Food & Nightlife

பாரம்பரிய உணவான நாவூரும் சுவையான குழி பனியாரம்!

Mohana Priya  |  Apr 19, 2019
பாரம்பரிய உணவான நாவூரும் சுவையான குழி பனியாரம்!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமான ஒனறு குழி பனியாரம்(paniyaram). இன்று இதை செய்வதற்கு நேரம் இல்லாததால் இந்த வகை உணவுகள் காலத்தோடு கரைந்து மறைந்து விட்டன. இப்போது எல்லாரும் விடுமுறையில் பாட்டி தாத்தா வீட்டில் இருப்பீர்கள் என்றால் உங்கள் பாட்டியிடம் சொல்லி சூடான குழிப் பனியாரம்(paniyaram) செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் பள்ளி ஆரம்பமாகி விட்டால் கட்டாயம் உங்கள் வீடுகளில் இது போன்ற உணவு கிடைக்காது. வழக்கம் போன்று நீங்கள் தினமும் உண்ணும் இட்லி தோசை தான். பிடிக்குதோ இல்லையோ அதை தான் நீங்கள் சாப்பிட்டு ஆக வேண்டும். எனவே விடுமுறையில் இருக்கும் போது உறவினர்களிடம் பெற்றோர்களிடமும் இந்த குழி பனியாரம்(paniyaram) ரெசிப்பியை காமித்து செய்து தர சொல்லி சாப்பிட்டு விடுங்கள்.


தயாரிக்கும் நேரம் – 20 நிமிடங்கள், சமைக்கும் நேரம் -8 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

அரிசி – 500 கிராம்

வேகவைத்த அரிசி- 150 கிராம்

உளுந்து – 125 கிராம்

அரைத்த தேங்காய் – 25 கிராம்

கடுகு – 2.5 கிராம்

முந்திரி – 10 கிராம்

சென்னா – 5 கிராம்

எண்ணெய் – 15 மி.லி

கரிவேப்பிலை – 2.5 கிராம்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – 5 கிராம்

பச்சை மிளகாய் – 5 கிராம்

குழி பனியாரம்(paniyaram) செய்முறை

அரிசி, வேகவைத்த அரிசி, உளுந்து ஆகியவற்றை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்

நன்கு கழுவியவுடன், தனண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

ஊறவைத்த பொருட்களை அரைத்து, மாவு தயாரிக்கவும்

அரைத்த மாவை வெது வெதுப்பான பகுதியில் மூன்று மணி நேரம் வைக்கவும்

இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளவும்

மூன்று மணி நேரம் கழித்து, மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

கடாயில், எண்ணெய் ஊற்றி, கடுகு, சென்னா,அரைத்த தேங்காய், நறுக்கிய பொருட்களை சேர்க்கவும்

தேங்காய் கலவை மாநிறம் ஆகும் போது, கடாயை இறக்கவும்

மாவுடன் நறுமணப் பொருட்களை சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்

குழிபனியாரக் கடாயில், எண்ணெய் ஊற்றி, மாவை ஊற்றவும்

ஒரு பக்க பனியாரம்(paniyaram) வெந்தவுடன், இன்னொரு பக்கம் திருப்பி போடவும்

குறைந்த வெப்பத்தில், சமைக்கவும்

இந்த அளவு மாவுடன், 42 பனியாரங்களை(paniyaram) செய்யலாம்

இனிப்பு குழி‌ப் பனியாரம்(paniyaram) செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிதுதா‌ன். ஆனா‌ல் சுவையோ அ‌திக‌ம். செ‌ய்துதா‌ன் பாரு‌ங்களே‌ன்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்

அவல் – அரை கப்

வெல்லம் – ஒ‌ன்றரை கப்

ஏலக்காய் – கா‌ல் டீஸ்பூன்

நல்லெண்ணெய் – சுடுவதற்கு

செய்முறை :

1. அரிசியையும், அவலையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி தனியாக ஊற வைக்கவும்.

2. இர‌ண்டையு‌ம் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தையும் போட்டு அரைக்கவும்.

3. ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். இ‌ட்‌லி மாவு பத‌த்‌தி‌ற்கு இரு‌க்க வே‌ண்டு‌ம்.

4. பனியாரம்(paniyaram) சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றவும். 

5. மாவு அடிப்பகுதியில் வெந்ததும், குச்சி அல்லது ஸ்பூன் உதவியால் திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

அ‌வ்வளவுதா‌ன், சூடா‌ன, சுவையான பனியாரம்(paniyaram) தயா‌ர்.

வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்

ஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்!

வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Food & Nightlife