logo
Logo
User
home / ஃபேஷன்
ஆன்லைன் ஷாப்பிங்: பண்டிகை நாட்களுக்கு  ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த  பிராண்டுகள்!

ஆன்லைன் ஷாப்பிங்: பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த பிராண்டுகள்!

பண்டிகை மட்டுமல்லாது, திருவிழா, குடும்ப விசேஷங்கள் என அனைத்திற்கும் பெண்கள் பெரும்பாலும் விரும்புவது பாரம்பரிய உடைதான். இந்தப் பண்டிகை நாட்களில் அற்புதமாக பாரம்பரிய உடையில் (traditional wear)அசத்தலாக தோன்ற ஆசையா? இதை இப்போதே எளிதில் ஆன்லைனில் வாங்கிடலாம். நீங்கள் ஆன்லைன்(online) ஷாப்பிங் செய்ய , இந்தியாவின் சில முன்னணி பிராண்டுகளின் பட்டியலை இங்கு அளித்துள்ளோம்!

1. டபில்யூ ஃபார் வுமன்(W for Women)

கனமான எம்பிராய்டரி மற்றும் பயங்கர அலங்காரம் இல்லாமல், ட்ரெண்டியான ஸ்லிட் கொண்ட பிரிண்ட் செய்யப்பட்ட குர்தா ரகங்களை இங்கு காணலாம். டிசைனும், துணியின் தன்மையும் இளமை உணர்வைத் தரும். துணியின் தன்மை மிகவும் மென்மையானது. வண்ண வண்ண பிரிண்ட்களில், எளிமையாக இருக்கக்கூடியது டபில்யூ ஃபார் வுமன். வெஸ்டர்ன் ட்ரெண்டை இந்திய உடைவடிவில் தர முனைவது இந்த பிராண்ட். இது இந்தியா மட்டுமல்லாது, உலகில் பல இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றன. வழக்கமான மூன்று அளவிலேயே நின்று விடாமல், 7 சைஸ் வரை ஆடைகள் இந்த ஆன்லைன் பிராண்டில் கிடைக்கிறது. 

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

2. பிபா(BIBA)

Pinterest

இந்தியப் பாரம்பரிய உடை வகைகளில் முதன்மையான பங்கு பிபா பிராண்ட்க்கு உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு குர்தா முதல் சல்வார்-கமீஸ், துப்பட்டா, பாட்டம்-வியர், பட்டியாலா, கலந்து தேர்ந்துதெடுத்துக்கொள்ளும் வகையான உடைகள், அனார்கலி போன்ற பல்வேறு காம்பினேஷன்களில் எக்கச்சகமான எலிகண்ட் வகைகளில் பெண்களுக்கு கிடைக்கிறது. இரண்டு வயது பெண் குழந்தை முதல், பெரியவர்கள் வரை எக்கச்சக்க காலெக்ஷன்ஸ் கிடைக்கிறது . உடையைப் பார்த்தாலே தெரிந்துவிடும், இது பிபா பிராண்ட் என்று. அந்தளவிற்கு தனித்துவம் வாய்ந்தது. பஞ்சாபி மொழியில் பிபா என்றால், அழகான பெண் என்று அர்த்தம். அப்புறம் என்ன நீங்களும் பிரிட்டியாக தோன்ற ஆசைப்பட்டால், பிபாவின் இந்த பண்டிகை கால ரகங்களில் தேர்வு செய்து கலக்குங்கள்!மிந்த்ரா, ஜபாங், அமேசான் போன்ற வலைத்தளங்களிலும் வாங்கலாம்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

3. ஸோச்(Soch)

2005ல் பெங்களூருவில் முதல் கடை ஆரம்பமானது. இன்று 45 நகரங்களில் கிளைகள் இருந்தாலும், ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம். பாரம்பரிய உடைக்கு தற்காலத்துப் பெண்களின் சாய்ஸ் ஸோச். அனார்கலி, புடவைகள், ரெடிமேட் பிலௌஸ், பாவாடை, டாப்ஸ், டுனிக்ஸ், சல்வார், மெட்டீரியல், போன்ற பல ரகங்கள் தற்காலத்து ட்ரெண்டில் கலக்குகிறது. ஸோச்சில் தற்போது ப்ரிண்ட்ஸ், வர்ணங்கள், வேலைப்பாடு, துணியின் தரம் ஆகிய அனைத்தும் அருமையாக இருக்கிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பாரம்பரிய உடைகளை தற்கால ஃபேஷன் கடையான ஸோச்சில் விழாக்கால தள்ளுபடி விலையில் 3000திற்கும் மேலான ஆடைகளை அலசி தேர்ந்தெடுத்து வாங்கலாம்!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

4. ஃபேப் இண்டியா(Fab India)

Pinterest

பிபாவிற்கு அடுத்தபடியாக ஃபேப் இண்டியாவில் பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் சேர்த்து பாரம்பரிய உடைகளை பல வர்ணங்களில் பல ரகங்களில் தனித்துவமாக தயாராகிறது. அதனால் உங்கள் குடும்பம் மொத்தத்திற்கும், ஆன்லைனில் வாங்கி விடலாம். மேலும், ஃபேப் இண்டியாவில், பட்டு, பருத்தி, சணல்(ஜூட்) ஆகியவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கிறார்கள். இந்திய பாரம்பரிய சல்வார் மற்றும் குர்தா இந்த ப்ராண்டில் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும். வெளிநாட்டவர் நம்ம ஊர் பாரம்பரிய உடையைத் தேர்தெடுக்கும்போது, நிச்சயம் ஃபேப் இண்டியாதான் அவர்கள் சாய்ஸ்!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

5. க்ளோபல் தேசி(Global Desi)

உலகமெங்கும் டெலிவரி தரப்படும், பெண்களுக்கான தரமான பாரம்பரிய ஆடை தேர்விற்கு க்ளோபல் தேசியைத் தேர்வு செய்யுங்கள். தைத்த புடவை, அனார்கலி, எம்பிராய்டரி குர்தா, ஜம்ப்சூட்,  கவுன் போன்ற பல விதமான ஆடைகள் இந்த பண்டிகைக்காக புதிதாக வந்திருக்கிறது. மிஸஸ். அனிதா டோங்க்ரே என்ற பிரபலமான இந்திய ஃபேஷன் டிசைனர் இந்த பிராண்ட்டிற்கு சொந்தக்காரர். உங்கள் பண்டிகை நாளிற்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பியூஷன் முறையில் உங்களுக்கு பரிசளிக்கும் ஒரு அற்புதமான பிராண்ட் க்ளோபல் தேசி.  

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

6. ஷாப்பர்ஸ் ஸ்டாப்(Shoppers Stop)

Pinterest

ஷாப்பர்ஸ் ஸ்டாப்பின் உறுதியான பிராண்ட்களில் ஒன்று ஸ்டாப். குர்தா, பாரம்பரிய வேலைப்பாடு கொண்ட ஆடைகள், இந்திய உடை ஆகியவற்றில் மாடர்ன் ஸ்டைல் கொண்ட டிசைன்களில் உருவாவது ஸ்டாப் பிராண்ட்(best brand).நீங்கள் ஒரு முழுமையான வெஸ்டர்ன் பிரியராக இருந்தாலும், உங்களை மயக்கும் வண்ண டிசைன் கொண்டது இந்த பிராண்ட்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

7. மேலாஞ்(Melange – Lifestyle)

மேலாஞ் பாரம்பரிய உடைகளை பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமன்றி, மீட்டிங், மாநாடு ஆகிய இடங்களுக்கும் உடுத்திச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக அலங்காரமும், குறைவான எம்பிராய்டரியும் செய்யப்பட்ட ஆடைகள் எல்லா வகையான விசேஷங்களுக்கும் பொருந்துமாறு உள்ளது. டாப்ஸ், ஜக்கெட், ஸ்கிர்ட், சுடிதார் போன்ற பலவிதமான ஆடைகள் லைப்ஸ்டைல் பிராண்டான மெலாஞ் கொண்டுள்ளது. 

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

8. ரங்கிரித்தி(Rangriti)

Pinterest

குறைவான விலையில் தரமான ஆடைகளை தயாரிப்பது ரங்ரித்தி. மாறிக்கொண்டிருக்கும் தற்கால பேஷன் ட்ரெண்ட்க்கு ஏற்ற வித விதமான வர்ணங்களில் பல வண்ண ஆடைகளின் தொகுப்பை ரங்ரித்தியில் காணலாம். முப்பது வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான குர்தாக்கள் இங்கு பிரபலம். 

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

9. லிபாஸ்(Libas)

லிபாஸ் பிரபலமான இந்திய பாரம்பரிய உடை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த பண்டிகைக்கு பொருத்தமான லிபாஸ் உடைகளைத் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுந்த அளவில், உயரத்தில், வடிவத்தில் உங்களுக்கு லிபாஸில் ஆடை கிடைக்கும். லிபஸ் துணியின் தரமும், தைத்திருக்கும் விதமும், அணிந்துகொள்ள சிரமம் இல்லாமல், சவுகரியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

10. தி இண்டியன் ஃபேஷன்(The Indian Fashion)

Pinterest

ஃபேஷன் ஸ்டேஷனில் பாகிஸ்தானி மற்றும் இந்திய பாரம்பரிய உடைகள் இருக்கின்றது. அதில் இந்திய ஃபேஷனில், ஷிஃபான் முதல் பருத்தி உடைவரை மனம் கவரும் விதமான கலெக்ஷன்கள் இருக்கிறது. அளவுகளை சரி செய்ய தைக்கும் வசதியையும் இருக்கிறது. நீங்கள் இந்த இணைய தளத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு உதவ ஒரு பாப் அப் விண்டோ திறந்து கொள்ளும். பார்த்தவுடன் மயங்கி விடாதீர்கள். பிடித்ததை ஆர்டர் செய்து மகிழுங்கள். 

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இப்படி பல வகையான ஆன்லைன் கடைகளில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, உங்களுக்கான பண்டிகை உடையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் அமேசான், ஜபாங், மிந்த்ரா போன்ற இணைய தளங்களிலும் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற அளவில், அழகான நிறத்தில் அற்புதமான பாரம்பரிய உடையை இப்போதே செலக்ட் செய்யுங்களேன்!

ஹாப்பி ஷாப்பிங்!

 

மேலும் படிக்க – விழாக்கால நேரங்களில் உங்களை விதம் விதமாக அலங்கரிக்க சில குறிப்புகள்

பட ஆதாரம்  -Pinterest, Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

06 Oct 2019

Read More

read more articles like this

Read More

read more articles like this
good points logo

good points text