Beauty

மணப்பெண்ணின் கவனத்திற்கு : வீட்டில் இருந்தபடியே கரும்புள்ளிகளைப் போக்கும் சில முக்கிய குறிப்புகள்

Sharon Alphonso  |  Feb 20, 2019
மணப்பெண்ணின் கவனத்திற்கு : வீட்டில் இருந்தபடியே கரும்புள்ளிகளைப் போக்கும் சில முக்கிய குறிப்புகள்

இனிய மணப்பெண்ணே ! திருமணத்தன்று உனக்கு 99 பிரச்னைகள் இருக்கலாம் ஆனால் அதில் ஒன்றாக இந்த கரும்புள்ளிகளும் இருந்து விட வேண்டாமே ! என்னதான் கரும்புள்ளிகள் மரபணுக் குறைபாடுகள் ,ஹார்மோன் சிக்கல்கள், சத்துக் குறைபாடுகள் மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்பட்டாலும் இதனை முற்றிலுமாக நீக்க முடியும். கீழ்கண்ட இந்த 10 அற்புதமான குறிப்புகளை பின்தொடருங்கள். திருமணத்தன்று (wedding) மாசற்ற பெண்ணாக வலம் வாருங்கள் !

1. ஆரஞ்சு தோல்கள் சிறந்தவை

ஆரஞ்சில் உள்ள ரெட்டினால் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நம் சருமத்தை மேம்படுத்துகிறது. ஒரு ஆரஞ்சு தோலை மென்மையாக உங்கள் சருமத்தில் மீது தேய்த்தால் உங்கள் இறந்த செல்கள் உதிர்வதை நீங்கள் காணலாம். கரும்புள்ளிகள் மறைவதையும் பார்க்கலாம்.

1. முதலில் ஆரஞ்சை தோல் நீக்கவும். பிறகு அந்தத் தோல்களை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவும்.

2. பின்னர் நன்றாகக் காய்ந்த ஆரஞ்சு தோலை மிக்சியில் போடு நன்கு பௌடர் ஆக்கிக் கொள்ளவும்.

3. இந்த பவுடர் உடன் நான்கு முதல் ஐந்து டீ ஸ்பூன் நீர் ஊற்றி பேஸ்ட் போல ஆக்கவும்.

4. இந்த திரவத்தை முகத்தில் ஊற்றி 15 நிமிடங்கள் அப்படியே உலர விடவும்.

5. அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.

வாரம் இரு முறை செய்து வரவும்.

2. எலுமிச்சை சாறு உங்களை நேசிக்கிறது.

கரும்புள்ளிகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது எலுமிச்சை சாறு. முகத்தில் உள்ள எண்ணெய்ப்பசை , அழுக்கு போன்றவற்றை நீக்கி முகத்தை சுத்தம் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி கரும்புள்ளிகளை நிறம் குன்ற செய்கிறது. குற்றம் குறையில்லாத முகமாக உங்கள் முகத்தை மாற்றி திருமண நாளன்று நீங்கள் எப்படி காணப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே இருக்க வைக்கும்.உடனடி தீர்வுகளுக்கு எலுமிச்சை சிறந்த தேர்வு.

1. ஒரு பெரிய எலுமிச்சையை சாறு பிழிந்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அந்த பவுலில் ஒரு காட்டன் பந்தை நனைக்கவும். எலுமிச்சை சாறு நனைக்கப்பட்ட காட்டன் பந்தை முகத்தில் தேய்க்கவும்.

3. ஒரு 30 நிமிடத்திற்கு உங்கள் முகத்தை தொடாதீர்கள்.

4. 30 நிமிடம் முடிந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்.

தினமும் இப்படி செய்தால் பலன் இரட்டிப்பாகும்.

3. உருளைக்கிழங்கு உங்கள் நண்பன்

உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் பொருட்கள் இருப்பதால் அது எப்போதும் சருமத்திற்கு நண்பன்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் , கறைகள் போன்றவற்றை நீக்குகிறது. பச்சையான உருளைக்கிழங்கை உங்கள் முகத்தில் தடவினால் அன்றைய நாள் முழுதும் நீங்கள் பொலிவுடன் இருப்பீர்கள்.

1. ஒரு உருளைக்கிழங்கை நீங்கள் துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

2. துருவிய உருளைக்கிழங்கை நீங்கள் ஒரு பவுலில் மாற்றி அதன் மீது தேனை ஊற்றுங்கள்.

3. அந்தக் கலவையில் உங்கள் கைகளை பிசைந்து அதனை உங்கள் முகத்தில் தடவுங்கள்.

4. இந்தக் கலவை முகத்தில் ஓட்டும் வரை திக் ஆகும் வரை காத்திருக்கவும். 45 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும்.

5. ஒரு வெதுவெதுப்பான துணியில் இந்தக் கலவையை முகத்தில் இருந்து துடைத்தெடுக்கவும்.

வாரம் மூன்று முறை இப்படி செய்து வாருங்கள்.

4. கற்றாழைக்கு சம்மதம் சொல்லுங்கள்

நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்று தெரியவில்லை . கற்றாழையில் குணப்படுத்தும் தன்மைகள் அதிகம் இருக்கின்றன. கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளோடு இது பயன்படுத்தும்போது நம் சருமம் சரியாகிறது. ஒவ்வொருமுறை இதனைப் பயன்படுத்தும்போதும் இதன் புத்துணர்ச்சியால் நம் சருமம் மகிழ்கிறது. உங்கள் திருமணத்தை நோக்கி நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது இதனை பயன்படுத்தலாம்.

1. கற்றாழை கிளையில் இருந்து அதன் ஜெல் போன்ற பகுதியை தனியாக எடுக்கவும்.

2. இந்த ஜெல்லை உங்கள் கரும்புள்ளிகள் , மற்றும் தழும்புகள் மேல் தடவவும்.

3. 15 முதல் 25 நிமிடம் கழித்து இதனைக் கழுவி விடவும்.

வாரம் ஒருமுறை இப்படி செய்யலாம்.

5. மோர் உங்கள் சருமத்திற்குப் பிடித்த உணவு

உங்கள் சருமம் எப்போதெல்லாம் எரிச்சலால் அவதிப்படுகிறதோ அப்போதெல்லாம் மோரை அதில் தடவுங்கள். எரிச்சல் மறையும். இதில் உள்ள லேக்டிக் அமிலம் சருமத்தின் காயங்களை ஆற்றுகிறது. சிவந்த சருமத்தை குணப்படுத்துகிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது. உடனே திருமணம் என்கிற கவலை உள்ளவர்கள் இந்த மோரை முயற்சி செய்யுங்கள்.

1. ஒரு பவுலில் 4 டீ ஸ்பூன் மோரை ஊற்றவும்.

2. இதில் இரண்டு சப்பான் தக்காளி சாறை கலக்கவும்.

3. ஒரு ஸ்பூனால் நன்கு கலக்கவும்.

4. குளியறைக்கு சென்று இந்த திரவத்தை உங்கள் முகத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

5. ஒரு மணிநேரம் அப்படியே விடவும்.

6. அதன்பின் சாதாரண நீரில் கழுவவும்.

மாதத்தில் மூன்று முறை இப்படி முயற்சிக்கலாம்.

6. மஞ்சள் என்பது தங்கம் பெண்ணே !

உங்கள் முகத்தை பொலிவாக்கும் ஒரு அற்புத பொருள் உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. மஞ்சள் என்பது அதன் பெயர். முகத்தில் உள்ள மங்கு, கரும்புள்ளிகள், நிறமாற்றம் போன்றவற்றை மாற்றி அது முகத்திற்கு வயதாவதைத் தடுக்கிறது.

1. ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் மஞ்சளை சேர்க்கவும்.

2. இதனோடு சில துளிகள் பாலை சேர்க்கவும். கொஞ்சம் எலுமிச்சை துளிகளையும் சேர்க்கவும்.

3. நன்றாகக் கலக்கி உங்கள் முகத்தில் தடவவும்.

4. மென்மையான சோப்பினால் சிறிது நேரம் கழித்துக் கழுவவும்,

மாதம் நான்கு முறை இப்படி செய்யுங்கள்.

7. பாதாம் பருப்பு வெற்றியைத் தரும்.

வைட்டமின் இ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ள ஒரு பொருள்தான் பாதாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் தழும்புகளையும் நீக்க உதவி செய்கிறது.மேலும் உங்கள் சரும நிறத்தை மேம்படுத்தி ஒரு ஆரோக்கியமான பொலிவையும் மிளிர்வையும் கொடுக்கிறது.

1. ஒரு கை நிறைய பாதாம் பருப்புகளை எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

2. பாதாமின் தோலை உரித்து அதன்பின் மிக்சியில் போடவும்.

3. நன்கு பேஸ்ட் ஆனதும் அதனுடன் கொஞ்சம் தேனும் பன்னீரும் சேருங்கள்.

4. உங்கள் முகம் முழுவதும் இதனைத் தடவவும். மெல்ல மசாஜ் செய்யவும்.

5. 30 நிமிடங்கள் கழித்து இதனைக் கழுவவும்.

வாரம் இருமுறை இவ்வாறு செய்யவும்.

8. வெங்காய சாறை முயற்சி செய்யுங்கள்

உங்கள் சருமம் சென்சிடிவ் அல்லது எண்ணெய்ப்பசை அல்லது வறண்ட சருமமாக இருந்தால் வெங்காய சாறு அதற்கு நல்ல தீர்வாக இருக்க முடியும். உங்கள் சருமத்தைக் குணப்படுத்துவதோடு பிரகாசமாகவும் ஆக்குகிறது. உங்கள் திருமணத்திற்கு முன்பு கரும்புள்ளிகள் நீக்க வெங்காய சாறு நல்ல பலன் தரும்.

1. ஒரு பெரிய வெங்காயத்தை அரிந்து மிக்சியில் போடவும்.

2. இதனை ஒரு பவுலில் மாற்றி அதில் ஒரு காட்டன் பந்தை நனைக்கவும்.

3. காட்டன் பந்தை வெளியே எடுத்து அதனை முகம் முழுவதும் தடவவும்.

4. 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும்.

வாரம் ஒரு முறை இப்படி செய்யவும்.

9. பப்பாளி உங்கள் சருமத்தை சந்தோஷப்படுத்தும்.

பப்பாளியில் உள்ள என்சைம்கள் கரும்புள்ளிகள் வெகு சுலபமாக நீக்க உதவுகிறது. சூரியனிடம் இருந்து உங்கள் சருமத்தைக் காக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இறந்த செல்களை எளிதில் நீக்குகிறது. உங்கள் சருமத்தின் நிறத்தைக் காக்கிறது. திருமணத்திற்கு முன்பான முக அழகிற்கு இந்த ஒரு பழம் பெரிதும் உதவுகிறது.

1. ஒரு பழுத்த பப்பாளியில் உள்ள சதைப்பகுதியை எடுக்கவும்.

2. உங்கள் முகத்தில் இதனைத் தடவி வட்டமாக மசாஜ் செய்யவும்.

3. 20 முதல் 30 நிமிடங்கள் காய விடவும்.

4. சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும்.

மாதம் மூன்று முறை இவ்வாறு செய்யவும்.

10. ஓட்ஸிலும் உண்டு மாஜிக் ட்ரிக்குகள்.

ஓட்ஸில் உள்ள சிறப்பு குணம் இது முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை நீக்குவதில் வல்லது. ஆனால் இது மட்டுமே இதன் சிறப்பல்ல. இதில் உள்ள சபோனின் எனும் பொருள் முகத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முகத்தில் உள்ள அழுக்குகளையும் கரும்புள்ளிகளையும் எண்ணெய்பசையையும் நீக்குகிறது.

1. ஓட்ஸை கொஞ்சம் எடுத்து பவுலில் போட்டு பசை போலாக்கவும்.

2. அதனோடு இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.

3. இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். நன்றாக ஸ்க்ரப் செய்யவும்.

4. 35 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும்.

5. ஒரு நல்ல பேஸ் வாஷ் மூலம் முகத்தைக் கழுவவும்.

வாரம் ஒரு முறை இப்படி செய்யவும்.

 

படங்கள் ஆதாரம் ஷட்டர்ஷ்டாக்.

Translated by Deepalakshmi.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

Read More From Beauty