Lifestyle

நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வகைகள்

Mohana Priya  |  Jan 16, 2019
நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வகைகள்

நடைபயிற்சி என்றால் என்ன
உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது ஆகும். நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி(walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். இன்று நாட்டில் பரவலாக உடற்பயிற்சி மையங்கள் துவங்கி செயல்பட்டு வருகிறது.

உடற்பயிற்சிக்கென்றே எல்லா வித கருவிகளுடன் மையங்கள் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உடற்பயிற்சி பழக்கம் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது.இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை எனினும், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடந்து செல்வதனையோ கடைபிடிக்கின்றனர்.


சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும கூட, நடந்து செல்வது சைக்கிள செல்வதனையே பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். நடை பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.

நடைபயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நடைபயிற்சியை (walking)பழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது. நுரையீரல் சுவாசம் சீராகிறது. செரிமாணக் கோளாறு சீராகிறது. உடலை வலுப்படுத்துகிறது. நடைபயிற்சி என்பது நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கு சமமாகும. ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி, இறங்குவதாலும், வீட்டை சுத்தப்படுத்தல், விளையாட்டுமைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடல், மூலமாக நடைபயிற்சியின் தேவையை சமன் செய்து கொள்ளாலாம். நடைபயிற்சியின் போது உடலிலுள்ள எல்லாத் தசைதொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகபடுத்தி பின் சம நிலைக்கு வருகிறது. தொடர்ந்து நடைபயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது.உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது. முதுமைஅடைந் தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் அளவு சக்தி கூடுதலாகும்.

நடைபயிற்சி(walking) துவங்கும் முன்பு

நடைபயிற்சி மேற்கோள்ளும் இடம்
சுற்று சூழல் பாதிப்பில்லாத, காற்றோட்டமுள்ள இடம், மக்கள் நெருக்கடி இல்லாத பாதையாக இருத்தல் மிகவும் நல்லது. பூங்கா, மைதானம், பள்ளி, கல்லூரி மைதானம்,கடைத்தெருக்கள், இயற்கை சூழல் நிறைந்த இடங்களை தேர்வு செய்து கொள்வது நல்லது.

நடைபயிற்சி செய்யும் முறை


நடைபயிற்சியின் வகைகள்
நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு

மெதுவாக நடப்பது
எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைபயிற்சி உடல் வலி, சோர்வுகளை போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் உள்ளாவர்களுக்கு ஏற்ற நடையாகும்.

பவர் வாக்கிங்
கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.இந்த பவர் வாக்கிங் நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடையாகும்.

ஜாகிங்
நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது. அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். தினசரி ½ மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம். இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடம் நடக்கலாம்.

நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

சுற்றுச்சூழல் மாசுபாடும், ரசாயன கழிவுகளும், நட்சுப்பொருட்கள் கலந்த உணவாலும், உடல் நலமும் – மனநலமும் பாதிக்கப்பட்டு வரும் இக்காலசூழலில், நச்சுக்காற்றின் தாக்கத்தை உடல் இயக்கத்தின் பாதிப்பை அளிக்காத வண்ணமும்,செலவின்றி ஆரோக்கியமாக – மகிழ்வுடன் வாழ உதவும் எளிமையான வழியாகும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle