலிவரி … அற்புதம் தானே?

செயல்படும் நேரம் – 7pm – 2am

3

 

படம்

ADVERTISEMENT

6.புஹாரி , அண்ணா சாலை  ( Buhari , Anna Salai) : 

உங்களுக்கு ஒரு நல்ல சிக்கன் 65 தேவைப்பட்டால், அண்ணா சாலையில் இருக்கும் புஹாரி உணவகத்திற்கு செல்லுங்கள். ஈவார்கள் வருஷம் 1951 இல் இருந்து செயல்பட்டு வரும் ஒரு பழமைவாய்ந்த உணவகம்(restaurant). இருப்பினும், புகாரியின் உணவின் ருசி உங்கள் நள்ளிரவின் பசியை நன்றாக பாத்துக்கொள்ளும்!

செயல்படும் நேரம் – 2am வரை !

மேலும் படிக்க – ஹோட்டலை மறந்துவிடுங்கள் ! தமிழகத்தின்  தெருக்களில் கிடைக்கும்  7 ருசியான உணவு வகைகள்

பட ஆதாரம்  – canva,instagram 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

12 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT