
நீங்கள் இன்று இரவு தாம்பத்தியம்(sex) கொள்ள தயாராக இருக்கிறீர்கள் எனில், உங்கள் துணையையும் நீங்கள் தான் அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும்.
தாம்பத்தியம்(sex) கொள்ளும் போது மட்டுமின்றி, அதற்கு முன்பிருந்தே நீங்கள் “அந்த” விஷயம் சார்ந்து பேசுவது, அவர்களது முழு எண்ணத்தையும் உடலுறவு சார்ந்தே திருப்பும். இதனால், முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியும் என மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நம்முடைய உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே தாம்பத்திய(sex) வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். அதில் குறிப்பாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வியர்வை வரும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வதும், நீச்சல் செய்வதும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இதயம் வலுப்பெறும் இதையும் வலுப்பெற்றால் சாதாரணமாகவே தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்க செய்யும். காரணம் சீரான ரத்த ஓட்டமே.
நாம் உட்கொள்ளும் உணவில், தினமும் வெங்காயம் பூண்டு சேர்த்துக்கொள்வது வழக்கம். வெங்காயம் மற்றும் பூண்டு இவை இரண்டையும் எடுத்துக் கொண்டால் ஒருவிதமான வாசம் இருக்கும். இந்த வாசம் ஒரு சிலருக்கு பிடிக்காது. இருந்தாலும் இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியமானது வெங்காயமும் பூண்டும்.
அடுத்ததாக, வாழைப்பழம், காரமான உணவு வகைகள் இவைகளை எடுத்துக் கொண்டாலும் இரத்த அழுத்தம் குறைந்து, உடல் சமநிலைக்கு கொண்டு வரப்படும். சீரான ரத்த ஓட்டம் ஏற்படும்போது சாதாரணமாகவே தாம்பத்தியத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். Vitamin b1 அதிகமாக உள்ள உணவு வகைகள், முட்டை எடுத்துக் கொண்டால் ரத்த சுழற்சி சீராக இருக்கும் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.
வாழைப்பழம்
பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் தன்மை வாழைப்பழத்தின் வடிவத்தில் மட்டுமல்லாமல், அதன் உள்ளடக்கத்திலும் உள்ளது.
வெந்தயம்
இது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உள்ளதால் ஆண்மை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
ஏலக்காய்
ஏலக்காயை நாம் பாயாசம் செய்யும் போதும் பயன்படுத்துகிறோம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஏலக்காய் எங்கெல்லாம் சேர்த்து சமைக்க முடியும் எடுத்துக்கொள்ளலாம் ஏலக்காயை எடுத்துக் கொள்வதால், எப்போதும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வழிவகை செய்யும். இதன்மூலம் தாம்பத்யத்தில் ஈடுபாடு அதிகமாக இருக்க செய்ய முடியும்.
கிராம்பு
அடுத்ததாக கிராம்பு, பொதுவாக நம் உடலில் அதிக வெப்பத்தை உண்டு பண்ணக்கூடியவை. நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தாம்பத்ய ஈடுபாடு அதிகமாக இருக்கும்
சீரகம்
சீரகத்தில் ஈஸ்ட்ரோஜன் இருக்கின்றது.இந்த ஈஸ்ட்ரோஜன் ஆண்களின் தாம்பத்திய உறவின் போது விறைப்புத்தன்மைக்கு கேடுவிளைவிக்கும். இதனால் இதனை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
குங்குமப்பூவில் பொட்டாசியம மெக்னீசியம், ஜின்க் போன்றவை இருப்பதால் இது தாம்பத்திய உறவிற்கு ஆசையை தூண்டும் வண்ணம் இருக்கும்.
ஜாதிக்காய்
தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஏற்படுவதற்கு வயாகரா எப்படி பயன்படுகிறதோ அதற்கு இணையாக சக்தி கொண்டது இந்த ஜாதிக்காய். இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும்.
பூண்டு மற்றும் பச்சை மிளகாய்
இவை இரண்டையும் சேர்த்து உணவில் சேர்த்து சாப்பிடும் போது தாம்பத்திய உறவு நீண்டநேரம் இருக்க வழிவகை செய்கிறது.
இஞ்சி
அதேபோன்று இஞ்சி மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளலாம் பாலுடன் இஞ்சி சேர்த்து எடுத்துக் கொண்டாலும் தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு இருக்க வழிவகை செய்யும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடலுறவு உதவுகிறது. இதை அறிவியல் பூர்வமாக பல ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன. எனவே, நீங்கள் மன அழுத்தமாக உணரும் போது உடலுறவில் ஈடுபடுவது நல்ல தீர்வை தரும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi