Lifestyle

இநகாதலர் தினத்தன்று உங்களவனுக்கு தர ஆச்சரியமூட்டும் பரிசுகள்! Valentines Day Gift For Him

Meena Madhunivas  |  Dec 20, 2019
இநகாதலர் தினத்தன்று உங்களவனுக்கு தர ஆச்சரியமூட்டும் பரிசுகள்! Valentines Day Gift For Him

காதலர் தினம் என்று வந்து விட்டாலே, சற்று சுவாரசியம் நிறைந்த நாலேன்றே சொல்லலாம். இந்த தினம் வெளிநாட்டவர்களால் கொண்டாடப்படும் ஒரு தினம் என்று கூறினாலும், இன்றைய சமூக வலைத்தங்களும் மற்றும் ஊடகங்கலும் இதனை இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு தினமாக ஆக்க முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த தினத்திற்கு(valentine day) அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த தினத்தை கொண்டாடுவதால் வணிகம் பெருகுவது ஒரு பக்கம் இருந்தாலும், பலரும் ஆர்வத்துடன் இதனை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

மேலும் இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பகிர்ந்து கொள்வதில் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றனர். அப்படி நீங்கள் உங்கள் காதலனுக்கு பரிசு(gifts) வழங்க நினைத்தால், இங்கே உங்களுக்காக சில சுவாரசியமான யோசனைகள்!

ஏன் காதலர் தினமன்று பரிசு கொடுக்க வேண்டும்? (Why Gift Your Man On Valentines Day)

Shutterstock

அனைவரும் கொடுக்கின்றார்கள் அதனால் நானும் கொடுக்கின்றேன் என்கின்ற பதிலை விட, மேலும் பல முக்கிய காரணங்கள் இதனுள் அடங்கியுள்ளது. நீங்கள் அதிகம் நேசிக்கும் ஒருவருக்கு பரிசு வழங்குவது என்பது, அந்த ஒரு நொடியோடு முடிந்து விடுவது இல்லை. நீங்கள் ஏன் காதலர் தினமன்று பரிசு தர வேண்டும் என்பதற்கு இங்கே சில முக்கிய காரணங்கள். இந்த காரணங்கள் உங்கள் பரிசுக்கு மேலும் அர்த்தத்தை கொடுக்கும் என்றும் நம்புகின்றோம்:

காதலர் தின பரிசை எப்படி தேர்வு செய்வது? (How To Choose Valentines Gift)

காதலர் தினம் நெருங்கி விட்டாலே, கடைகளில் பரிசு பொருட்கள் விற்ப்பனைக்கு குவியத் தொடங்கும். எண்ணில்லடங்கா பரிசு பொருட்கள் கடைகளில் மலை போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இது மட்டுமல்லாது, இணையதள கடைகளிலும் பல புது வரவுகள் வந்து குவியும். இதனோடு சேர்ந்து உங்களுக்கு போனஸ் தரும் வகையில், தள்ளுபடி விலைகள், கூப்பன்கள் என்று மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும், நீங்கள் தேர்வு செய்யும் பரிசு பொருள் உங்கள் காதலனுக்கு பிடித்ததாகவும், என்றும் நினைவில் இருக்கும் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த வகையில், எப்படி உங்கள் காதலனுக்கு பரிசை தேர்வு செய்வது எனபதை பற்றி உங்களுக்காக இங்கே சில பயனுள்ள குறிப்புகள்;

 மேலும் படிக்க – நீண்ட நாள் காதலை உடனே கரெக்ட் பண்ண நச்சுனு 10 டிப்ஸ் 

பொதுவான சில பரிசு பொருட்கள் (Common Gift Ideas)

நிறைய பரிசுப்பொருட்கள் இருந்தாலும் சில பொதுவான பரிசுகளை உங்களது காதலருக்கு வழங்கலாம். 

1. சாண்ட்விச் மேக்கர்

உங்கள் காதலனுக்கு எளிதாக அவராகவே சுவையான சாண்ட்விச்சை செய்து சாப்பிட, இந்த சான்ட்விச் மேக்கரை பரிசளிக்கலாம். இது மிகவும் பயனுள்ளதாக அவருக்கு இருக்கும். மேலும் அவசரமாங்க அலுவலகம் கிளம்பும் நேரத்தில், சாப்பிட நேரமில்லாமல் செல்பவராக இருந்தால், நிச்சயம் இந்த சண்ட்விச் மேக்கர் அவருக்கு உதவியாக இருக்கும்.

2. விருப்பமான உணவு விடுதிக்கு செல்லுவது

நீங்கள் இருவரும் உங்கள் காதலர் தின பரிசாக ஒரு பொருளைத்தான் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை. மாறாக இருவரும் வெகு நாட்களாக செல்ல வேண்டும் என்று விரும்பிய ஒரு உணவு விடுதிக்க செல்ல திட்டமிடலாம். மேலும் அங்கு உங்களுக்கு விருப்பமான உணவை ஒன்றாக பகிர்ந்து உண்ணலாம்

3. மின் பல் துலக்கி

இந்த மின் பல் துலக்கி சற்று மாறுபட்ட பரிசாக உங்கள் காதலனுக்கு இருக்கும். இது ஒரு பயனுள்ள பரிசாகவும் இருக்கும். இதனை நீங்கள் பரிசளித்தால், நிச்சயம் அவர் ஆச்சரியப்படுவார்.

4. வீட்டிற்கு தேவையான சில சிறிய பொருட்கள்

உங்கள் காதலனுக்கு நீங்கள் வீட்டிற்குத் தேவையான அல்லது அவரது பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும் ஒரு சில சிறிய பொருட்களை ஒரு தொகுப்பாக வாங்கி பரிசளிக்கலாம். இது ஒரு பயனுள்ள பரிசாகவும் இருக்கும்

5. திரைப்பட டிக்கெட்டுகள்

உங்கள் காதலனுடன் நீங்கள் புதிதாக வெளிவந்த அல்லது உங்கள் இருவருக்கும் பிடித்த நடிகரின் படத்தை ஒன்றாக சேர்ந்து பார்த்து ஒரு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட இது ஒரு நல்ல பரிசாக இருக்கும்.

6. டிராவல் பாகேஜ்

சுற்றுலா தளங்களுக்கு செல்வது: வெகு நாட்களாக நீங்கள் செல்ல விரும்பிய ஒரு அற்புதமான சுற்றுலா தளத்திற்கு திட்டமிட்டு செல்ல இது உதவியாக இருக்கும். மேலும் உங்கள் காதலனுக்கு பயணம் செய்வது பிடிக்கும் என்றால், அவருக்கு இது ஒரு ஆச்சரியமூட்டும் பரிசாகவும்இருக்கும். குறிப்பாக அருவிகள், மழை பிரதேசங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல நீங்கள் டூர் பகேஜ் ஒன்றை தேர்வு செய்து அவருக்கு பரிசளிக்கலாம்.

7. கீ செயின்

இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக இருக்கும். குறிப்பாக இரு சக்கர வாகனம் அல்லது காரின் சாவியை போட்டு வைத்தக் கொள்ள இது உதவும். மேலும் இதை அவர் தினமும் பயன்படுத்தும் போதும் உங்கள் நினைவு கட்டாயம் அவருக்கு வரும்.

8. அலுவலகத்திற்கு உதவும் பொருட்கள்

உங்கள் காதலர் அலுவலகம் செல்பவராக இருந்தால், அவருக்கு அலுவலகத்தில் பயண்படுத்தும் வகையில் ஒரு சில பொருட்கள் தேவைப்படலாம். அப்படி தேவைப்படும் பொருட்களை நீங்கள் கவனமாக தேர்வு செய்து பரிசளிக்கலாம்

9. மினி குளிர்சாதன பெட்டி

இது ஒரு சிறிய வடிவிலான குளிர் சாதனா பெட்டி. இதில் சில வகைகள் யு எஸ் பி கேபிளிலும், குறைந்த முன்சாரத்திலும் செயல்படும் திறனை கொண்டது. இதனை உங்கள் காரிலும் வைத்து பயன்படுத்தலாம். மிக குறைந்த பொருட்களை, குறிப்பாக குளிர் பானங்கள் மற்றும் பழங்களை வைத்துக் கொள்ள இது உதவும்.

10. மினி அடுப்பு – குட்டி அடுப்பு

இது ஒரு சிறிய அளவிலான உணவை நினைத்த இடத்தில் வைத்து சமைக்க உதவும். குறிப்பாக உங்கள் காதலன் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், அவருக்கு இது தேநீர் போன்ற சில உணவுகளை அவரே செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

தனித்துவமான பரிசு பொருட்கள் (Unique Gift Ideas )

உங்கள் காதல் நீண்ட காலமாக போய் கொண்டிருக்கிறது என்றால் உங்களவர் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பீர். அப்படி யென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. புகைப்படம் பதித்த காபி மக்

இது மிகவும் சுவாரசியமான பரிசு பொருளாகும். உங்களுக்கு விரும்பியபடி காபி மக்கில் உங்கள் முகங்களை பதித்து / பிரிண்ட் செய்து உங்கள் காதலனுக்கு பரிசளிக்கலாம். இது ஒரு அழகான பரிசாகவும் இருக்கும்.

2. பெயர் எழுதப்பட்ட டீ சட்டை

உங்கள் காதலனுக்கு உங்கள் இருவரது பெயர் அல்லது ஏதாவது காதால் வாசகம் எழுத்தப்பட்ட டீ சட்டையை பரிசளிக்கலாம். இது ஒரு தனித்துவம் வாய்ந்த பரிசாக இருக்கும்.

3. பெயர் எழுதிய கீ செயின்

பல இடங்களில் அல்லது இணையதள கடைகளில் நீங்கள் தேர்வு செய்யும் கீ செயினில் உங்கள் காதலனுடைய பெயர் அல்லது உங்கள் இருவரின் பெயரையும் எழுதி பரிசளிக்கலாம். இது நல்ல நினைவுகளை உண்டாக்கும் பரிசாக இருக்கும்.

4. சன் கிளாஸ்

உங்கள் காதலன் அதிகம் வெயிலில் செல்பவராக இருந்தால், அவருக்கு நீங்கள் ஒரு நல்ல தரமான மற்றும் பிராண்டட் சன் கிளாஸை பரிசளிக்கலாம். இது ஒரு நல்ல பயணுள்ள பரிசாக இருக்கும்

5. கை கடிகாரம்

கை கடிகாரம் ஆண்களுக்கு மிகவும் அழகான மாறும் ஒரு கம்பீரமான தோற்றத்தை தரும். நீங்கள் ஒரு நல்ல கை கடிகாரத்தை தேர்வு செய்து உங்கள் காதலனுக்கு பரிசளிக்கலாம்.

6. விளையாட்டு பொருட்கள்

உங்கள் காதலனுக்கு விளையாட்டில் அதிகம் ஆர்வும் இருந்தால், அவருக்கு பிடித்த விளையாட்டை சார்ந்த விளையாட்டு பொருளை அவருக்கு பரிசளிக்கலாம். இது அவருக்கு பயனுள்ள பரிசாகவும் இருக்கும்.

7. ஜெர்கின்

ஜெர்கின் குளிர் மற்றும் மழைகாலங்களில் அதிகம் பயண்படும்  பொருளாக இருக்கும். இது அவருக்கு நிச்சயம் உதவியாகவும் நல்ல பயணுள்ள ஒரு பரிசாகவும் இருக்கும். 

8. வாலட்

உங்கள் காதலனுக்கு பணம், வாகன ஓட்டுனர் உரிமம், கிரெடிட், மற்றும் டெபிட் கார்டுகள் வைத்துக் கொள்ள எதுவாக இருக்கும் வகையில் ஒரு வாலட்டை பரிசளிக்கலாம்.

9. திசைகாட்டி

உங்கள் காதலன் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், அவருக்கு நீங்கள் திசைகாட்டியை பரிசளிக்கலாம். இது குறிப்பாக அவர் கடல் பயணம் செய்பவராக இருந்தாலோ அல்லது, காட்டு பகுதிக்கு அதிகம் செல்பவராக இருந்தாலோ, அவருக்கு இந்த பரிசு பயணுள்ளதாக இருக்கும்.  

பட்ஜெட் பரிசுகள் (Budget Friendly Gifts For Boyfriend)

குறைந்த விலையில் மிகவும் மலிவான பரிசுப்பொருட்களை வாங்கி தர நினைத்தால் இதனை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

1. முதுகில் மாட்டும் அலுவலக பை

எளிதாக முதுகில் மாட்டிக் கொள்ளும் வகையில் ஆண்களுக்கென்று பல பைகள் இன்று கடைகளில் கிடைகின்றன. மேலும் இவை விலை குறைந்ததாகவும் இருகின்றது. நீங்கள் அப்படி ஒரு நல்ல அலுவலக பையை உங்கள் காதலனுக்கு பரிசளிக்கலாம்.  

2. லஞ்ச் பாக்

உங்கள் காதலன் தினமும் அலுவலகத்திற்கு உணவு எடுத்து செல்பவராக இருந்தால், அவருக்கு ஒரு நல்ல லஞ்ச் பாக் பரிசளிக்கலாம். பல வகைகளிலும், நிறங்களிலும் இந்த லஞ்ச் பாக் கிடைகின்றது.  

3. பேனா

பல வகை பேனாக்கள் கடைகளில் கிடைகின்றன. எனினும், விலை உயர்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சில பேனா வகைகளை தேர்வு செய்து உங்கள் காதலனுக்கு பரிசளிக்கலாம்  

4. கைபேசி உரை

இது மிகவும் உபயோகமான பொருளாக இருக்கும். குறிப்பாக கை பேசி கீழே விழுந்தாலோ அல்லது மழையில் நனையாமலோ பாதுகாக்க இது உதவியாக இருக்கும். இது குறைந்த விலையிலும் கிடைக்கும்.  

5. ப்ளுடூத் / ஹெட் போன்

 இது கை பேசியில் பாட்டு கேட்க மற்றும் பேசவும் உதவும்.  இது பல வகையிலும், பல விலையிலும் கிடைகின்றது. இது ஒரு பயணுள்ள  பரிசாக இருக்கும்.

6. வண்ண வண்ண மெழுகு பத்திகள்

இது மிகவும் சுவரசியமான ஒரு பரிசாக இருக்கும். இந்த மெழுகு பத்திகள் பல வண்ணங்களில் மட்டும் இல்லாமல், நல்ல நறுமனத்தோடும் கிடைக்கும்.

7. தலையணை

சிறிய அளவு முதல் சற்று பெரிய அளவிலான தலையணைகள், மற்றும் பருத்தி பஞ்சாலான தலையனை என்று பல வகைகளில் கிடைகின்றது. உங்கள் காதலுனுக்கு அப்படி ஒரு நல்ல தேர்வை தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம்.

8. சேவிங் கிட்

உங்கள் காதலனுக்கு தினமும் முக சவரம் செய்ய எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவிங் கிட் இன்று கிடைகின்றது. இது ஏலேக்ட்ரோனிக் வகைகளிலும் கிடைகின்றது. இது மிகவும் பயனுள்ள ஒரு பரிசாக இருக்கும்.

9. ஏலேக்ட்ரோனிக் சாதனங்கள்

இது குறிப்பாக மடி கணிணி,கிண்டில் ரீட் மற்றும் ஸ்மார்ட் போன் போன்ற ஏலேக்ட்ரோனிக் உபகரணங்களை மேலும் சிறப்பாக பயன்படுத்த உதவும்.

10. கிப்ட் வௌச்சர்

இந்த கிப்ட் வௌச்சர் உங்கள் காதலன் அவர் விரும்பிய பொருளை எளிதாக பணம் கொடுக்காமல் வாங்க உதவியாக இருக்கும். குறிப்பாக இணையதல கடைகளில் பொருட்களை வாங்க இது உதவியாக இருக்கும்.

காதலுனுக்கு பரிசளிக்க நகைகள் (Jewellery Gift For Lover)

சிலர் காதலனுக்கு எப்போதும் விலை அதிகம் உள்ள பொருட்களை அல்லது மதிப்பு மிகுந்த பொருட்களை வாங்கி தர நினைப்பார்கள்.

1. தங்க சங்கிலி

உங்கள் காதலனுக்கு நீங்கள் ஒரு சிறய அல்லது அழகான தங்க சங்கிலியை கழுத்தில் அணிய பரிசளிக்கலாம். இது ஒரு விலை மதிக்கத்தக்க பரிசாகவும் இருக்கும்.

2. கை காப்பு

ஆண்களுக்கென்றே பல வகைகளில் காப்புகள் கைகளில்மாட்டிக் கொள்ள கிடைகின்றது. இவை தங்கம், செம்பு மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் கிடைக்கும். உங்கள் காதலனுக்கு அத்தகைய நகைகள் பிடிக்கும் என்றால், அதனை நீங்கள் அவருக்கு பரிசளிக்கலாம்.

Shutterstock

3. கடுக்கன்

இது பொதுவாக ஆண்கள் காதுகளில் அணிவது. இன்று பல இளம் வயது ஆண்கள் ஒரு காதில் மட்டும் கடுக்கன் அணிந்து வருகிநிட்றனர். இந்த கடுக்கன் பல கற்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். அல்லது வெறும் உலோகத்திலானதாக இருக்கும்.

4. வைர மோதிரம்

உங்கள் காதலனுக்கு ஒரு சிறப்பான பரிசாக வைர மோதிரத்தை பரிசளிக்கலாம். இது ஒரு நல்ல பரிசாகவும், என்றும் நினைவில் நிற்கும் பரிசாகவும் இருக்கும்.  

5. ப்ரேஸ்லெட்

இத்தகைய நகைகள் இன்று பிரபலமாகி வருகின்றது. உங்கள் காதலுனுக்கு நீங்கள் தங்கம் அல்லது வெள்ளியிலான ப்ரேஸ்லெட்டை பரிசளிக்கலாம்.  

பயணம் செய்யும் உங்கள் காதலுனுக்கு (Travel Gift For Boyfriend)

உங்கள் காதலன் டிரால் விருப்பம் உடையவராக இருப்பின் இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. பயணம் செய்யத் தேவையான குறிப்பு தொகுப்புகள்

இது மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக இருக்கும். இதில் ஒருவர் பயணம் செய்ய வேண்டும் என்றால் என்னென பொருட்கள் தேவை, எப்படி பயணத்தை திட்டமிடுவது, வழிகாட்டி என்று பல விடயங்கள் அடங்கி இருக்கும்.  

2. உலக பயணம் செய்ய நிலப்படம் – மாப்

Shutterstock

இன்று கூகிள் மாப் வந்து விட்டாலும், சற்று நவீனமான வகையில் நிலப்படங்களும் கடைகளில் கிடைகின்றன. இவை உங்கள் காதலுனுக்கு பயணம் செய்யும் போது உதவியாக இருக்கும். குறிப்பாக கைபேசியில் சமிக்கை இல்லாத போது இடத்தை கண்டறிய இது உதவியாக இருக்கும்.

3. பாஸ் போர்ட் கவர்

பாஸ் போர்ட் கவர், பாஸ் போர்ட்டை பாதுகாப்பகா வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். இது பல வண்ணங்களிலும், லெதர் போன்ற பல பொருட்கலாள் ஆவையாகவும் இருக்கும்.

4. ஜி பி எஸ்

இந்த ஜி பி எஸ் இப்போது மிக பயனுள்ள ஒரு பொருளாக பயணம் செய்பவர்களுக்கு உள்ளது. இது எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய உதவியாக உள்ளது.

5. காபி மேகர்

Shutterstock

உங்கள் காதலன் பயணத்தின் போது எளிதாக காபி தயார் செய்து அருந்த நீங்கள் ஒரு சிறிய காபி மேக்கரை பரிசளிக்கலாம். இது மிகவும் பயனுள்ள பொருளாக இருக்கும்.

6. தண்ணீர் குவளை / பாட்டில்

இது பயணம் செய்பவர்களுக்கு தண்ணீர் எடுத்து செல்ல உதவியாக இருக்கும். இது பல வகைகளில் கிடைக்கும். குறிப்பாக தண்ணீரை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ பல மணி நேரம் வைத்துக் கொள்ள உதவும் பாட்டில்கள் இன்று பிரபலமாகி வருகின்றது.

ஆடம்பர பரிசு பொருட்கள் (Expensive Gifts For Boyfriend)

கொஞ்சம் ஆடம்பரமாக வாங்கி தர நினைப்பவர்கள் இந்த மாதிரியான பொருட்களை வாங்கி தரலாம்.

1. மெஸெஞ்சர் பை

அன்பளிப்பு என்று வரும்போது பிராண்டட் பைகளை மறக்க முடியுமா?! அவர் தரத்தையும் ப்ராண்டையும் நேசிக்கும் ஒருவராக இருந்தால், இந்த குஸ்ஸி பை நிச்சயம் அவருக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும்.

2. ஆடம்பர வாட்ச்

உங்கள் பார்ட்னர் ஸ்டைலானவராக இருந்தால், ஆடம்பர கடிகாரங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தால், இந்த அழகான ரேடோ கடிகாரத்தை வாங்கி கொடுங்கள். அவர் நிச்சயமாக அதன் வடிவமைப்பை விரும்புவார்!

3. மோதிரம்

உங்கள் காதலனுக்கு அவரது பெயர் பொறிக்கப்பட்ட வைர, தங்க மோதிரத்தை நீங்கள் பரிசளிக்கலாம். இது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசாக இருக்கும்.

4. பிராண்டட் ஆடைகள்

உங்கள் காதலுனுக்கு அலுவலகம் அல்லது அவுட்டிங் செல்ல பயன்படும் வகையில் பிராண்டட் ஆடைகளை பரிசளிக்கலாம். இது அவருக்கு மிகவும் பயனுள்ள பரிசாக இருக்கும்.

5. லெதர் காலணிகள்

செருப்பு மற்றும் அலுவலகம் செல்ல பயன்படும் ஷூ போன்றவை ஒரு நல்ல பரிசாக இருக்கும். மேலும் இது அவருக்கு பயனுள்ள பரிசாகவும் இருக்கும். 

காதலை வெளிப்படுத்தும் பரிசுகள் (Romantic Gift Ideas For Boyfriend)

என்னதான் காஸ்லியான பொருட்கள் வாங்கி தந்தாலும் காதலை வெளிப்படுத்த சில ரொமாண்டிக்கான பொருட்கள் தான் அதிக காதலை வெளிப்படுத்த உதவும்.

1. மலர் கொத்துகள்

வழக்கமாக ரோஜா போக்களை பரிசளிக்காமல், சற்று மாறுதலாக, இருக்குமதி செய்யப்பட்ட மேலும் பல நாட்கள் வாடாமல் பசுமையாக இருக்கும் மல கொத்துகளை நீங்கள் உங்கள் காதலுனுக்கு பரிசளிக்கலாம். இது மிகவும் சுவாரசியமான ஒரு பரிசாக இருக்கும்.  

2. புகைப்பட ஸ்டாண்டுகள்

உங்கள் இருவரது புகைப்படம் இருக்கும் புகைப்பட ஸ்டாண்டை உங்கள் காதலுனுக்கு பரிசளிக்கலாம். இது ஒரு தனித்துவம் வாய்ந்த பரிசாகவும் இருக்கும்.

3. வாசனை திரவம்

உங்கள் காதலனுக்கு வாசனை திரவங்கள் மிகவும் பிடிக்கும் என்றால், அது போன்ற பரிசுகளை தரலாம். இது ஒரு நல்ல பயனுள்ள பரிசு பொருளாகவும் இருக்கும்.  

4. அழகான தலையணை உரைகள் மற்றும் போர்வைகள்

அழகான படங்கள் கொண்ட அல்லது உங்கள் பெயர்கள் எழுதப்பட்ட தலையணை உரைகள் மற்றும் போர்வைகளை நீங்கள் பரிசளிக்கலாம். இது ஒரு நல்ல பயனுள்ள பரிசாக இருக்கும்.  

5. கிஸ்ஸிங் மக்

இது இரண்டு காபி மக்குகள் ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைக்கும் போது முத்தமிடுவது போல இருக்கும் அல்லது ஒரே மக்கில் காதலர்கள் முத்தமிடுவது போல் வரையப்பட்டிருக்கும். இது மிகவும் சுவாரசியமான ஒரு பரிசு பொருளாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

6. உங்கள் காதலை குறிக்கும் வரிகளுடன் ப்ரேஸ்லெட்

காதலர் தினத்தை கொண்டாடுவதற்கே பல பிரத்த்யேகமான பரிசு பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றது. அந்த வகையில் உங்கள காதலனுக்கு காதல் வரிகளோ அல்லது உங்கள் பெயரோ எழுதப்பட்ட பிரேஸ்லெட்டுகளை தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

காதலர் தினத்தை கொண்டாட சில பட்ஜெட் வழிகள் (Budget friendly V-Day celebration)

காதலர் தினம் என்று வந்து விட்டால் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்துவதோடு பரிசை பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால், எப்போதும் போல வழக்கமாக இல்லாமல், வேறு விதமான கொண்டாட்டங்களை நீங்கள் திட்டமிட என்னலாம். அப்போதும், உங்களுக்கு செலவு ஒரு முட்டுக்கட்டையாக வந்து நின்றுவிடக் கூடோம். இதனாலேயே, நீங்கள் ஏதோ ஒரு பரிசை தந்து, வாழ்த்துக்களை கூறி, அந்த நாளை கடந்து விடுவீர்கள். இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

உங்கள் காதலனுடன் அதிக செலவுகள் இல்லாமல், அந்த அழகான நாளை கொண்டாட இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

1. உங்கள் நாளை இருவரும் ஒன்றாக செலவிடுங்கள்

காதலர் தினத்தை கொண்டாட இருவரும் நிச்சயம் திட்டமிட்டபடி ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும். அப்படி நீங்கள் திட்டமிட்டு சந்தித்து உங்கள் நேரத்தை ஒன்றாக பல நல்ல சுவாரசியமான நிகழ்வுகளை பேசியும், பகிர்ந்தும் கொண்டாடுங்கள். இதற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இது உங்கள் பழைய நினைவுகளை அசைப்போடுவதோடு, இன்னும் பல சுவாரசியமான நினைவுகளை உண்டாக்கவும் உதவும்.

2. இருவரும் ஒன்றாக பரிசு வாங்க செல்லுங்கள்

ஒருவேளை நாம் வாங்கும் பரிசு அவருக்கு பிடிக்காமல் போய் விடுமோ அல்லது அது பயனில்லாமல் போய்விடுமோ என்கின்ற ஐயம் சிலருக்கு தோன்றுவது இயல்பு. குறிப்பாக நீங்கள் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்றால், இத்தகைய வீண் செலவுகளை தவிர்க்க, இருவரும் ஒன்றாக இருவருக்கும் பிடித்தது போல பரிசு வாங்க ஒன்றாக கடைக்கு செல்ல திட்டமிடலாம். இப்படி செய்யும் போது நீங்கள் ஒன்றாக நேரத்தை களித்தது போல மட்டும் இல்லாமல், இருவருக்கும் பிடித்த பரிசுகளை குறைந்த செலவில் வாங்கலாம்.

3. உங்கள் மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்லுங்கள்

Shutterstock

நீங்கள் இருவரும் பல நாட்களாக செல்ல வேண்டும் என்று விரும்பிய ஒரு இடத்திற்கு திட்டமிட்டு செல்லலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல நினைவுகளை உண்டாக்குவதோடு, தேவையற்ற செலவுகளை குறைக்கவும் உதவும்.

4. பரிசை கண்டு பிடிக்க சொல்லுங்கள்

இது சற்று சுவாரசியமான விளையாட்டாகும். இதனை உங்கள் வீட்டிலேயே நீங்கள் விளையாடலாம். உங்கள் காதலனுக்கு நீங்கள் வாங்கிய பரிசை ஒரு மறைவான இடத்தில் ஒழித்து வைத்து விட்டு, அதனை சில குறிப்புகள் மட்டும் கொடுத்து அவரையே கண்டு பிடிக்க சொல்லுங்கள். இது உங்கள் நேரத்தை ஒரு நல்ல நினைவாக மாற்ற உதவும்.

5. ஒன்றாக உணவறந்த செல்லுங்கள்

ஒரு மதிய உணவை இருவரும் உணவு விடுதிக்கு சென்று அருந்த திட்டமிடலாம். குறிப்பாக வழக்கமாக செல்லும் உணவு விடுதிக்கு செல்லாமல், சற்று சுவாரசியமாக மற்றும் புதுமையாக இருக்கும் உணவு விடுதிக்க செல்ல திட்டமிடலாம்.

6. உங்கள் வீட்டில் இரவு உணவை தயார் செய்யுங்கள்

Shutterstock

நீங்கள் வெளியே சென்று செலவு செய்ய விருப்பப்படவில்லை என்றால், உங்கள் வீட்டிலேயே, இருவருக்கும் பிடித்த உணவை தயார் செய்து மெழுகுபத்தி டின்னர் ஏற்பட்டு செய்யலாம். இது சற்று சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

எப்படி பரிசை தேர்வு செய்யக் கூடாது? (How Not To Select A Gift)

பரிசு பொருளை தேர்வு செய்யும் போது, பெரும்பாலோனர்கள் தவறான தேர்வுகளை செய்து விடுகின்றனர். இதனால் சுவாரசியம் குறைவதோடு, அந்த பரிசு பொருளுக்கான மதிப்பும் குறைந்து விடுகின்றது. இத்தகைய தவறுகளை தவிர்க்க, இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்;

கேள்வி பதில்கள் (FAQs)

1. உங்கள் காதலனுக்கு ஒரு சிறந்த பரிசு எது?

உங்கள் காதலனை நீங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளீர்கள் என்றால், அவருக்கு பிடித்த பரிசை நீங்கள் பழகிய நாட்களிலேயே கண்டறிந்து இருப்பீர்கள். எனினும், நீங்கள் தரும் பரிசு அவருக்கு நல்ல நினைவுகளை உண்டாகும் வகையிலும், மகிழ்ச்சியைத் தரும் வகையிலும் இருந்தால், அதுவே சிறந்த பரிசாகும்.

2. காதலர் தினத்திற்கு தர சிறந்த பரிசு எது?

இதனை பொதுவாக குறிப்பிட முடியாது. என்றாலும், உங்கள் இருவருக்கும் எந்த ஒரு பரிசு மகிழ்ச்சியையும், மனதிற்கு புத்துணர்ச்சியையும், உங்கள் அன்பை மேலும் வளர்க்கும் வகையிலும் இருகின்றதோ, அதுவே சிறந்த பரிசாக இருக்கும்.

3. என் கணவருக்கு காதலர் தினத்தன்று எந்த பரிசை தரலாம்?

உங்கள் கணவருடன் நீங்கள் வாழ்ந்த நாட்களில், என்றாவது ஒரு நாள் அவரு தனுக்கு இது பிடிக்கும் என்று ஒன்றை உங்களிடம் கூறி இருப்பார். அதனை நன்கு நினைவுபடுத்தி, அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் அதனை நீங்கள் காதலர் தினத்தன்று பரிசளிக்கலாம்.

4. காதலர் தினத்தன்று என்ன செய்யலாம் என்று சில யோசனைகள்?

காதலர் தினத்தன்று நீங்கள் இருவரும் ஒரு சுவாரசியமான மற்றும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையிலான இடத்திற்கு செல்லலாம். இருவரும் ஒன்றாக உங்கள் வீட்டிலேயே அழகான நேரத்தை பழைய நினைவுகளை அசைப்போட்டும், ஒன்றாக சேர்ந்து சமைத்து உண்டும், மகிழ்ச்சியாக பல நல்ல விடயங்களை பகிர்ந்து நேரத்தை செலவிடலாம்.

5. என் கணவரை காதலர் தினத்தன்று எப்படி ஆச்சரியப்படுத்துவது?

அவருக்கு பிடித்த உணவை சமைத்து, அவருக்கு ஆச்சரியம் தரும் வகையில் வீட்டிலேயே மெழுகுபத்தி டின்னர் ஏற்பாடு செய்து அவர் அலுவலகத்தில் இருந்து வரும் போது, மேலும் ஆச்சரியமூட்டும் வகையில் பரிசு ஒன்றை மறைத்து வைத்து, அவரையே அதனை கண்டு பிடிக்க சொல்லி உங்கள் கனவரி ஆச்சரியமூட்டலாம்.

6. காதலர் தின அட்டையில் என் கணவருக்கு என்ன எழுதுவது?

நீங்கள் கவிதைகள் எழுத வேண்டும் என்று கட்டாயம். இல்லை. எனினும், உங்களால் உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களையும், அன்பையும் கவிதை நடையில் எழுத முடிந்த, அதனை எழுதி அவருக்கு தரலாம். அல்லது உங்கள் மனதில் தோன்றும் அழகான வார்த்தைகளின் தொகுப்பாக அதனை எழுதி காதலர் தின அட்டையை தரலாம்.

7. குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல் எப்படி காதலர் தினத்தை கொடாடுவது?

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தான் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நீங்கள் கொண்டாடலாம். குறிப்பாக இருவரும் அருகில் இருக்கும் பூங்கா செல்லலாம். கடற்கரைக்கு சென்று சிறிது நேரத்தை அமைதியாக மனம் விட்டு பேசி களிக்கலாம், அல்லது வீட்டிலேயே உங்களுக்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டு உங்கள் அழகான நேரத்தை இருவரும் ஒன்றாக செலவிடலாம்.   

மேலும் படிக்க – 

காதலர் தினத்தை அழகான கவிதைகளுடன் கொண்டாடுங்கள்!

Valentines Day Gifts Ideas for Him in Hindi

பட ஆதாரம்  – Shutterstock 

 

Read More From Lifestyle