Lifestyle

கலவியின் போது அதிக ஆனந்தம் ஆணுக்கா பெண்ணுக்கா?! புராணம் வெளிப்படுத்தும் ரகசியம் !

Deepa Lakshmi  |  Nov 24, 2019
கலவியின் போது அதிக ஆனந்தம் ஆணுக்கா பெண்ணுக்கா?! புராணம் வெளிப்படுத்தும் ரகசியம் !

தாம்பத்யம் இந்த பிரபஞ்சத்தின் உயிர்களுக்கான ஒரு கடமை. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க தாம்பத்யம் காரணமாகிறது.ஆனாலும் காலம் காலமாக கலவி (sex) பற்றி கேட்கப்படும் ஒரு கேள்விக்கான விடை என்பது இன்றளவும் புரியாத புதிராக இருக்கும்பொழுது அதனைப் பற்றிய விடை புராணங்களில் இருந்தே கிடைத்திருக்கிறது.

கலவி பற்றியும் காமம் பற்றியும் விடாமல் சிந்திப்பவர்கள் ஆண்கள்தான். அவர்களுக்குத்தான் இதில் சுகம் அதிகம் கிடைக்கிறது என்பதுதான் பொதுவான சிந்தனையாக இருக்கிறது. ஆனால் இதில் பெண்களின் நிலை என்ன என்பது தான் விடை தெரியாத கேள்வியாகும்.

Youtube

இதனைப் பற்றி புராணக்கதையான மஹாபாரதத்தில் பீஷ்மர் (beeshmar) மற்றும் தர்மரிடையேயான கேள்வி பதில் நேரத்தில் விடையளிக்கப்படுகிறது. பங்காஸ்வ மன்னன் என்பவரின் கதை மூலம் பீஷ்மர் இதற்கான பதிலை யுதிஷ்டிரரிடம் கூறுகிறார்.

பங்காஸ்வ மன்னர் ஒரு ஆணாக பிறந்து பல குழந்தைகளுக்கு தகப்பான உலகில் அனுபவிக்க வேண்டிய அத்தனை இன்பத்தையும் அனுபவித்தார். இந்திரனை ஒருமுறை கோபப்படுத்தியதற்காக பங்காஸ்வ மன்னருக்கு பெண்ணாக போகும்படி சாபம் கிடைத்தது.இதனால் மனம் வருந்திய பங்காஸ்வ மன்னர் பெண்ணாக மாறிய தன்னை யாரும் பார்த்துவிடாமல் இருப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கே பல ஆண்களுடன் (men) அவர் கலவி கொண்டார்.

Youtube

இந்திரன் சில காலங்கள் போனதும் பங்காஸ்வ மன்னனின் சாபத்தை போக்க முன்வந்தார். அதனை பங்காஸ்வ மன்னரே மறுத்து விட்டாராம். கலவியின் போது ஒரு ஆணாக இருந்து மகிழ்ந்ததை விட பெண்ணாக இருந்த போது மேலும் அதிகமான இன்பம் இருந்ததாக அவர் கூறி இருக்கிறார்.

இதனைப் போலவே கிரேக்க புராணத்திலும் ஒரு கதை சொல்லப்படுகிறது. கிரேக்க மன்னர்களான ஸியஸ் (zeus) மற்றும் ஹேரா (hera) ஆகிய இருவருக்கு இடையே யாருக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்பது பற்றி வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் அதில் சல்லாபத்தில் இருந்த பாம்புகளை கொன்றதற்காக டைரோசியாஸ் பெண்ணாக மாறும்படி சபிக்கப்பட்டார்.

பெண்ணாக மாறியதும் உடல் ரீதியாக ஆண்களை நெருங்கினார். ஆணாக இருந்ததை விட பெண்ணாக இருக்கும்போது இன்பம் அதிகமாக இருந்ததாக அவர் முடிவுக்கு வந்தார் என்று கதையின் போக்கு போகிறது.

Youtube

ஈரானிய புராணம் ஒன்றிலும் பெண்ணாக மாறிய ஆண் ஒருவர் பற்றிக் கூறப்படுகிறது. அவர் கலவி பற்றிய தன்னுடைய கருத்தினை இப்படிக் கூறி இருக்கிறார். ஒரு தந்தையாக இருப்பதைக்காட்டிலும் தாயாக இருப்பதையே தான் விரும்புவதாக அவர் கூறி இருக்கிறார்.

விஞ்ஞானிகளால் கூட இது பற்றி முழுமையான முடிவுக்கு வர முடியவில்லை. காரணம் கலவியின் போது இன்பம் என்பது அனுபவிப்பவரின் மனநிலையை பொறுத்தது என்பதால் இதில் யார் அதிகமாக இன்பம் துய்க்கிரார்கள் என்பதை கண்டறியமுடியவில்லை.

ஆண்களின் இன்பம் கொள்ளும் அளவு குறுகியதாக இருக்கிறது (orgasm) . பெண்கள் இன்பம் கொள்ளும் அளவு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இது பெண்களுக்கு இன்பம் தருகிறது என்கிற பேச்சுக்களும் இருக்கின்றன.

 

Youtube

ஒரு பெண்ணாக இருந்து இதனை எழுதிக்கொண்டிருக்கும் போது நிறைய கேள்விகள் எழுகின்றன. மேலே சொல்லப்பட்டவை உண்மையாக இருந்தால் நாட்டில் ஏன் இத்தனை பாலியல் கொடுமைகள் ஆண்கள் மூலமே நடக்கின்றன என்கிற கேள்வி எழுகிறது.

மனம் விரும்பிய ஒருவருடன் கூடும்போது பெண் முதலில் மன அளவில் நிறைவடைகிறாள். மனத்தால் நிறைவடைந்த பெண்ணிற்கு உடல் சுகம் என்பது பெரும்பொருட்டாக தெரிவதில்லை. அதனாலேயே அவள் ஆணை சுகப்படுத்துவதே தன்னுடைய கடமை என பல காலங்கள் நினைத்து வந்திருக்கிறாள்.

ஆனால் நம்பிக்கைக்குரிய பெண்ணுடன் (women) கூடினாலும் ஆணுக்கு தன் மீதான தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கிறது. காரணம் அந்தப் பெண்ணை தான் முறையாக சந்தோஷப்படுத்தினோமா என்கிற சந்தேகம் எழுவதால் அவர்களுக்கு பாதுகாப்பு குறைகிறது. சந்தோஷத்தின் அளவும் குறைகிறது.

தவிர மனைவி உடன் கலவி கொள்ளும்போதும் மற்ற பெண்களை யோசிப்பதும் அவர்களோடு மனைவியை ஒப்பீடு செய்வதும் ஆண்களுக்கு பழக்கமாக இருந்தால் நிச்சயம் அவர்களால் முழுமையான இன்பத்தை அடையவே முடியாது. ஆகவே கலவி நேரத்தில் இன்பம் துய்ப்பது என்பது கண்டிப்பாக உடல் சார்ந்தது மட்டும் அல்ல மனம் சார்ந்தது என்றுதான் முடிக்க தோன்றுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle