Food & Nightlife

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம் : ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

Swathi Subramanian  |  Oct 10, 2019
எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம் : ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

வடமொழியில் “திரி” என்றால் மூன்று என்று பொருள். மருத்துவ குணங்கள் மிகுந்த நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் முறையாக பக்குவம் செய்து சூரணம் எனப்படும் பொடியாக தயாரிக்கப்படுவது தான் “திரிபலா சூரணம்” எனப்படும். 

இது அனைத்து மூலிகை சிகிச்சைகளில் மிகவும் ஏற்றதாகவும் மற்றும் சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அற்புதமான இந்த திரிபலா சூரணம் பயன்படுத்தி நாம் பெறும் மருத்துவ பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pixabay

திரிபலா சூரணத்தின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits of Triphala churna)

திரிபலா சூரணம் (triphala) நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வழங்க வல்லது. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். 

செரிமான பிரச்சினைகளை சரி செய்ய (Wards Off Digestive Problems)

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா சூரணம் அற்புதமாக குணப்படுத்துகிறது. குறிப்பாக உணவுப்பாதையில் மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட உதவுகிறது. செரிமான பிரச்னை இருப்பவர்கள் தினமும் திரிபலா சூரணத்தை உணவில் சேர்த்து வர செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். 

மேலும் படிக்க – பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க பெல்ட் அணியலாமா? நன்மைகள் மற்றும் அணியும் முறைகள்!

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது (Improves Blood Circulation)

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க நாம் அன்றாடம் திரிபலா சூரணம் எடுத்து கொள்ள வேண்டும். இது ரத்தத்தைச் சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த சோகையையும் சரிசெய்கிறது. இதனால் தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கிறது.

அழற்சியை குறைக்கிறது (Reduces Inflammation)

திரிபலா சூரணத்தை (triphala) தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் தோன்றும் அழற்சி பிரச்சனைகள் சரியாகும். திரிபலாவில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் உள்ளது. ஆன்டிவைரல், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிகேன்சர் செயல்பாடுகளையும் அதிகம் பெற்றுள்ளது. இதனால் அழற்சி கோளாறு நீங்கும். மேலும் அழற்சியால் உண்டாகும் தோல் பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.

pixabay

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Boosts Immunity)

நாம் ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இன்றியமையாத ஒன்றாகும். திரிபலா சூரணத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களை தாண்டி உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

எடையை குறைக்க (Helpful Weight Loss)

உடல் பருமனானவர்கள் திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன் தரும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து சீரான உடல் எடையைப் பெற உதவுகிறது. திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களை குறி வைத்து திரிபலா செயல்படுவதால் கொழுப்பின் அளவு குறைந்து உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

மூட்டு வலியை நீக்குகிறது (Relieves Bone And Joint Pain)

திரிபலா (triphala) மூலிகையை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் மற்றும் எண்ணெய்கள், ஆர்த்தோக்யூர் ஆயில், ஆர்த்தோக்யூர் டேப்லெட், ஆர்த்தோக்யூர் பவுடர் மற்றும் ஆர்த்தோக்யூர் கிழி போன்ற பல்வேறு மூட்டுவலிகளை பக்க விளைவுகள் ஏதுமின்றிப் போக்கிட உதவுகிறது. திரிபாலா சூரணத்தை தினமும் 5 கிராம் அளவிற்கு எடுத்து அதனை தேனை குழைத்து வலி இருக்கும் இடத்தில் பூசி வர மூட்டு வலி விரைவில் குணமாகும். 

pixabay

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த (Regulates Blood Pressure)

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க  இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது. ஹீமோ குளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது. 

மேலும் படிக்க – அழகிய பெண்கள் என்றால் அது கோவைப்பெண்கள்தான் ! அவர்கள் ஆடைகள் எல்லாமே தனித்துவம்தான் !

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது (Good For Diabetics)

திரிபலா சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை எடுத்து கொள்வதால் நமது கணையத்தினைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மூன்று கிராம் அளவு திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோயின்  “ஹைப்பர்கிளைசீமியா” எனப்படும் அதீத சர்க்கரை நிலை விரைவில் குணமாகும். 

மோசமான சுவாசத்தை குணப்படுத்த (Curing Bad Breath)

நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதனால் நமது சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் குணமாகும். 

pixabay

புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents Cancer)

புது டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின்படி திரிபலா சூரணத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதை குறைக்க திரிபலா உதவி செய்கிறது. அதன்மூலம் புற்றுநோய் மெடாஸ்டேடிஸ் (metastasis) எனும் பெருமளவு புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து உடல்நலனை காக்கிறது.

திரிபலாவின் அழகு நன்மைகள் (Beauty benefits of Triphala)

திரிபலா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்று நமது சரும அழகை காப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

கருவளையத்தை குறைக்கிறது (Reduces Dark Circles)

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையத்தை திரிபலா சூரணம் கொண்டு எளிதாக நீக்கி விடலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா தூளை வாங்கி பாலில் கலந்து கண்களை சுற்றி போட்டு வந்தால் கருவளையம் விரைவில் சரியாகும். மேலும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதிலும் திரிபலா முக்கிய பங்காற்றுகிறது. திரிபலாவை நீரில் கரைத்து அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவி வர கண்கள் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். 

மேலும் படிக்க – சரும அழகிற்கு வாஸ்லினை பயன்படுத்தும் விதம் மற்றும் வீட்டிலேயே வாஸ்லின் தயாரிக்கும் முறை!

சருமத்தை புதுப்பிக்கிறது (Rejuvenates Skin)

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது. தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்தச் சூரணத்தைத் தடவிவந்தால் விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். 

pixabay

முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது (Stimulates Hair Growth)

திரிபலாவில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மைகள் இருக்கிறது. இது ஸ்கால்பில் பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. திரிபலா பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தேய்த்து வரலாம். செரிமான கோளாறுகள் மற்றும் கல்லீரல் செயல்திறன் குறைபாடு காரணமாக கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிடலாம்.

பொடுகை சரிசெய்கிறது (Treats Dandruff)

திரிபலா பொடியை சோற்றுக் கற்றாளை சதையுடன் கலந்து தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர பொடுகு பிரச்சனைகள் குணமாகி முடி உதிர்தல் நின்று விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும் திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும் தலையில் இருக்கும் பொடுகு மற்றும் செதில்கள் முற்றிலும் நீங்கிவிடும். 

pixabay

திரிபலா சூரணம் சாப்பிடும் விதம் (How to Take Triphala)

சித்த மருத்துவத்தின் படி தினம் ஐந்து கிராம் சூரணம் எடுத்து 250 மில்லி கிராம் தண்ணீருடன் கொதிக்க வைத்து 60 மில்லியாக குறைந்தவுடன் அதனை  வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது. இதுதவிர இன்னும் சில வழிமுறைகளில் கூட திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளலாம். அதுகுறித்து இங்கு காண்போம். 

திரிபலா தேநீர் (Triphala Tea)

1 டீஸ்பூன் திரிபலா சூரணத்துடன், ஒரு சிறு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதிக்க விட வேண்டும். கொதி வந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

pixabay

திரிபலா மாத்திரைகள் (Triphala Tablets)

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தலாம். தினம் இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 திரிபலா மாத்திரையை சாப்பிட்டால் போதுமானது. இது உடல் உடல் வலியை நீக்கி புத்துணர்ச்சியை தரும்.  

திரிபலா திரவ சாறு (Triphala liquid extract)

2 டீஸ்பூன் திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்தக் கரைசலை அப்படியே அருந்த விட வேண்டும்.

வீட்டிலேயே திரிபலா சூரணம் செய்வது எப்படி (How To Make Triphala Churna At Home)

திரிபலாவை நாம் வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம். தயாரிக்கும் முறை குறித்து இங்கு விரிவாக காண்போம். 

தேவையான பொருட்கள் : 

கடுக்காய் – 1 கப், 
நெல்லிக்காய் – 4 கப், 
தான்றிக்காய் – இரண்டு கப் 

செய்முறை : 

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்துத் தயார் செய்யப்படும் மருந்துக்குப் பெயர்தான் திரிபலா. இந்த மூன்று காய்களையும் எடுத்து அதிலுள்ள கொட்டைகளை நீக்கி ஒரு நாள் முழுவதும் வெயிலில் நன்கு உலர வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு அவற்றை பொடி செய்துகொள்ள வேண்டும். சூரணம் என்பதற்கு மென்மையான பொடி என்று அர்த்தம். இப்படி தயார் செய்யக்கூடிய திரிபலா சூரணம், 6 மாத காலம் வரை பயன்படுத்த உகந்ததாக இருக்கும். 

twitter

பக்க விளைவுகள் (Side Effects)

நமது அன்றாட உணவு பழக்கத்தில் திரிபலாவை சேர்த்து கொள்வதற்கு முன் அதனால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். திரிபலா சூரணத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில தீமைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து இங்கு காண்போம். 

கர்ப்ப கால சிக்கல்கள் (Pregnancy Complications)

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு திரிபலா பாதுகாப்பானது என்பதற்கு எந்த விஞ்ஞான சான்றுகளும் இல்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் எந்த வடிவத்திலும் திரிபலாவை எடுத்துக்கொள்ள வேண்டாம் அல்லது அதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. அதே போல குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும் கவனம் தேவை. அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவே கொடுக்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு (Diarrhea)

திரிபாலா ஒரு இயற்கை மலமிளக்கியாகும். இதனை மிதமாக எடுத்துக்கொள்ளும் போது இது நன்மை பயக்கும். ஆனால் திரிபலாவின் அதிகப்படியான பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுகடுப்பை ஏற்படுத்தலாம். சிலருக்கு திரிபலா ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதுபோன்ற அறிகுறிகள் உண்டானால் திரிபலா சூரணம் சாப்பிடுவதை நிறுத்தி கொள்வது நலம் தரும். 

pixabay

எரிச்சல் (Burning sensation)

திரிபலா சூரணம் சாப்பிட்டால் சிலருக்கு எரிச்சல் உண்டாகும். குறிப்பாக ஏதேனும் நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த பிரச்னை உண்டாகும். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நீங்கள் சப்பிட்டு கொண்டிருந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நடவடிக்கைகளில் திரிபலா இடையூறு செய்யலாம். எனவே உங்கள் உணவில் திரிபலாவை சேர்த்துக் கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

வாந்தி (Vomiting)

திரிபலா சூரணத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சிலருக்கு வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது. திரிபலா சூரணம் எடுத்து கொள்ளும் போது வாந்தி ஏற்பட்டால் அதனை தவிர்த்துவிடுவது நல்லது. வலுக்கட்டாயமாக சாப்பிடும் போது அதன் பாதிப்புகள் அதிகம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மலச்சிக்கல் (Constipation)

சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும் நபர்கள் திரிபலா சூரணம் எடுத்து கொள்ளவது நல்லது. ஆனால் அதே வேளையில் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கிணங்க, இதனை அதிகமாக நாம் சேர்த்து கொல்லும்போது சில எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதாவது திரிபலாவை அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாக கூட வாய்ப்புள்ளது. திரிபலாவை அப்படியே சாப்பிடுவதும் மலச்சிக்கல் உண்டாக வழிவகுக்கும். நீரில் கரைத்து திரவமாக சாப்பிடலாம்.  

கேள்வி பதில்கள் (FAQ’s)

திரிபாலாவை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? (How much Triphala should I take?)

திரிபலாவை நிர்ணயிக்கப்பட்ட அளவே சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு சூரணம் – 1/2 கிராம், மாத்திரை- ஒன்று, 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு: சூரணம்- ஒரு கிராம், மாத்திரை- 2 என்ற அளவுகளில் சாப்பிட வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை, மதியம், இரவு என்று ஒரு வேளைக்கு ஒரு கிராம் வீதம் மொத்தம் 3 கிராம் அளவில் தினந்தோறும் சாப்பிடலாம்.   

pixabay

திரிபாலா சூரணத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? (What time should I take Triphala?)

திரிபலா சூரணம் சாப்பிட காலை தான் சிறந்த நேரம். இரவில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுவைத்து கொள்ள வேண்டும். காலை எழுந்து அதனை அருந்துவது நல்லது. திரிபாலா தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் அதிகாலை 4:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரையாகும். 

முடி வளர்ச்சிக்கு திரிபலா உதவுமா? (Does triphala help hair growth?)

திரிபலா சூர்ணாவில் சேர்மங்கள் சேதமடைந்த முடியை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் உள்ள மூலப்பொருட்களான ஹரிடாக்கி போன்றவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் உச்சந்தலையில் இருக்கும் பூஞ்சைகளை அளிக்கும் சக்தி பெற்றது. அனைத்து வகையான நோய் தொற்றுகளையும் நீக்கி முடி உதிவை சரிசெய்கிறது.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Food & Nightlife