Beauty

மேக்கப் பவுண்டேஷன் வகைகள் : உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது? (Types Of Foundation In Tamil)

Nithya Lakshmi  |  Jan 28, 2019
மேக்கப் பவுண்டேஷன் வகைகள் : உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது? (Types Of Foundation In Tamil)

பவுண்டேஷன் என்பது உங்கள் சருமத்தின் மேல் பூச வேண்டிய ஒரு ஒப்பனை பொருள். இதன் பயன்பாடு என்ன வென்றால் .. உங்கள் முகத்தில் இருக்கும் சரும குறைபாடுகள், வடுக்கள், பருக்கள் போன்றவையை   சரி செய்ய/மறைக்க உதவும். இதை நீங்கள் உங்கள் ஒப்பனையின் (makeup) முன் பூசுவது மிக அவசியம். மேலும் ஒரு நல்ல பவுண்டேஷன் உங்கள் முகத்தை நீண்ட நேரம் ஒரு புது பொலிவுடன் காட்ட உதவும்!

சரி.. பவுண்டேஷன் (foundation) முக்கியம் என்று அறிந்தீர்கள். ஆனால் எந்த சருமத்திற்கு எந்த வித பவுண்டேஷன் என்று தெரியவில்லையா? மார்க்கெட்டில் பல வகைகள் உள்ளனர். இதை பற்றி தான் நாம் இங்கே பார்க்க  உள்ளோம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் (அதன் அம்சத்தின் படி) எது என்று நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.

பவுண்டேஷன் பல வகை (Types Of Foundation In Tamil)

கிரீம் பவுண்டேஷன் (Cream Foundation) –

இது லிக்விட் பவுண்டேஷனை விட மிக கனமான அமைப்பில் இருக்கும். அதனால் இதில் உங்களுக்கு இன்னும் அதிக கவரேஜ் கிடைக்கும். இது உங்கள் சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் மற்ற குறைபாடுகளை மறைத்து சரிசமமாக காட்ட உதவும். மேலும், இது நீண்ட நேரம் உங்கள் முகத்தில் இருக்கும் என்றதால் இது அலுவலகம் முடிந்து பார்ட்டி செல்லும் பொது பயனளிக்கும்.இதில் இருக்கும் மாய்ஸ்சரைசர் (moisturizer) மிக  வறண்ட (dry skin) சருமத்திற்கு மிக அவசியம். மேலும் இதில் எண்ணெய் மற்றும் கிரீமி அமைப்பு ஒரு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

இதை பயன்படுத்த மிக பொருத்தமான சருமம் – இதை ஒரு கலவை (combination skin ) அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – லோரியல் பாரிஸ் ட்ரு மேட்ச் ப்ளெண்டபிள் பவுண்டேஷன் (Rs.799)

லிக்விட் பவுண்டேஷன் (Liquid Foundation) –  

மிக எளிதில் உபயோகிக்கும் ஒரு பவுண்டேஷன் வகை என்றால் அது லிக்விட் பவுண்டேஷன் தான். இது உங்கள் சருமத்தின் ஈர பதத்தை உறிஞ்சி அதற்கேற்ற சமமான தோற்றத்தை தர உதவும். இதில் பல்வேறு வகைகள் உள்ளது –  நீர் சார்ந்த / எண்ணெய் சார்ந்த பவுண்டேஷன், 24 மணி நேர பவுண்டேஷன், வாட்டர் ப்ரூப்.உங்கள் சருமம் எண்ணெய் தன்மை அல்லது கலவை (oily/combination skin)கொண்டதாக இருந்தால், நீர் சார்ந்த பவுண்டேஷன் பயன்படுத்தவும். வறண்ட சருமம் அல்லது சுருக்கங்களோடு இருந்தால் நீங்கள் எண்ணெய்  சார்ந்த பவுண்டேஷன் பயன்படுத்தவும்.

இதை பயன்படுத்த மிக பொருத்தமான சருமம் – லிக்விட் பவுண்டேஷன் அடிப்படையில் எல்லா வித சருமத்திற்கும் உபகிக்கலாம். 

POPxo பரிந்துரைக்கிறது – மேக் ஸ்டூடியோ பிக்ஸ் பிலுயிட்  (Rs.2500)

மூஸ் / வ்ஹிப்ட் பவுண்டேஷன் (Mousse / whipped) –

இது கிரீம் அல்லது லிக்விட் பவுண்டேஷன்னில் இன்னொரு வகை ஆகும். இது உங்கள் வறண்ட, வயதான  மற்றும் சுருக்கமுள்ள சருமத்திற்கு ஏற்ற ஒன்று.

POPxo பரிந்துரைக்கிறது – லக்மே அப்ஸலுட் ஸ்கின் நச்சுரல் மூஸ் (Rs.675)

பௌடர்ட் பவுண்டேஷன் (Powdered Foundation) –

இதில் பவுண்டேஷன் தூளாக ஒரு சிறு பாக்ஸில் வரும். இதை ஒப்பனை பிடிக்காதவர்கள் அல்லது உங்கள் சருமத்தில் ‘மேக்கப் இல்லை’ என்ற தோற்றத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது. இதில் நீங்கள் நிச்சயம் நாச்சுரல் ஆக தெரிவீர்கள். இதில் மேலும் இரண்டு வகைகள் உள்ளனர் –

காம்பெக்ட் பௌடர் (Compact Powder) –

இது பூசுவது மிக எளிது. நீங்கள் உங்கள் முகத்தை கிலேன்ஸ் (cleanse/wash) செய்த உடன், ஒரு மாய்ஸ்சுரைசர் பூசவும். அதன்மேல் இதை பவுடர் போல் பூசுங்கள். இதை மற்ற பவுண்டேஷன் மேலும் பூசலாம். இது லூஸ் பவுடர் / ப்ரெஸ்ட் பவுடர் , இரண்டு வடிவத்தில் வருகிறது.

இந்த வகை பவுண்டேஷன், வறண்ட சருமத்திற்கு அல்லது எண்ணெய் தன்மை  கொண்ட சருமத்திற்கு மிக அவசியம்.

POPxo பரிந்துரைக்கிறது –  லக்மே 9 to 5 ப்ரைமர் மேட் காம்பெக்ட் (Rs.495)

மேலும் படிக்க – ட்ரெண்ட் அலெர்ட் – உங்கள் திகைப்பூட்டும் ஒப்பனையில் சீசனிற்கு ஏற்ற சில லிப்ஸ்டிக் வகைகள்

மினெரல் பவுண்டேஷன் (Mineral Foundation) –

நிலத்தடி தாதுக்களால் செய்த இந்த பவுண்டேஷன் ஒரு பவுடர் வடிவத்தில் வரும். இதை நீங்கள் அப்ளிகேட்டரை பயன்படுத்தி உங்கள் முகத்தில் சரிசமமாக பூசுங்கள். இதை ஈரமாகவோ அல்லது வறண்ட நிலையிலோ பயன்படுத்தலாம்.

இந்த வகை பவுண்டேஷன் அணைத்து சருமத்திற்கும் ஏற்றது.

POPxo பரிந்துரைக்கிறது –  லோரியல் பாரிஸ் ட்ரு மேட் மினரல் பவுண்டேஷன்  (Rs.1215)

மாட் பினிஷ் ஸ்டிக் பவுண்டேஷன் (Matt Finish Stick Foundation) –

உங்கள் கை பையில் எளிதில் பொருந்தும் இந்த ஸ்டிக் பவுண்டேஷன் மிக கனமான ஒரு பினிஷ் குடுக்கும். இது உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், பிக்மென்ட்டேஷன், வடுக்கள் அனைத்தையும் சரி செய்ய உதவும். இது நிச்சயம் உங்கள் சருமத்தை வறண்டது போல் காட்டும். அதனால், இதை பூசுவதற்கு முன், ஒரு மாய்ஸ்சரைசர் அவசியம்.

இதை பயன்படுத்த மிக பொருத்தமான சருமம் –உங்கள் சருமம் வறண்டதாக இருந்தால் இதை தவிர்ப்பது  நல்லது. இது ஒரு எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு பொருத்தமான பவுண்டேஷன்!

POPxo பரிந்துரைக்கிறது – நைகா ஸ்கின் ஜீனியஸ் ஸ்டிக்  (Rs.525)

டின்டேட் மொய்ஸ்சுரைசர்/பவுண்டேஷன் (Tinted Moisturizer / Foundation) –

நீங்கள் மொய்ஸ்சுரைசர் + பாவுண்டேஷன் இரண்டு பலன்களையும் அளிக்கும் ஒரு மேக்கப் பொருளை தேடி கொண்டு இருக்கீறீர்கள் என்றால், இந்த டின்டேட் மொய்ஸ்சுரைசர் அதற்கு சிறந்தது. இதில் இருக்கும் மொய்ஸ்சுரைசர் மற்றும் ஒரு கலர்- பினிஷ் உங்கள் சருமத்தை கவர் செய்து ஒரு மேக்கப் அணிந்த லுக்கை தருகிறது. இதில் இரண்டு வகைகள் உள்ளது –

பிபி கிரீம் (BB Cream) –

இதை பேயுட்டி பாம் / ப்ளேமிஷ் பாம் (blemish balm) எனும் அழைக்கலாம்.  இதன் பெயரை போலவே இது உங்கள் சருமத்தின் நிறத்தை தூக்குதலாக காட்டி உங்கள் சருமத்தில் இருக்கும் குறைகளை அகற்ற உதவும்!

POPxo பரிந்துரைக்கிறது – நைகா பிபி கிரீம் (Rs.349)

சிசி  கிரீம் (CC Cream) –

இது பிபி கிறீம் போலவே.. இதை கலர் கரெக்டர் என்று சொல்லலாம். இதை உங்கள் முகத்தில் இருக்கும் நிற வேறுபாட்டை சரி செய்ய மற்றும் சுருக்கங்களை சரி செய்ய உதவும். மேலும் இதில் இருக்கும் மாய்ஸ்சுரைசர்  உங்கள் சருமத்தை பொலிவுடன் வைக்க ஒத்துழைக்கிறது.

வறண்ட சருமத்திற்கு ஏற்ற பாவுண்டேஷன் !

POPxo பரிந்துரைக்கிறது – லக்மே காம்ப்ளெக்ஷன் சிசி கிரீம் ( Rs.269)

ஸ்பிரே பவுண்டேஷன் (Spray Foundation) –

இதன் பெயரை போல, நீங்கள் உங்கள் முகத்தில் இதை ஸ்பிரே செய்ய வேண்டும். உங்களுக்கு இதுபோல் எந்த அனுபவமும் இல்லை என்றால் நீங்கள் முதலில் ஒரு மேக்கப் அப்ப்ளிகேட்டார்  பிரஷ்ஷில் இதை ஸ்பிரே செய்து அதை உங்கள் முகத்தில் சமமாக பூசுங்கள். இது நீண்ட நேரம் உங்கள் முகத்தில் தங்கும். மேலும் ஒரு பிரெஷ் மற்றும் முழுமையான கவரேஜ் அளிக்க உதவும்.

அணைத்து சருமத்திற்கும் ஏற்ற இந்த பவுண்டேஷன் , எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு மிக சரியானது.

இனி நீங்கள் ஒரு நட்சத்திரம் போல் பிரகாசிக்க சரியான பவுண்டேஷனை தேர்வு செய்யலாம்!

கட்டுரை பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty