Beauty
விமானத்தில் ஆடை விதிமுறைகள் – பொருத்தமற்ற ஆடை அணிந்த காரணத்தை கூறி ஒரு பெண்ணை வெளியேற சொன்ன விமானம்

யுனைடெட் கிங்டம்மில் இருக்கும் பிர்மிங்காமிலிருந்து கானரி ஐலாண்ட், செல்ல எமிலி ஒ கோனூர் (Emily O’Connor) எனும் பெண்மணி விமானத்தில் டிக்கெட்டை பதிவு செய்த்திருக்கிறார். இவர் பயணத்தில் தனக்கு பிடித்த ஆடையை அதாவது ஒரு கிராப் டாப் மற்றும் பலாஸோ பாண்டில், விமானம் ஏறியபோது கதி கலங்க வைத்தார்கள் அந்த விமானத்தின் குழு. விமான பயணத்திற்கு முன்னதாக அணைத்து பயணிகளுக்கும் நடைபெறும் அணைத்து சோதனைகளையும் தாண்டி, கடைசியில் தனது சீட்டில் உட்கார போகும்போது, அந்த விமான குழு இந்த பெண்ணை ஒழுங்காக ஒரு ஓவர்கோட் அணிந்து உட்கார சொல்லி இருக்கிறார்கள். அப்படி தவறினால் வெளியே இறங்க சொல்லி இருக்கிறார்கள் . இதை கேட்டு நடுங்கிய அந்த பெண், மற்ற பயணிகளிடம் திரும்பி, அவள் ஏதாவது நாகரீகமற்ற உடையை அணிந்திருக்கிறாளா என்று கேள்வி எழுப்ப, அதற்கு மற்றவர்கள் ஒன்றும் கூறாமல் அமைதி காக்க, பயணிகளில் ஒருத்தர் அந்த பெண்ணை தவறாக பேசியிருக்கிறார்.
இதற்கு எல்லாம் அந்த விமான படையும் அவர்களின் குழுவினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நின்றிக்கிறார்கள். பின்பு, அந்த பெண் பயந்து நடுங்கி அவரது சகோதரனின் ப்ளேசரை அணிந்து பயணம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் அக்கவுண்டில் குறிப்பிட்டதை பாருங்கள்…
இதற்கு, அந்த விமான குழு கூறியதாவது – விமானத்தில் பயணிகள் அணியும் ஆடைகள் எவாறு இருக்கவேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கிறது. அதை அணைத்து விமானங்களும் சோதித்து பின்பற்றவேண்டும். அதை சோதிக்கும் குழுவினர்கள் சரியான விதத்தில் செயல்படுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
விடுமுறையில்,போகும் இடத்தில ,நாம் அனைவரும் இஷ்டம்போல மனதிற்கு பிடித்த ஆடைகளை அணிந்து கொண்டாடலாம். ஆனால் பயணம் சேய்யும்போது, அதிலும் முக்கியமாக விமானத்தில்(flight) போகும் போது மனதிற்கு பிடித்த ஆடை(clothes) அணியலாமா என்றதுதான் கேள்வி… இதை குறித்து பலர் பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள் என்று எங்கள் ஆராச்சியில் தெரிய வந்தது. விமானத்தில் தனக்கு சௌகரியமான ஆடையை அணிவது வழக்கம். அனால் அது ஒழுங்கீனமாக இருக்க கூடாது.
விமானத்தில் பயணம் செய்ய சில விதிமுறைகள் இருக்கதான் செய்கிறது. இது ஒரு நெருக்கமான சூழல் என்றதாலும், குறைந்தபட்சம், கவர்ச்சியான / கீழ்மையான ஆடைகளை அணியாமல் ,பயணத்திற்கு உரிய ஆடைகளை அணிவது அவசியம் என்று சில புகழ்பெற்ற விமான (airlines) நிறுவனங்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க – நீண்ட பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?
பட ஆதாரம் – ட்வீட்டர்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.