Lifestyle

இறந்த பின்னர் சுஜித்தின் ஆன்மா என்ன செய்தது – ஆவியுலக ஆராய்ச்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Deepa Lakshmi  |  Nov 2, 2019
இறந்த பின்னர் சுஜித்தின் ஆன்மா என்ன செய்தது – ஆவியுலக ஆராய்ச்சியாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சென்ற தீபாவளியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போன சுஜித்தின் இழப்பு. இந்த இழப்பு மிகவும் பெரிதாக்கப்பட்டது காரணம் ஊடகங்கள் என்றாலும் இரண்டு வயது குழந்தை பூமிக்கடியில் தனியாக இருந்ததும் அம்மாவின் குரலுக்கு “உம் சரிம்மா” என்றதும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

சுஜித்தை மீட்க பலவிதங்களில் அரசு முயற்சி செய்தது  பலனளிக்கவில்லை. மீட்பு பணியினரோடு சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் மாதேஷ் கூறிய தகவல் அனைவரையும் திகைக்க வைத்தது. என் அப்பா இது போன்ற கிணறுகளில் விழும் பொருள்களை எடுத்துக் கொடுக்கும் தொழிலை செய்கிறவர்.                                         

நானே பலமுறை தலைகீழாக உள்ளே சென்று பல பொருள்களை எடுத்து இருக்கிறேன். என் அப்பா அதற்கான பொருள்களை சேகரிக்க போயிருப்பதற்குள் மீட்பு படையினர் வந்து விட்டனர். அவர்களிடம் நாங்கள் எங்கள் ஐடியாவை சொன்ன போது அவர்கள் ஏற்கவில்லை.

Twitter

அவன் 26 அடியில் இருந்த போதே நான் தலைகீழாக சென்று உயிரோடு அவனை கொண்டு வந்திருப்பேன். ஆனால் யாரும் விடவில்லை. அப்பா இவர்கள் தவறு மேல் தவறு செய்வதால் சுஜித் மேலும் 100 அடி ஆழத்திற்கு சென்றதை பார்த்து விட்டு இங்கிருந்து போய் விட்டார். என்று அதிர்ச்சியான விஷயத்தை கூறியிருந்தான்.

முயற்சிகள் எல்லாம் தடங்கல் தாமதம் ஆக சிறு குழந்தையின் உயிர் இவர்களின் நேர தாமதத்தை தாங்க முடியாமல் மூச்சு விட வழியில்லாமல் உணவில்லாமல் நீர் கூட இல்லாமல் அகாலமாக பிரிந்தது சுஜித்தின் உயிர்.                                                              

இந்நிலையில் சுஜித்தின் உயிர் பிரியும்போது அவனது ஆன்மா என்ன செய்தது என்பதை பற்றி ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் (vikravandi ravichandran) பரபரப்பான தகவலை தன்னுடைய யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Twitter

சுஜித்தின் ஆன்மா எப்படிப்பட்டது என்பது குறித்தும் அவனை காப்பாற்ற தொடர்ந்து முன்னோர்களிடம் கேட்ட போது என்ன நடந்தது என்பது பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தனது குருவின் வழிகாட்டுதலோடு இருந்தும் சுஜித்தை மீட்க முடியாதது பற்றி விளக்கமாக அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

யதார்த்தமாக நமது உறவினர் ஒருவரை போல அந்த வீடியோவில் உரையாடும் ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அப்பவே சொன்னா என்னை திட்டுவாங்க என்கிறார் . இவர் இந்திய அளவில் ஆவிகள் ஆன்மாக்கள் பற்றிய ஆராய்ச்சியில் மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என பெயர் எடுத்திருக்கிறார்.

இவர் சொந்தமாக மாத இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாட்டு ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இறக்கும் தருவாயில் சுஜித் மிக நம்பிக்கையோடு அம்மா வருவார் அப்பா வருவார் என காத்திருந்ததாக கூறுகிறார் .

Twitter

இறந்த அந்த நொடியில் இருந்து அந்த ஆன்மா அம்மாவை அழைத்தபடி இருப்பதாக அவர் அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரது அம்மா அவனுக்கு அங்கேயே ஒரு கோயில் எழுப்ப விரும்பியிருக்கிறார்.

பெற்றோர் குற்றமோ மற்றோர் குற்றமோ ஒரு சிறு பிஞ்சை மண் வாஞ்சையோடு வாரிக்கொண்டது. ஒரு மரணம் பல விடியல்களை தீர்மானிக்கலாம் என்பதற்கு உதாரணமாக தன்னுடைய தாய் தகப்பனின் ஏழ்மையை மரணத்தின் மூலம் துடைத்தெறிந்திருக்கிறான் சுஜித். குடும்பம் தன்னுடைய கடமையை தனக்கு செய்யாமலேயே தன்னுடைய குடும்பத்தை சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறான் சிறுவன் சுஜித்.

அவனது ஆன்மா சாந்தி அடைய அனைவருமே வேண்டுவோம்.

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle