இன்று இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை முறையில், செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதென்பது ஒரு கனவாக மட்டுமே பலருக்கும் போய் விட்டது. ஆனால், பலரும், தங்களுக்கு வீட்டிற்குள் கிடைக்கும் சிறிது இடத்திலும் கூட பால்கனி தோட்டம், சமையலரை தோட்டம் என்று அமைக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில், அடுப்பங்கரை தோட்டம் என்பது பல பெண்களுக்கு ஒரு நிறைவேறிய கனவாகவே மாறி வருகின்றது என்று கூறினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
உங்கள் சமையலறையில் தினமும் காலையிலும், மாலையிலும், சில மணி நேரங்களுக்கு வெயில் வருகின்றது என்றால், நீங்கள் நிச்சயம் உங்கள் குட்டி தோட்டத்தை உங்கள் சமையலறையிலேயே அமைக்கத் தொடங்கி விடலாம்(kitchen garden ideas). மேலும் இந்த தோட்டத்திற்கு அதிக பராமரிப்போ, செலவுகளோ இருக்காது. இன்னும், கூறப்போனால், உங்கள் சமையலறையில், அதுவும் அஞ்சரை பெட்டியில் இருக்கும் பொருட்களே உங்கள் தோட்டங்களை அமைக்கு முக்கிய காரணமாக அமைந்து விடும்.
சரி, என்னென்ன செடிகளை உங்கள் அடுப்பங்கரை தோட்டத்தில் அமைக்கலாம்? இங்கே பார்க்கலாம்.
அடுப்பங்கரை தோட்டத்தில் எந்த மாதிரியான அமைப்புகள் மற்றும் பொருட்கள் தேவை?
- முதலில் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் கொட்டாங்குச்சியை தூக்கி போடாமல், அதனை சேகரித்துக் கொள்ளுங்கள். இது சிறிய செடிகளை வளர்க்கக் போதுமானது
- பின்னர் தினமும் சமையலுக்கு தேவைப்படும் காய்களின் கழிவுகளை எடுத்து, மிக்சர் கிரைண்டரில் தண்ணீர் ஊற்றாமல் ஓரளவுக்கு அரைத்து உதிரியாக எடுத்து சேகரித்துக் கொள்ளுங்கள்
- தேங்காய் நார், வெங்காயத்தோல், முட்டை ஓடு, தேநீர் மற்றும் காபி போட்ட பின் கிடைக்கும் தூள், போன்றவற்றை ஒன்றாக சேகரித்துக் கொள்ளுங்கள்
- இவை அனைத்தும் ஒரு நல்ல உறமாக மாறுவதோடு, உங்களுக்கு அதிக மண்ணும் தேவைப்படாது
- சிறிதளவு மண்ணோடு தேவைப்படும் அளவிற்கு இந்த அனைத்தையும் ஒன்றாக கலந்து, கொட்டாங்குச்சி மற்றும் தேவையற்ற டப்பாக்களில் போட்டு, உங்களுக்கு பிடித்தவாறு சிறு சிறு தொட்டிகளை அமைத்து, ஜன்னலில் காட்டுங்கள். உடைந்த, ஆனால் நல்ல நிலையில் இருக்கும் பீங்கான் காப்புகளையும் பயன்படுத்தலாம்.
என்னென்ன செடிகள் வளர்க்கலாம் ?
இப்போது நீங்கள் செடிகளை வளர்க்க தேவையானவற்றை தயார் செய்த பின், எந்த மாதிரியான செடிகளை வளர்க்கலாம் (plants to grow) என்று கேள்வி வரும். அதற்கு, இங்கே உங்களுக்காக சில யோசனைகள்
1. கொத்தமல்லி
Pexels
இது மிகவும் சமையலுக்கு தேவையான ஒன்று. சிறிது தனியா விதைகளை எடுத்துக் கொண்டு, இரண்டாக நுணுக்கி, தயார் செய்து வைத்துள்ள மண்ணில் தூவி தினமும் தண்ணீர் ஊற்றி வந்தால், சில நாட்களிலேயே உங்களுக்கு கொத்தமல்லி கிடைத்து விடும்.
2. வெந்தய கீரை
இது பல சமையலுக்கு தேவைப்படும் ஒரு சத்து நிறைந்த கீரை. சிறிது வெந்தயத்தை எடுத்து, மண்ணில் தூவி விட்டு, தண்ணீர் ஊற்றி வந்தால், சில நாட்களிலேயே உங்களுக்கு தேவையான வெந்தய கீரை கிடைத்து விடும்.
3. கடுகு கீரை
Pexels
சிறிது கடுகை எடுத்து மண்ணில் தூவி, தண்ணீர் ஊற்றி வந்தால், சில நாட்களிலேயே கீரை நன்கு வளர்ந்து விடும். இதை சப்பாத்தி போன்ற சமையலுக்கு பயன்படுத்தலாம்.
4. கீரை வகைகள்
கீரை விதிகளை வாங்கியோ, அல்லது, நீங்கள் சமையலுக்கு வாங்கும், பொன்னாங்கண்ணி, பசலி கீரை, புதினா மற்றும் கரிசலாங்கண்ணி போன்ற கீரை தண்டுகளை மண்ணில் நட்டு வைத்து, தண்ணீரு ஊற்றி பராமரித்து வந்தால், ஓரிரு வாரங்களில் உங்களுக்கு அருமையான கீரை கிடைத்து விடும்.
5. வெங்காயம் / பூண்டு
Pexels
வெங்காயத்தாள் மற்றும் பூண்டுத்தாள் பல சமையல்களில் பயன்படுத்தும் ஒன்று, வெங்காயத்தின் வேர் பகுதியை சிறிது வெங்காய சதையோடு சமையலுக்கு தேவையானது போக, மிச்சத்தை மண்ணில் நட்டு வைத்தால், சில நாட்களிலேயே வெங்காயம் தழைக்கத் தொடங்கும்.
6. முடக்காத்தான்
முடக்காத்தான் கீரை வாங்கும் போது, அதில் இருக்கும் விதிகளை மண்ணில் போட்டு, நீர் ஊற்றி வந்தால், ஓரிரு வாரங்களில் முடக்காத்தான் கொடி வளரத் தொடங்கும். உங்களுக்குத் தேவையான கீரையும் உங்கள் சமையலறையிலேயே கிடைக்கும்.
7. பிரண்டை
Pexels
இதை ஒரு சிறிய தண்டு நட்டு வைத்தாலே போதும். விரைவாக வளரத் தொடங்கும். மேலும் நீங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உங்களுக்குத் தேவையான பிரண்டையை உங்கள் சமையலறையிலேயே எடுத்துக் கொள்ளலாம்.
8. பச்சை மிளகாய்
சிறிது காய்ந்த மிளகாயில் இருக்கும் விதிகளை மண்ணில் தூவி விட்டால், சில நாட்களிலேயே செடி முளைக்கத் தொடங்கும். பின்னர் ஓரிரு மாதங்களிலேயே உங்களுக்குத் தேவையான பச்சை மிளகாய் காய்க்கத் தொடங்கும்.
மேலும் படிக்க – பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !