Food & Nightlife

சுவையான சூடான வெஜிடபிள் பிரியாணி தயார் செய்யுங்கள்!

Mohana Priya  |  Jun 7, 2019
சுவையான சூடான வெஜிடபிள் பிரியாணி தயார் செய்யுங்கள்!

விடுமுறை நாட்களில் அசைவ பிரியர்கள் சிக்கன் மட்டன் என விதவிதமாக சமைத்து உண்டு மகிழ்ந்தாலும் சைவ பிரியர்களும் அதற்கு சலைத்தவர்கள் இல்லை என்பது போன்று சக்கை போடு போடும் உணவு தான் வெஜ் பிரியாணி(biryani). விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வெஜ் பிரியாணி(biryani) வித் கிரேவி அல்லது உருளை கிழங்கு வருவல் செய்து கொடுத்தால் போதும். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். என்ன நேயர்களே அப்போ இந்த விடுமுறைக்கு வெஜ் பிரியாணியா அப்போ அதற்கான ரெசிபி நாங்கள் தருகிறோம் சும்மா சமைத்து அசத்துங்க.

தேவையான பொருட்கள்

பிரியாணி(biryani) அரிசி – 1 டம்ளர் பீன்ஸ்,கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு – தேவைகேற்ப நெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – 20 கிராம்பு – 6 லவங்கப்பட்டை – 6 ஏலக்காய் – 6 வெள்ளைப் பூண்டு உரித்தது – 6 பல்லு பெரிய தேங்காய் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 2 உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் காய் கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி(biryani) ரெடி.

வெஜ் பிரியாணி(biryani) சம்பா அரிசியில் செய்முறை

காய்கறி பிரியாணி (வெஜ் biryani) என்பது சைவப் பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் ஒன்று.

எளிமையான முறையில் வீட்டில் காய்கறி பிரியாணி (வெஜ் biryani) தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

சம்பா பிரியாணி (biryani) அரிசி – 400 கிராம்
முருங்கை பீன்ஸ் – 75 கிராம்
பட்டாணி (அ) பச்சை பட்டாணி – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
கேரட் – 50 கிராம்
காலிபிளவர் – 50 கிராம்
மீல்மேக்கர் – 50 கிராம்
எலுமிச்சை பழம் – 1 மூடி
நெய் – 50 கிராம்
கொத்த மல்லி இலை – 10 தண்டுகள் (மீடியம் சைஸ்)
புதினா இலை – 20 எண்ணம்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 800 கிராம் (அரிசிக்கு இரு மடங்கு)

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் மற்றும் தொக்கு !

மசால் அரைக்க
பெருஞ்சீரகம் – 4 ஸ்பூன்
பட்டை – ஆள்காட்டி விரல் அளவு
கிராம்பு – 2 எண்ணம்
ஏலக்காய் – 3 எண்ணம்
அன்னாசிப்பூ – 1 எண்ணம்
கடல்பாசி – சிறிதளவு
சாதிப்பத்ரி – 3 இதழ்கள்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப்பூண்டு – 3 பற்கள் (பெரியது)
கசகசா – 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 6 எண்ணம்

தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 2 எண்ணம்
ஏலக்காய் – 2 எண்ணம்
பிரிஞ்சி இலை – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

செய்முறை

பல்வேறு சத்துக்கள் நிறைந்த இளநீர் வெயிளிலிற்கு ஏற்றதா?

ஒரு விசில் வந்தவுடன் தணலை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
குக்கரில் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து வெஜ் பிரியாணியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான காய்கறி பிரியாணி (வெஜ் biryani) தயார். இதனுடன் தயிர் பச்சடி, பிளைன் சால்னா சேர்த்து உண்ணலாம்.

ம்ம்ம்… சுவையான மனமனக்கும் சிக்கன் கிரேவி ரெசிபி!

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு நூக்கோல், டர்னிப் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி காய்கறிக் கலவையுடன் சேர்த்து வதக்கி வெஜ் பிரியாணியைத் தயார் செய்யலாம்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Food & Nightlife