logo
ADVERTISEMENT
home / Family
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான 10 காரணங்கள்

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான 10 காரணங்கள்

திருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. இதில் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியமாகும். இல்லை என்றால் மொத்தமாக விரிசல் விழுந்து விடும்.

கணவன் மனைவிக்குள் உண்டாகும் விரிசல்கள்(fights) அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. எனவே கணவன் மனைவிக்குள் வரும் விரிசல்களை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை சரி செய்து எப்படி ஒருவரை ஒருவர் ஆதரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

சண்டை(fights) வருவதற்கான முக்கியமான 10 காரணங்கள்

1. பணம்
பெரும்பான்மையான தம்பதிகளுக்குள் இந்த பணம் பெரும் பிரச்சனையை உருவாக்குகிறது. கணவன் போதிய பணம் சம்பாதிக்காமல் இருப்பது, மனைவி அதிகமாக செலவு செய்வது, அல்லது வீட்டின் தேவைகளுக்கு போதிய வருமானம் இல்லாமல் போவது ஆகிய நிதி பிரச்சனைகள் கணவன் மனைவி உறவில் பெரிய விரிசலை உண்டாக்குகிறது.

ADVERTISEMENT

2. குழந்தைகள்
குழந்தைகள் படிப்பில் குறைவான மதிப்பெண்களை எடுப்பது, ஒழுக்கம் இல்லாத செயல்களை செய்வது, அதிகமான குறும்புத்தனங்களை செய்வது ஆகியவற்றால் கணவன் மனைவிக்குள் மோதல்கள் உண்டாகிறது.

10-common-reasons-for-husband-wife-fights003
3. உடலுறவு

போதுமான அளவு உடலுறவு இல்லாமை மற்றும் கருவுறாமை போன்ற உடலுறவு சார்ந்த பிரச்சனைகளால் தம்பதிகள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது தம்பதிகள் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.

4. வேலை பளு
அதிக வேலை பளு, தாமதாக வீட்டிற்கு வருவது இதனால் கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேச போதிய நேரம் ஒதுக்காமல் இருப்பது ஆகியவை தம்பதிகளுக்குள் பிரச்சனையை உண்டாக்குகிறது.

ADVERTISEMENT

5. மூன்றாம் நபர்
உங்களுக்கு இருக்கும் அனைத்து நண்பர்களும் உங்களது உறவை பலப்படுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள். சிலர் வேண்டும் என்றே ஏதேனும் சண்டையை(fights) உங்களுக்குள் உருவாக்கிவிடுவார்கள். அல்லது சண்டையை(fights) அதிகப்படுத்த தங்களால் முடிந்ததை செய்துவிடுவார்கள்.

6. பழக்க வழக்கங்கள்
கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு பழக்கங்களை கொண்டிருப்பதும், கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள்(fights) வர காரணமாக இருக்கிறது.

7. குடும்பம்
குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை, மாமனார், மாமியார், என அனைவரும் கணவன் மனைவி உறவுக்குள் புகுந்து அடிக்கடி கருத்துக்கள் சொல்வதும், நாட்டாமை செய்வதும் பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

8. வீட்டுவேலைகள்
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது போன்ற சண்டைகள்(fights) வருகிறது. ஒருவரே அதிகப்படியான வேலைகளை செய்வது, மற்றவர் மீது வெறுப்பை உண்டாக்குவதாக இருக்கிறது.

ADVERTISEMENT

9. குழந்தை பராமரிப்பு
சில நேரங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் சண்டை(fights) வரும். பெரும்பாலான ஆண்கள் குழந்தைகளை கவனிப்பது பெண்களின் வேலை என நினைக்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கும் குடும்பங்களில் வேலையை பகிர்வதில் குழந்தைகளை பராமரிப்பதில் பெரும் சண்டை(fights) நிழவுகின்றது.

10. தணிமை
இருவரும் அலுவலக வேலைகள் என பிசியாக இருப்பதால் தனக்கென்றோ தனது துணைக்கு என்றோ நேரம் ஒதுக்காமல் இருக்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய இடைவேலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. மனம் விட்டு பேச நேரமின்றி சுற்றி திரிவதால் சின்ன சின்ன பிரச்சணைக்கு கூட அதிக சண்டை(fights) போடுகின்றனர். குழந்தைகளின் எதிர்காலமும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
10-common-reasons-for-husband-wife-fights004
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று தான் இறைவன் துணையை ஏற்படுத்தினான். சண்டையை(fights) வருவது இயல்பு தான். ஆனால் குடும்ப பின்னனியில் வாழ்வது மிகவும் முக்கியம். கூடுமான வரை சண்டையை(fights) சமாதானத்திற்கான வழியாக மாற்றினால் வாழ்க்கையும் எதிர்காலமும் இன்பமாக இருக்கும்.

காதல் பிரேக்கப் ஆவதற்கு முக்கிய காரணங்கள்

பீரியட்ஸ்சின் போது உடலுறவு சரியா? பெண்கள் என்ன சொல்கிறார்கள்!

ADVERTISEMENT

தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் நன்மைகள்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
06 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT