Lifestyle

விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிகள்! – Weight Loss Tips In Tamil

Mohana Priya  |  Apr 11, 2019
விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிகள்! – Weight Loss Tips In Tamil

குண்டாக இருக்கிறோமா ஒல்லியாக இருக்கிறோமா என்பது முக்கியம் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். நம் நாட்டு பெண்கள் சிலரிடம் இந்த மனபான்மை இருக்கின்றது. ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று ஆனால் உண்மை அப்படி இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ கடவுள் நம்மை எப்படி படைத்தாரோ அது தான் அழகு. தேவையில்லாமல் உடலை குறைத்து சிலர் தங்கள் அழகை கெடுத்துக்கொள்கின்றனர். தேவைக்கு அதிகமான உடல் பருமனை குறைப்பது தவறு இல்லை. அப்படி தேவைக்கு அதிகமாக உடல் பருமன் கூடிவிட்டால் என்ன செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்கான 10 அறிகுறிகள்
உடல் எடையை குறைப்பதற்கான 3 முக்கிய உணவு முறைகள்
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம்.
சிறந்த உடற்பயிற்சி மூலம் எடையை எப்படி குறைக்கலாம்
குண்டாக இருப்பதை குறித்து அதிக கவலை வேண்டாம்
உடல் எடை(Lose Weight) குறித்து எழும் கேள்விகள்

நீங்கள் உண்மையிலேயே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்கான 10 அறிகுறிகள்(10 Signs You Actually Need Weight Loss)

 

உணவின் அடிப்படையில் அறிவியல் முறைப்படி உடல் எடையை எப்படி குறைக்கலாம் (Simple Steps For Weight Loss Based On Science)

1. புரோட்டீன்(Nutrition Foods)

புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் தேவையற்ற கலோரிகளை எரிக்க செய்கின்றது. உடல் எடை(Loose Weight) அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது. செரிமானத்தை அதிகரிப்பதுடன் 80 – 100 சதவீதம் உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றது.
புரோட்டீன் சத்து நிறைந்த முட்டை, கோழி, மீன், ஆடு போன்ற அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சைவ உணவில் -முட்டை கோஸ், புரோகோலி, வெள்ளரிக்காய், கீரை, காலிப்லவர் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும் எல்லாவற்றையும் அளவாக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

Also Read : வெல்லம் பயன்படுத்த எப்படி

2. நியூட்ரிசியன் உணவு (Eat Proteins)

நியூட்ரிசியன் நிறைந்த உணவை நாம் பழக்கத்தில் கொண்டு வந்தால் உடல் எடையை(Lose Weight) கட்டாயம் குறைக்கலாம். ஆனால் இது சற்று கடினம் தான். காரணம் அநேகருக்கு நியூட்ரிசியன் நிறைந்த உணவை உட்கொள்வது பிடிக்காது. இவை இந்திய முறைப்படி நாம் அதிகம் எடுக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சற்று குறைத்து அளவோடு எடுக்க வேண்டும். பீட்ரூட், கீரை, மஞ்சள், பட்டை, எலும்பிச்சை போன்ற பொருட்களை நாம் அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் எடையில் மாற்றத்தை உணரலாம். இந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஈர பதத்தை தந்து செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. மலச்சிக்கலால் அவதிபடுவோர் நியூட்ரிசியன் நிறைந்த உணவை கடைபிடிக்கலாம்.

3. பைபர் உணவுகள்நார்சத்து (Fiber Foods)

நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக முக்கிய பங்காற்றுவது நார்ச்சத்து. நார்ச்சத்து இரண்டு வகைப்படும். நீரில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து. கரையும் நார்ச்சத்து பெரும்பாலும் கரைந்தவுடன் ஜெல்போல ஆகிவிடும். இது பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, உமி, பார்லி, சாத்துக்குடி – ஆரஞ்சு போன்ற ‘சிட்ரஸ்” பழங்கள், ஆப்பிள், கோதுமை, பருப்பு இவை கரையும் நார்ச்சத்து கொண்டவை. இது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

கரையாத நார்ச்சத்து செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்களிலும், காணப்படுகின்றன. ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள். காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் எடையை குறைக்கும் வழிகள் (Home Remedies To Loose Weight)

ஆப்பிள் சிடிகர் வினிகர் (Apple Cider Vinegar)

இதை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். இதை அப்படியே சாப்பிட்டால் சீரணிக்காமல் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை 1டம்ளர் தண்ணீருடன் கலந்து குடித்தால் எந்த வித தீங்கும் வராது. இதை அதிகமாக பயன்படுத்தவும் கூடாது. ஆப்பிள் சீடர் வினிகர் நிறைய பிரச்சினைகளான விக்கல்கள், சளி பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

எலுமிச்சை மற்றும் தேன் (Lemon And Honey)

இது அனைவருக்கும் தெரிந்த ஓர் வழி தான். அது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் எடையில்(Lose Weight) நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மிளகுத் தூள் (Pepper Powder)

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பது நல்லது. அப்படி சூப் செய்து குடிக்கும் போது, அதில் மிளகுத் தூளை சேர்த்து குடித்து வர, அதனால் சூப்பின் மணமும், சுவையும் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.

இஞ்சி சாறு (Ginger Juice)

இஞ்சி சாறு உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை(Lose Weight) குறையும். எனவே இஞ்சி சாற்றினை அன்றாடம் ஒரு டம்ளர் பருகி வர உடல் எடை குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கறிவேப்பிலை (Curry Leaves)

3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்ல் 10-12 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

பூண்டு பால் (Garkic Paste)

4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.

சோம்பு கலந்த தண்ணீர் (Mixed Water)

தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிகப்படியான சதை குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

க்ரீன் டீ (Green Tea)

க்ரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்று தான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக்(Lose Weight) குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட க்ரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன. இவை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைத் தடுக்கும். க்ரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின், எபிகேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள்ளன. அத்துடன் க்ரீன் டீயில் மிகவும் சுறுசுறுப்பான எபிகேலோகேட்டசின்-3-கேலேட் அதிகம் உள்ளது.

பார்ஸ்லி (Parsley)

இது கொத்தமல்லியைப் போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலில் அதிகப்படி நீர் தாங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

கற்றாழை ஜூஸ் (Aloe Juice)

கற்றாழை இலையின் பச்சை நிறத் தோலை நீக்கிவிட்டு, அதன் ஜெல்லை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 கப் மற்றும் உணவு உண்ணும் 15 நிமிடத்திற்கு முன் என தொடர்ந்து 1-2 வாரங்கள் குடித்து வர, உங்கள் எடையில் நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

உடல் எடையை குறைப்பதற்காக சிறந்த உடற்பயிற்சிகள் (Best Exercises For Loosing weight)

பிளாங் (Plank)

பிளாங் உடற்பயிற்சி எனக்கூறப்படும் பயிற்சிகள்(exercises) கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும். இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் முதுகுப்பகுதி தோள் பகுதி ஆகியவை பலம் பெறும். இதில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது.
இப்பயிற்சியை செய்யும் போது மூச்சை ஆழ இழுத்து வயிற்றில் உள்ள தசைகளை சுருக்கிப்பழக்கப்படுத்த வேண்டும். அப்போது உங்கள் இடைப்பகுதி மெலிய துவங்கும். வயிற்று தசையினை உள்ளிழுக்கும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்.

இந்த நிலையை டிரான்ஸ்வெர்ஸ் என்கிறோம். இதை மனதில் இருத்தி உங்கள் வயிற்றில் உள்ள குறுக்குதசைகளை பலப்படுத்தினாலே உங்கள் இடுப்பு பகுதி சுருங்க துவங்கும். ரெகுலர் பிளாங் உடற்பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் ரிவர்ஸ் பிளாங் பயிற்சியானது பின்புற தசைகளுக்கு நல்ல பலனை தருகின்றது. சைட் பிளாங் எக்ஸர்சைஸ் உடலின் பக்கவாட்டில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.

ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks)

கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்று சேர்த்தபடியே, கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
குதிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவில் செலவிடப்படும். உடல் எடை(Lose Weight) குறையும். குதிக்கும்போது ஆழமாக மூச்சுவிடுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதால், நல்ல ரத்தம் பாயும். கொழுப்பைக் கரைக்கும். தொடைச் சதை வலுப்படும்.

ஸ்கிப்பிங் (Skipping)

தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

க்ராஸ் டிரெய்னர் Cross Trainer)

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கைகள் மற்றும் முன் பாதங்கள் தரையில் ஊன்றியபடி, உடல் தரையில் படாதவாறு பேலன்ஸ் செய்ய வேண்டும். இடது பாதத்தை வலது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பிறகு, வலது பாதத்தை இடது கைக்கு நேர்க்கோட்டில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 5 முதல் 8 நிமிடங்கள் செய்யலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். ஓட்டப் பயிற்சிக்கு நிகரானது. அதிக அளவில் கலோரி எரிக்கப்படும். உடலின் பின் பகுதி தசைகள் குறையும்.

பட் கிக்ஸ் (Butt Giggs)

இந்த உடற்பயிற்சி நமது பின்னங்கால்களை பட்டக்ஸ்சில் படும்படியாக குதித்து அடிக்க வேண்டும். 5 முதல் 10 வரை ஆரம்ப நிலையில் செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வயிறு பகுதி தட்டையாவதுடன் கால்கள் மிகுந்த வலு பெறும். உடல் எடையை விரைவில் குறைக்கின்றது. குறிப்பாக இடுப்பு பகுதி விரைவில் குறைகின்றது.

குண்டாக இருக்கிறோம் என்கிற கவலை வேண்டாம் (Don’t Worry If You Are Fat)

குண்டாக இருக்கிறோம் என்கிற கவலை அதிக பெண்களிடம் உள்ளது. ஆனால் பெண்கள் கொஞ்சம் பூசினாற் போன்று இருந்தால் தான் அழகே. நமது உடல் எடை ஆரோக்கியத்தை பாதிக்காத வரை எந்த பிரச்சணையும் இல்லை. உடல் எடையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது என்றால் அதிக கவனம் எடுக்க வேண்டும். குண்டாக இருப்பதால் சிலர் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆழாகின்றனர். இது முற்றிலும் தேவையில்லாத ஒன்று. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அது தான் அழகு. சில நேரம் பெண்களின் எடை தானாக அதிகரிக்கும். சில நேரம் காரணமின்றி தானாக குறையத்தொடங்கும். இதற்கு கார்மோன் மாற்றங்கள் கூட இருக்கலாம். இதற்கு கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. மேற் சொன்ன வழி முறைகளை பின்பற்றி மகிழ்ச்சியாக இருங்கள்.

6உடல் எடை தொடர்பாக எழும் கேள்விகள் (FAQ’s)

1. உடல் எடையை ஏன் குறைக்க வேண்டும்?

எடை அதிகமாக இருக்கும் போது சகஜமாக நமது பணிகளை செய்ய உடல் உதவாது. எடை அதிகமாக இருக்கும் போது பெலவீனங்களும் அதிகம் ஏற்படும். அதற்காகவே எடையை குறைக்க வேண்டும்.

2. உடல் எடை அதிகம் இருப்பதால் என்ன பாதிப்புகள் வரும்?

உடல் எடை அதிகம் இருக்கும் போது கொலஸ்டிராலின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

3. உடல் எடை அதிகம் இருப்பது ஆபத்தா?

எல்லா நேரத்திலும் ஆபத்து என்று சொல்ல முடியாது. அளவிற்கு அதிகமான எடை ஆபத்தை விளைவிக்கும். சில நேரங்களில் குழந்தை பிறப்பை கூட எடை தள்ளி போடும்.

4. ஒல்லியாக இருப்பது தான் அழகா?

மிகவும் ஒல்லியாக இருப்பது அளகை தராது. உயரத்திற்கு ஏற்ற எடையுடன் கொஞ்சம் சப்பியாக இருப்பது தான் அழகு.

5. உடல் எடை ஒரு மாதத்தில் எவ்வளவு குறைக்கலாம்?

சராசரியாக உடல் எடையை ஒரு மாதத்திற்கு 5 கிலோ வரை குறைக்கலாம்.

6. பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை எப்படி குறைக்கலாம்?

பிரசவத்திற்கு பிறகு உடலானது மிகவும் பெலவீனப்பட்டிருக்கும். அப்படியான தருணத்தில் உடல் எடையை சத்தான உணவு பழக்கத்துடன் முறையான உடற்பயிற்சி மூலம் மட்டுமே குறைக்க முடியும். உணவு கட்டுப்பாடு என்பதற்காக சாப்பிடாமல் இருந்தால் பெலவீனத்தை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

7. நீண்ட நாள் உடல் பருமன் ஆபத்தா?

கட்டாயம் ஆபத்து தான். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. முறையான உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும். நீண்ட நாள் உடல் பருமன் வயதான் தோற்றத்தை தருவதுடன் சீக்கிரம் பெலவீனமடைய செய்யும்.

பட ஆதாரம்  – instagram, shutterstock, pexels, instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle