நாம் தொடர்ந்து கேள்விப்படும் ஒரே விடயம், நீங்கள் சரியான இடைவெளியில் தண்ணீர்(Water) பருக வேண்டும், மேலும் உங்கள் உடம்பில் போதுமான நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. நிறைய மின்பொருள் பயன்பாடுகள் உங்களை அவ்வப்போது ஞாபகபடுத்துவதற்காகவே உள்ளது.
எனினும் அவை உண்மையிலேயே உங்களுக்கு பலன் தருகிறதா? தண்ணீர் உங்கள் உடம்பிற்கு என்ன செய்யக் கூடும்? ஏன் நீங்கள் தண்ணீர் பருகுவது அவ்வளவு முக்கியம்? ஏன் நீங்கள் உங்கள் உடம்பை தண்ணீருக்காக காத்திருக்க செய்யக் கூடாது அல்லது அதீத தாகம் எடுக்கும் வரை காத்திருக்க கூடாது? உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பல பதில்கள் உள்ளது.
அனைத்து குடிநீர் பற்றி (All About Drinking Water)
தண்ணீர் குடிப்பதினால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள்:
ஏன் தண்ணீர் குடிப்பது முக்கியம்? (Importance Of Drinking Water)
பள்ளியில் படித்தது போல மனித உடம்பு 6௦% நீரினால் ஆனது. இந்த திரவம் நம் உடல் செயல்பாட்டிருக்கு இன்றியமையாதது. இது உறிஞ்சுதல், உமிழ் நீர் உருவாவது, சுழற்சி, செரிமானம் மற்றும் உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்வது என பல விடயங்களுக்கு மூல காரணியாக உள்ளது. இப்பொழுது உங்களுக்கு புரியும், ஏன் உங்கள் அம்மா எப்போதும் தண்ணீர் பருக சொல்கிறார் என்று.
உடல் வறட்சி மிக கொடுமையானது. அது பேராபத்துகளை உருவாக்கக் கூடும். மயக்கம், வாந்தி, தலை சுற்றல், மதுரம் மன பாதிப்புகள், ஞாபக மறதி, கவனக் குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடும். உடல் வறட்சி குறைந்த ரத்த அழுத்தம் அதிக சோர்வு போன்ற உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? (How Much Water Should You Drink Per Day)
சிலர் உங்களை ஒரு நாள் முழுவதும் நீர் பருக சொல்லி கூறுவார்கள். உங்களுக்கு தாகம் இல்லை என்றாலும் பருக வேண்டும் என்று கூறுவார்கள். விதி கூறுவது என்னவென்றால் 8 x 8, அதாவது 8 குவளை தண்ணீர் 8 அவுன்ஸ் இது ஏறத்தாள இரண்டு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு என்ற கணக்கில் வரும். மேலும் இந்த அளவுகோல் உங்களுக்கு ஏற்படும் வியர்வை மற்றும் உடல் உழைப்பு அல்லது அழுத்தத்தை பொருத்தும் மாறுபடும். நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தாலோ அல்லது வெப்பம் நிறைந்த இடத்தில் வசிப்பவராக இருந்தாலோ இதை விட அதிக நீர் பருக வேண்டியது அவசியம்
தண்ணீர் குடிக்க ஏற்ற நேரம் எது? (Suitable Time To Drink Water)
தேசிய அறிவியல் அகாடமி சமீபத்தில் இதை பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டது. மைகேல் பார்ரேல் அந்த ஆய்வை நடத்தினார். அந்த ஆய்வில் உங்களை நீங்களே தண்ணீர் குடிக்க கட்டாயப்படுத்தினால், குறிப்பாக தாகம் இல்லாத போது தண்ணீர் குடித்தால் அது உங்கள் மூலையில் தாகம் என்னும் ஒரு உணர்வை இல்லாமல் செய்யக் கூடும். உங்கள் உடம்பிற்குத் தெரியும் அதற்கு எப்போது தண்ணீர் வேண்டும் என்று. அதனால் நீங்கள் நீர் பருக ஏற்ற நேரம் எது என்றால் உங்களுக்கு தாகம் எடுக்கும் போதுதான். அது உங்கள் உடம்பிற்கு நீர் தேவை என்பதையும் அறிவுறுத்துகிறது.
எனினும், ஜப்பான் நாட்டவர்கள் காலை எழுந்தவுடன் நான்கு குவளை நீர் குடுக்க வேண்டும் என்றும் அது உங்களது நாள் முழுவதும் சுருசுருப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்றும் நம்புகிறார்கள். மேலும் அது உங்கள் தோலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் ஒரு காரணம், ஜப்பானியர்கள் இந்த வழக்கத்தை உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் பின் பற்றுகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பு என்னவென்றால் காலை தண்ணீர் குடித்தவுடன் 45 நிமிடங்களுக்கு நீங்கள் எதுவும் உண்ணக் கூடாது.
இதை நீங்கள் எளிதாக பின்பற்றலாம். உங்கள் உடலை எப்போதும் காலை எழுந்தவுடன் நீர் பருகி நல்ல நீறோற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மற்ற நேரத்தில் உங்களுக்கு தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் பருகலாம். இத்தகைய செயல் அதிக பலனைத் தரும். உங்கள் தோலை பளப்பாக மாற்றுவதோடு உங்கள் உடல் செயல் பாட்டையும் அதிகப் படுத்தும்.
சுடு தண்ணீர் குடிப்பதினால் கிடைக்கும் பலன்கள் என்ன? (Benefits Of Drinking Hot Water)
அநேகமானோர்கள் இரவு தூங்கப்போவதற்கு முன் மிதமான சுடுதண்ணீர் குடித்து விட்டு பின் படுக்கைக்கு போவது நல்லது என்பார்கள். அல்லது காலை எழுந்தவுடன் சுடு நீர் அருந்துவது நல்லது என்பார்கள். அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது அதிக நன்மைத் தரும்..
அது எப்படி உங்கள் உடலுக்கு நன்மை தரக் கூடும்?
எப்படி ஒரு குவளை சுடு தண்ணீர் உங்களுக்கு பயன்தருகின்றது என்பதை தெரிந்து கொள்ள:
இறுக்கத்தை விடுவிக்கும் (Relieve Tightness)
ஒரு குவளை சுடு தண்ணீர் உங்கள் உடலில், முக்கியமாக நாசி அடைப்பை விடுவிக்க உதவும். அது உங்கள் கழுத்தை சுற்றி இருக்கும் சளி சவ்வுகளை இதமாக்கும். உடனடி நிவாரணத்தையும் தரும். அதனால் தான் மருத்துவர்கள் சுடு தண்ணீர் பயன்படுத்தி வாய் கொப்பளிக்க அறிவுருத்துகிறார்கள். நீங்கள் மேலும் சுடு தண்ணீரில் இஞ்சி மற்றும் எலுமிச்சை பழ சாறு கலந்தும் குடிக்கலாம்.
ஜீரணத்திற்கு உதவும் (Help Digestion)
தண்ணீர் வயிற்றில் இருக்கும் உணவை ஜீரணிக்க பெரிதும் உதவும். அது ஜீரண பிரச்சனைகளை சரி செய்யும். வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சுடு தண்ணீர் விரைவாக ஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும் அசுத்தங்களை வெளியேற்ற உதவும். உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சணை இருந்தால் நீங்கள் அதனை உடனடியாக சுடு நீர் குடித்து சரி செய்யலாம்.
மலச்சிக்கலை சரி செய்யும் (Get Rid Of Constipation)
சுடு தண்ணீர் அருந்துவதால் ஏதேனும் உணவு ஜீரணிக்காமல் குடலில் தேங்கி இருந்தால் அதனை விரைவாக சரி செய்ய உதவும். அது பொதுவாக வயிற்றில் இருக்கும் அனைத்து பிரச்சணைகளையும் சரி செய்ய உதவும். நீங்கள் மலச்சிக்களில் அவதிப்படுகுறீர்கள் என்றால் உடனடியாக சுடு தண்ணீர் குடிப்பதால் நிவாரணத்தை காண்பீர்கள். மேலும் பலன் பெற கொஞ்சம் எலுமிச்சை பழ சாற்றையும் பச்சை தேயிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அமைதிபடுத்த உதவும் (Helps To Calm Down)
உங்கள் நரம்பு மண்டலங்களை அமைதிபடுத்த நீங்கள் சுடு தண்ணீர் அருந்தலாம். நீங்கள் அதிகம் அழுத்தத்தோடு உள்ளீர்கள் அல்லது உடல் வலியால் அவதிப்படுகுறீர்கள் என்றால் ஒரு குவளை சுடு தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடலையும் மனதையும் அமைதிபடுத்த பெரிதும் உதவும். மேலும் பலன் பெற நீங்கள் தேயிலையும் சேர்த்துக் கொள்ளலாம். அது மேலும் கூடுதல் பலனை உங்களுக்குத் தரும்.
நீங்கள் எப்போது குளிர்ந்த நீரை அருந்தலாம்? (When Can You Drink Cold Water?
சுடு நீர் போல குளிர்ந்த நீர் அவ்வளவு பலனை உங்களுக்குத் தராது. எனினும் அதற்கும் சில நற்பலன்கள் தரக் கூடிய தன்மை உள்ளது. குளிர்ந்த நீரை நீங்கள் உடற் பயிற்சி செய்த பிறகு அல்லது வேறு கடினமான வேலை பார்த்த பிறகு அல்லது உங்களது உடல் சூடு அதிகமாக இருக்கும் போது அருந்த்தலாம். அது உங்கள் உடல் சூட்டை சராசரி அளவிற்கு கொண்டு வர உதவும்.
மற்றுமொரு பலன் என்னவென்றால், குளிர்ந்த நீர் வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் இருக்க உதவும். நீங்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கின்றீர்கள் என்றால் குளிர்ந்த நீரை அருந்தலாம். அது உங்கள் உடம்பை நீர் தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும்.
தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? (Benefits Of Water Consumption)
சுடோ அல்லது குளிர்ந்த நீரோ, உங்கள் விருப்பம் மொத்தத்தில் தண்ணீர் உங்கள் உடலில் உள்ள நீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் அருந்துவதால் பல நல்ல பலன்களை நீங்கள் அடையலாம். தண்ணீர் உங்களை உற்சாகத்தோடு வைத்துக் கொள்ள உதவும்.
அசுத்தங்களை வெளியேற்றம் (Discharge Impurities)
நீங்கள் அசுத்தங்களை நினைக்கும் போது உங்கள் மனதில் தானாக முன் வருவது மலச்சிக்கல் மற்றும் சிறுநீர். எனினும், போதுமான தண்ணீர் அருந்தும் போது அது உங்கள் உடலில் உள்ள அசுத்தங்களை சிறந்த வழியில் வெளியேற்றி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் சிறுநீரகம் தண்ணீர் கொண்டே இயங்குகிறது. அது அசுத்தங்களை உங்கள் ரத்தத்தில் இருந்து சிறுநீராக வெளியேற்றுகிறது. தண்ணீர் உங்கள் உடம்பில் உள்ள அழுத்தத்தை விடுவிக்கும்.
உங்கள் தோலை ஆரோக்கியமாக்கும் (Makes Skin Healthy)
உடம்பில் நீரின் அளவு குறையும் போது உங்கள் தோல் வறண்டும் சத்தற்றும் காணப்படும். அதனால் நீங்கள் உங்கள் உடம்பில் போதுமான நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் வரட்சி உங்கள் முகத்திலும் தோழிலும் வெளிப்படையாக தெரியும். அது படிப்படியாக உங்கள் உடம்பில் உள்ள மற்ற உறுப்புகளையும் பாதிக்கத் தொடங்கும். ஆய்வு கூறுவது என்னவென்றால், நீங்கள் குடிக்கும் தண்ணீர் முதலில் உங்கள் உடம்பில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று அதன் பின்னரே தோலுக்கு வரும் என்று. அதனால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மட்டுமே உங்கள் தோல் பலபலவென்று இருக்கும்.
செரிமானத்திற்கு உதவும் (Helps Improve Digestion)
உங்கள் வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை நீர்த்துபோக செய்ய தண்ணீர் பெரிதும் உதவும். அதனால் அது செரிமானத்திற்கு அதிக பயனுள்ளதாக இருக்கின்றது. சுடு நீர் உங்கள் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். நீங்கள் ஒரு நல்ல விருந்துக்குப் பிறகு சுடு நீர் அருந்துவது நல்லது. அது உங்கள் மலத்தை எளிதாக்கி மல சிக்கலை போக்கும்.
நோய் எதிர்ப்பு சக்த்தியை பலபடுத்தும் (Strengthen The Immune System)
உங்கள் உடம்பில் 6௦% நீர் உள்ளதால் அணுக்களுக்கு நிச்சயம் பிராணவாயுவைத் தரும். இது நிச்சயம் உங்கள் உடல் சரியாகவும் ஆரோக்கியத்தோடும் இயங்க உதவும். தண்ணீர் உங்கள் உடம்பில் உள்ள அசுத்தத்தை போக்கவும் உதவும். அது மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப்படுத்தும்.
தலை வலியை தவிர்க்க உதவும்
உடலில் தேவையான நீர் இல்லையென்றால் தலைவலியை குறிப்பாக மைக்ரேன் போன்ற தலைவலியை ஏற்படுத்தக் கூடும். அதனால் நீங்கள் அத்தகைய சூழலை தவிர்க்க முயற்சி செய்வது மிக அவசியம். அநேகமானவர்கள் தொடர்ந்து தலைவலியால் அவதிப்படுகிறார்கள். எனினும் போதுமான அளவு நீர் அருந்துவதால் அசுத்தத்தை வெளியேற்றி அத்தகைய தலைவலி வராமல் செய்யலாம்.
கால் தசைப்பிடிப்பை தவிர்க்கும் (Avoid Foot Muscle Cramps )
போதுமான நீர் அருந்துவதால் கால் வலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற உபாதைகள் வராமல் தவிர்க்கலாம். எனினும் காபி, மற்றும் மது போன்ற பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்தால் உடல் வறட்சியை தவிர்ப்பதோடு தலைவலி மற்றும் கால் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.
முதுகு வலியை தவிர்க்கலாம் (Avoid Back Pain)
அதிக நேரம் அமர்ந்தபடியே வேலை பார்ப்பவர்களுக்கு முதுகு வலி வருவது இயல்பு. அத்தகைய வலி ஏற்படாமல் இருக்க நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் உங்கள் உடம்பை உயர்வூட்டும். வேறு விதத்தில் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் முதுகு தட்டுகளில் உள்ள திரவத்தை நிரப்பும். மேலும் இதமாக செயல்பட செய்யும். மேலும் உடம்பில் லாக்டிக் அமிலம் உருவாவதை தவிர்க்கும். அது முக்கியமாக கீழ் முதுகுப் பகுதியில் வலி ஏற்படாமல் இருக்க உதவும்.
உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் (Keep The Body Warm)
மனித உடல் தண்ணீரை பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளும். அணுக்கள், தசைகள் மற்றும் மற்ற உடல் உருப்புகள் தண்ணீர் பருகுவதால் தன்னுடைய வேலையை சரியாக செய்யும். இவற்றின் செயல்பாடு உங்கள் உடல் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதோடு சீரான வெப்பத்தையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். அதனால் வியர்வை மற்றும் ஜீரணம் போன்ற காரணங்களால் உங்கள் உடலில் தண்ணீர் வெளியேறும் போது அதிக நீர் அருந்துவது உடல் சூட்டை சீரான நிலையில் வைத்துக் கொள்ளவதற்கான ஏற்ற வழியாக அமையும்.
வாய் துர்நாற்றத்தை தவிர்க்க உதவும் (Avoid Body Odor)
வரட்சி தான் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம். அதனால் நீரேற்றம் அத்தகைய பிரச்சனைகளை சரி செய்ய உதவும். மேலும் தண்ணீர் அருந்துவதால் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமான உங்கள் வாயில் இருக்கும் உணவு துகள்களை மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும்.
மயக்கத்தில் இருந்து வெளி வர உதவும் (Helps Come Out Of The Unconscious)
மது உடல் வறட்சியை ஏற்படுத்தும். இது நீங்கள் அடுத்த நாள் காலையில் எழும் போது ஒரு விதமான மயக்கத்தை அல்லது தலை சுற்று போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். படுக்கைக்கு செல்லும் முன் போதுமான நீர் அருந்துவதால் நீங்கள் காலை எழும் போது தெளிவாகவும் தெம்பாகவும் இருப்பீர்கள்.
படுக்க போகும் முன் தண்ணீர் குடிப்பதன் பலன்கள் (Benefits Of Drinking Water Before Going To Bed)
படுப்பதற்கு முன் தண்ணீர் அதிகம் அருந்துவதால் தூக்கமின்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் குறைந்தது 3௦ நிமிடம் முன் தண்ணீர் அருந்துங்கள். இல்லையெனில் நடு தூக்கத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் அல்லது தூக்கம் களைவது போன்ற இடையூறுகள் வரும். எனினும், தூங்க செல்லும் முன் தண்ணீர் அருந்தி விட்டு படுக்க செல்லும் போது இருக்கும் பலன்களை நீங்கள் தவிர்க்க முடியாது. இரவு தூங்கும் முன் தண்ணீர் அருந்துவது உங்கள் உடலை நீறேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். இது உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.
கேள்விகள் (FAQ’s)
நான் எப்போதும் வெறும் வயிற்றில்தான் நீர் அருந்த வேண்டுமா?
ஜப்பானியர்கள் காலையில் எழுந்தவுடன் அருந்துவது ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். பல் விளக்கும் முன், அவர்கள் நான்கு குவளை நீர் அருந்துவது உடலில் சக்த்தியை அதிகரிக்கின்றது என்று நம்புகின்றனர்.
இதனால் உங்கள் தோல் ஆரோக்கியமாகவும் உடல் சுமூகமாகவும் செயல் படும். ஜப்பானியர்கள் காலையில் தண்ணீர் அருந்தியவுடன் அடுத்த 45 நிமிடத்திற்கு எந்த உணவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனால் உடல் நான்றாக சத்துக்களை உள் எடுத்துக் கொள்ளும். இந்த வழக்கம் குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகள், கண் சம்பந்தமான பிரச்சனைகள், மற்றும் உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பிரச்சனைகளை சீர் படுத்த பரிந்துரை செய்யப் படுகிறது. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு சுலபமான வழி.
எது என் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, குளிர்ந்த நீரா அல்லது சுடு நீரா?
முன்பே விவரித்தது போல சுடு நீர் மற்றும் குளிர்ந்த நீர் இரண்டிற்கும் பலன்கள் உண்டு. எனினும் எந்த நேரத்தில் அதனை நீங்கள் அருந்துகுறீர்கள் என்பதை பொருத்து அதன் பலன் இருக்கும். கோடை காலத்தில் அல்லது வெப்பம் நிறைந்த காலத்தில் குளிர்ந்த நீர் உங்கள் உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனினும் நீங்கள் உணவு உண்ட பின் சுடு நீர் அருந்துவது உணவை எளிதாக ஜீரணிக்க உதவும்.
உடல் எடையை குறைக்க தண்ணீர் எவ்வாறு உதவுகிறது?
குளிர்ந்த நீர் பருகுவது உடம்பில் கலோரிக்களை விரைவாக எரிக்கும். ஆய்வு கூறுவது என்னவென்றால், வழக்கத்தை விட ஒரு லிட்டர் தண்ணீர் அதிகம் அருந்துவதால் நீங்கள் உடல் எடையை ஒரு சில மாதங்களில் குறைக்கலாம். தண்ணீர் அருந்துவது உங்கள் உடலில் சக்த்தியை அதிகரிக்கும். மேலும் நச்சுத்தன்மையை வெளியேற்றம். உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இரவில் தாகம் எடுப்பது நீரழிவு நோயின் அறிகுறியா?
அதிக நீர் அருந்துவதால் அதிக சிறுநீர் வரக் கூடும். அது உங்களுக்கு நீரழிவு நோய் இருப்பதாக பல தருணங்களில் தவறாக புரிந்து கொள்ள செய்யலாம். இதனால் உடல் வறட்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அது அதிக தாகத்தை ஏற்படுத்தும். எனினும், அதிக தாகம் ஒரு அறிகுறி அல்ல. இருப்பினும் இது உங்களுக்கு ஒரு பொருட்டாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்த வேண்டும்?
சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எனினும் ஆய்வுகள் உங்களுக்கு தாகம் எடுக்கும் போது நீர் அருந்தினால் போதும் என்று பரிந்துரை செய்கிறது. அதனால் உங்களுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்திய பிறகும் தாகம் எடுத்தால் நீங்கள் தேவைப்படும் தண்ணீரை அருந்தலாம். அதில் எந்த அளவுகோலும் இல்லை.
நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க எண்ணினால் அல்லது உடற் பயிற்சி செய்கிறீர்கள் என்றால் மேலும் தேவைப்படும் தண்ணீரை அருந்தலாம். அது உங்கள் ஜீரணத்தை சீராக்குவதோடு உடலில் சக்தியை அதிகப்படுத்தும்.