Beauty

ஹேர் கட் செய்ய போகும் பெண்களுக்கு : முக அமைப்பிற்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுங்கள்!

Swathi Subramanian  |  Sep 27, 2019
ஹேர் கட் செய்ய போகும் பெண்களுக்கு  : முக அமைப்பிற்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுங்கள்!

பொதுவாக பெண்கள் வெளியில் செல்லும் போது தமது ஹேர் ஸ்டைலில் (hair) அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தமது முக அமைப்பிற்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலில்  செய்யத்தெரிவதில்லை. இதனால் அவர்களுடைய முக அழகே கெட்டுவிடுகின்றது. 

ஹேர் ஸ்டைலில் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் பொருந்தக்கூடியவாறு இருக்கின்றது. எந்த முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் பயன்படுத்தினால் அழகாக இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அதற்கேற்ப உங்களை அழகாக்கி கொள்ளலாம். 

நீள்வட்ட முகம் உடையவர்கள்

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர்,போனி டைல் போன்ற சிகை அலங்காரங்கள் மிக அழகாக இருக்கும். ஆனால் தலையில் நடுவாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். அப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றும்.  நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். 

pixabay

சதுர முக வடிவம் உடையவர்கள்

சதுர முக வடிவமுடையர்களிற்கு நீளமான கூந்தல் (hair) மிகவும் நன்றாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி செய்யவேண்டும். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். குட்டை முடியாக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால் கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு அதிக அழகை கொடுக்கும்.

பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !

வட்ட முக வடிவம் உடையவர்கள்

வட்ட முகமுடையவர்கள் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்து கொள்ளலாம்.  லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வு செய்யலாம்.

pixabay

ஹார்டின் வடிவ முகம்

ஹார்டின் வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கு, நெற்றி சற்று பெரியதாகவும், தாடை சிறியதாகவும், வளைவுகளுடனும் இருக்கும். இவர்களுக்கு ஃப்ரின்ஜ் கட் ( fringe cut), ஃப்ரென்ட் பேங்ஸ் ( front bangs) எனப்படும் நெற்றியின்மீது முடி (hair) படுவது போன்ற ஹேர்கட் பொருத்தமாக இருக்கும். இந்த ஃப்ரின்ஜ் கட், ஃப்ரென்ட் பேங்ஸ் இரண்டிலுமே ஸ்ட்டிரைட் கட், ஒன் சைடு கட், டபுள் சைடு கட் என வகைகள் உள்ளன. இதில் உங்களுடைய ஸ்டைலுக்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்துகொள்ளலாம். 

உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

முக்கோண வடிவ முகம்

நெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ’ கட் அல்லது `வி’ கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.

pixabay

ஹேர் கட் செய்யப் போவதற்கு முன்னர் பின்பற்றவேண்டிய டிப்ஸ்…

pixabay

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Beauty