
திருமணம் என்பது ஆண்(men) பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும், வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கையாக, பல தம்பதிகளிடையே உள்ளது.
ஏனெனில், இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாததும், தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் தான், மனைவி இருக்கும் போதே பிற பெண்களிடம் ஆண்கள்(men) செல்வதற்க்கு காரணமாக உள்ளது. பெண்கள் தாம்பத்தியத்தில் சட்டென கோபப்படுவது, முகம் சுழிப்பது போன்ற விஷயங்கள் ஆண்களுக்கு உங்கள் மீதான் விருப்பத்தை குறைக்கும்.
ஆண்கள்(men) மனைவியை விட்டு விலகிப் போக காரணம்:
திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை. ஆனால், நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது.
மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.
இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள்(men) செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை. ஆனால், பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள் அல்லது, பேசினால் கணவன் என்ன நினைப்பரோ.. என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.
மனைவிகள் தங்களது விருப்பு வெறுப்புகளைப் பற்றி கணவருடன் மனம் திறந்து பேச வேண்டும். அவ்வாறு, உங்களின் வெளிப்படையான கருத்து, உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
அப்பொழுதுதான், முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்லாமல், ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம்.
குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. பல பேர் அப்படி இல்லை என்றாலும், பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
அவ்வாறு இல்லது போனால், அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே, இன்னொரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.
இது காலப் போக்கில், மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால், கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள்.
இது, அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குகிறது. இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாக இருக்கிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi