Beauty

திருமண பட்டுப் புடவைகளின் வகைகள் – உங்கள் திருமணத்திற்கு பட்டுப் புடவை வாங்கி விட்டீர்களா?

Meena Madhunivas  |  May 17, 2019
திருமண பட்டுப் புடவைகளின் வகைகள் – உங்கள் திருமணத்திற்கு பட்டுப் புடவை வாங்கி விட்டீர்களா?

பட்டு(pattu) புடவைகள் என்று சொல்லி விட்டாலே ஒரு கணம் திரும்பி பார்க்காத பெண்களே இருக்க மாட்டார்கள். என்ன தான் இன்றைய மாடர்ன் உலகத்தில் பெண்கள் வித விதமாக ஆடைகள் அணிந்தாலும், புடவை என்று வந்து விட்டால், சிறு புன்னகை அவர்கள் முகத்தில் வெக்கத்தோடு எட்டிப் பார்க்கத்தான் செய்யும்.

பெண்களுக்கு என்றுமே புடவைகள் மீது ஒரு மோகம் உள்ளது. எத்தனை ஆடைகள் இருந்தாலும், அனைத்துப் பெண்களிடமும் குறைந்த பட்ச எண்ணிக்கையிலாவது புடவைகள் நிச்சயம் இருக்கும். அதிலும் குறிப்பாக பட்டுப்(pattu) புடவை என்று சொல்லி விட்டால் வேறு என்ன சொல்வதற்கு இங்கு இருக்கின்றது.

பட்டுப்(pattu) புடவைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றது. இது பட்டுப்(pattu) பூச்சியில் இருந்து எடுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட நூல்களினால் நெய்யப் படுகின்றது. இந்த பட்டின் ஜொலி ஜொலிப்பும், அதற்கெனத் தேர்தெடுக்கப் படும் நூலின் நிறமும், ஒருவரின் கற்பனையையும் கடந்து செல்கின்றது. ஒவ்வொரு புடவையிலும் ஒரு விசேஷம் உள்ளது.

பட்டுப்(pattu) புடவை நம் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எந்த சுப காரியங்கள் ஆனாலும், மகிழ்ச்சியான நிகழ்ச்சி என்றாலும், அதில் பட்டு இல்லாமல் இருக்காது. இளம் வயது பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை அனைவரும் பட்டுப்(pattu) புடவையை பெரிதும் விரும்புகின்றனர். பட்டுப் புடவைகள் விலை அதிகமானது தான், என்றாலும் அதற்காக நீங்கள் செய்யும் செலவில் ஓர் அர்த்தமும், மதிப்பும் நிச்சயம் இருக்கும்.

ஒரு நல்லத் தரமான பட்டுப்(pattu) புடவை 6௦௦ ஆண்டு காலம் வரை நல்ல நிலையில் இருக்கும். எனினும், அதற்கு உங்களது பராமரிப்பும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது ஒரு நல்ல முதலீடு என்றே சொல்லலாம்.  

சமயம் பார்த்து கமலை பலி வாங்கிய காயத்ரி! வச்சு செய்றதுன்னா இது தான் போல

பல வகை பட்டுப்(pattu) புடவைகள்

இந்தியப் பெண்களுக்கு பட்டுப்(pattu) புடவை எப்போதும் ஒரு விருப்பமான ஆடையாகும். அதை கட்டிய உடன் அந்த பெண் கூடுதலான அழகோடும், நல்லத் தோற்றத்தோடும் இருக்கிறாள். இது அவளுக்கு மட்டும் அல்லாமல் அவளது குடும்பத்தினர்களுக்கும் பெருமையை சேர்க்கின்றது.

இந்தியாவில் பல வகைப் பட்டுப்(pattu) புடவைகள் கிடைக்கின்றது. அவை ஒவ்வொன்றிக்கும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள் உள்ளது. அவற்றை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் விருப்பத்திற்கேற்ப பட்டுப்(pattu) புடவைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்காக, இங்கே பல வகை பட்டுப்(pattu) புடவைகளை பற்றின சுவாரசியமான தகவல்கள்:

காஞ்சீவரம் பட்டு(pattu) புடவை
காஞ்சீவரம் பட்டுப்(pattu) புடவைகள் மிக பாரம்பரியமான ஒன்று. இதன் சரித்திரம் பல ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து வருகின்றது. இது ஒரு சிறப்பானத் தரம் வாய்ந்த பட்டுப் புடவை. இது தமிழ்நாட்டிற்க்கே உரிய அடையாளத்துடன் நெய்யப் படுகின்றது. காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் என்றாலே அது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும். இது ஒருவரின் அந்தஸ்த்து, கௌரவம் மற்றும் அவரின் செல்வாக்கை பிரதிபலிக்கின்றது. தங்க ஜரிகை மற்றும் வெள்ளி ஜரிகையோடு உங்கள் விருப்பத்திற்கேற்ப நெசவு செய்யப் படுகின்றது. இதனை தங்க நகை ஆபரணங்களுடன் அணியும் போது அந்தப் பெண் மிக அழகாகத் தோன்றுவாள் என்பதில் சந்தேகம் இல்லை. புது மணப் பெண்ணுக்கு இந்த காஞ்சீவரம் பட்டுப் புடவை ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

பைதானி பட்டுப்(pattu) புடவைகள்
இது மகாராஷ்டிராவில் தயாரிக்கப் படுகின்ற மிக அழகான பட்டுப் புடவையாகும். இவை பெரும்பாலும் வெளிர் நிறங்களில் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, பச்சை, மஞ்சள், ஊதா போன்ற நிறங்களில் இந்த பட்டுப்(pattu) புடவை கண்ணைக் கவரும் வகையில் தயாரிக்கப் படுகின்றது. இதில் குறிப்பாக பூக்கள் மற்றும் பறவைகளின் வடிவங்கள் பயன் படுத்தப் பட்டிருக்கும்.

