
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் 3வது சீசனில் யாராலும் மறக்க முடியாத ஒரு பிரபலம் வனிதா. இவர் அந்த நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து தினமும் சண்டைகள், சச்சரவுகள் என சென்று கொண்டிருந்தது. இவரது அடாவடி தனத்தால் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
சாண்டி தள்ளிவிட்டதால் கீழே விழுந்த லாஸ்லியா.. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்!
ஆனால் வனிதா வெளியே சென்றது முதல் பிக் பாஸ் நிகழ்ச்சில் சுவாரஸ்யம் இன்றி சென்றது. இதனை அறிந்த பிக் பாஸ், வனிதாவை மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் அவரும் போட்டியாளர் என அறிவிக்கப்பட்டது. எனினும் தனக்கு அளித்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் மீண்டும் பிரச்சனைகள் உருக்கவாக்குவதிலே வனிதா கவனமாக இருந்தார்.
இதனால் டைட்டிலை ஜெயிக்கும் தகுதியிருந்தும் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனும், பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் சுஜாவின் கணவருமான சிவக்குமார், வனிதா குறித்து தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்த ஒரு கருத்துக்கு வனிதா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் உனது அம்மாவை எனக்கு நன்றாக தெரியும். உனது அப்பா, எங்கள் குடும்பத்தில் ஒருவர். நீ பதிவு செய்திருக்கும் பிக்பாஸ் குறித்த கமெண்ட்டுக்களை உனது தாயார் இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருக்க மாட்டார். தற்போது நீ ஒரு குழந்தையின் தகப்பன். எனவே பொறுப்புடன் கருத்துக்களை பதிவு செய்யவும் என்று வனிதா குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வனிதாவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சிவக்குமார், ‘நன்றி அக்கா. நான் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியை மட்டுமே பார்த்து எனது கருத்துக்களை தெரிவிக்கின்றேன். 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.
என் தாயார் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை நான் அறிவேன். இதனை நீங்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. எனது பார்வையில் கூறப்பட்ட கருத்துக்களே அவை. அதே சமயம் உங்களுக்கு நேரமிருந்தால் நான் பதிவு செய்த மற்ற பதிவுகளையும் பாருங்கள். எனது சமீபத்தில் ட்வீட் ஒன்று உங்களுடைய தாய்மையை போற்றியது குறித்தாக இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸில் நடந்த ப்ரீஸ் டாஸ்க்கின் போது வனிதாவின் இரண்டு மகள்கள் அவரை பார்க்க வந்திருந்தனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த சிவக்குமார், வனிதாவின் தாய்மையை நான் மதிக்கிறேன் வனிதாவின் மகள்களின் வளர்ப்பை பார்ப்பது அவர் எவ்வளவு அக்கறையுள்ளவர் என்பதைக் காட்டுகிறது.
பிக் பாஸில் சிறப்பு விருந்தினர்களாக மகத், யாஷிகா.. இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
வனிதா மீதான சில குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நான் இப்போது உணர்கிறேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வனிதா குறித்து மட்டுமின்றி பிக் பாஸில் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்தும் அவ்வப்போது சிவக்குமார் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார். கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சிவக்குமார், பிக் பாஸ் நிகழ்ச்சியை சேரப்பா தான் சிறந்த போட்டியாளர். உங்களின் நல்ல நேரங்களுக்கு நன்றி. ஆனால் அவர் லாஸ்லியாவுக்காக சக்தியையும், நேரத்தையும் வீணாக்கிவிட்டார். லாஸ்லியாவின் கண்ணில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. கவினுக்கு செம கலாய். இருவரும் தற்போது தர்ஷனை டார்கெட் செய்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக பிக் பாஸின் டைட்டில் வின்னர் முகென் என கருத்து தெரிவித்திருந்தார். முகென் ஒரு கறுப்புக்குதிரை, அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக்கொண்டு போகப்போகிறார் என்று என் இதயம் சொல்கிறது. அவரது பிரஸன்ஸும், அழகும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது நான் ஏற்கனவே மலேசியாவை விரும்புகிறேன். முகென் ராவ் மீதான காதல் என்னை மலேசியாவை அதிகம் நேசிக்க வைக்கிறது என பதிவிட்டிருக்கிறார். இவரது கருத்தை பலரும் ஆதரித்துள்ளனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Bigg Boss
லாஸ்லியா காதலுக்கு ஓகே சொன்ன அப்பா..ஒரே ஒரு கண்டிஷன் தானாம்!தோழி மூலம் வெளியான ரகசியம்!
Deepa Lakshmi
அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!
Deepa Lakshmi
கவின் – லாஸ்லியா பற்றி நான் பயந்தது இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய சேரன்..
Deepa Lakshmi