முகா பட்டுப்(pattu) புடவைகள்
இந்த பட்டுப்(pattu) புடவைகள் பெரும்பாலும் அஸ்ஸாம் நாட்டில் தயாரிக்கப் படுகின்றது. இந்த விலை உயர்ந்த புடவைகள் மஞ்சள், போன்ற கண்ணைக் கவரும் வெளிர் நிறங்களில் தயாரிக்கப் படுகின்றது. இந்த புடவைகளுக்கென்று ஓர் இடம் சந்தையில் உள்ளது.

கோனார்ட் பட்டுப்(pattu) புடவைகள்
இந்த பட்டுப் புடவைகள் தமிழ்நாட்டில்த் தயாரிக்கப் படுகின்றது. இவைகளை கோவில் புடவைகள் என்றும் கூறுவார்கள். இதன் ஜரிகையில் யானை, மயில், போன்ற குறிப்பிடத்தக்க வடிவங்கள் பயன் படுத்தப் பட்டிருக்கும். இவை குறிப்பாக திருமணத்திற்க்காக தயாரிக்கப் படுகின்றது.

சந்தேரி பட்டுப்(pattu)புடவைகள்
இந்த பட்டுப் புடவைகள் மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றது. அனைத்து வயது பெண்களும் இந்த புடவைகளை விரும்பி உடுத்துவார்கள். இது பட்டுப் புடவைகளின் வரிசையில் பெண்கள் விரும்பி வாங்கக் கூடிய ஒரு வகையாக உள்ளது. பெரும்பாலும் வட இந்தியப் பெண்கள் இந்தப் புடவைகளை விரும்பி வாங்குவார்கள்.

துசர் பட்டுப்(pattu) புடவைகள்
இந்த பட்டுப் புடவைகள் மேற்கு வங்காளத்தில் பிரபலமாக உள்ளது. இது அங்குள்ள பழங்குடியினர்களால் நெசவு செய்யப் படுகின்றது. இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக இந்த புடவையை திருமண நாட்களுக்கு பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த புடவைகள் அழகான வடிவம் மற்றும் நல்ல நிறங்களில் கிடைக்கின்றது.

வனாரசி பட்டுப்(pattu) புடவைகள்
இந்த பட்டுப் புடவைகள் விலை உயர்ந்த ஒரு வகையாக உள்ளது. காஞ்சீவரம் புடவைகளுக்கு அடுத்தப்படியாக இந்த வனாரசி பட்டுப் புடவைகளுக்கு அதிக விற்பனை உள்ளது. இந்தப் புடவைகள் தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் தயாரிக்கப் படுகின்றது. இதன் டிசைன் பிரத்யேகமானதாகவும், இதன் நிறங்கள் கண்ணைக் கவரும் விதத்திலும் இருக்கும். இந்த பட்டுப் புடவைகளுக்கு பெண்களிடையே தனி டிமான்ட் உள்ளது.

பளுச்சரி பட்டுப்(pattu) புடவைகள்
இந்த புடவைகளுக்கு ஒரு ராஜ தோரணை உள்ளது. இவைகள் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் படுகின்றது. இந்த புடவைகளின் அழகான வடிவங்கள் மற்றும் நிறங்கள் உங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் வகையில் இருக்கும்.


முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!

காஞ்சீவரம் பட்டுப்(pattu) புடவைகளின் சிறப்பு அம்சங்கள்

பட்டுப் புடவை என்று வந்துவிட்டாலே அனைவரது நினைவிலும் முதலில் தோன்றுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள். பாரம்பரியமான வடிவங்களில் இருந்து இன்று மாடர்ன் டிசைன்களிலும் கிடைக்கின்றது. சாமூத்திரிக்கா பட்டு, வசுந்தர பட்டு என்று பல பெயர்களிலும், வகைகளிலும் இந்த பட்டுப் புடவைகள் கிடைக்கின்றது.

இந்த காஞ்சீவரம் பட்டுப்(pattu) புடவைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே மேலும் பல தகவல்கள்

எப்படி பட்டு(pattu) புடவைகள் வாங்குவது?

பட்டுப் புடவைகளை பற்றித் தெரிந்து கொண்ட பின், இப்போது எப்படி சரியான பட்டுப் புடவையை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப தேர்ந்தெடுப்பது என்று பார்க்க வேண்டும். சரியான தேர்வு உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கும் ஓர் மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா

உங்களுக்கு உதவ இங்கே, எப்படி சரியான பட்டுப்(pattu) புடவையை தேர்ந்தெடுப்பது என்று சில குறிப்புகள்:

இந்த தகவல்கள் உங்களுக்கு ஒரு நல்ல பட்டுப் புடவையை வாங்க உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம். நீங்கள் நல்ல தரமான மற்றும் சரியான விலையில் காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும் என்று எண்ணினால், சரியான கடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக காஞ்சீவரத்தில்  இருக்கும் கூட்டுறவு நெசவு தரி ஆலை, அரசு கூட்டுறவு சமூகக் கடைகள் போன்றவற்றில் நீங்கள் தரமான பட்டுப் புடவைகள் வாங்கலாம்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.

Read More From Beauty