நீங்கள் தினம் அலுவலகம் செல்லும் பெண்ணா? தினம் தினம் என்ன ஆடை அணிவது என்று தெரியவில்லையா? ஒரே குழப்பமாக இருக்கிறதா? தினம் நீங்கள் புதுமாதிரியான நவீன தோற்றத்தில் தெரிய, மேலும் இப்போதைய புதிய ட்ரெண்டில் இருக்க, சமந்தா விடம் இருந்து குறிப்புகள் எடுங்கள். எந்த டாப்பிற்கு எந்த கீழ் ஆடை அணியலாம், எந்த ஆடைகளுக்கு பிளேசர் அணிந்தால் நன்றாக இருக்கும், எந்த நிறத்தில் அணிந்தால் ஸ்டைலாக தெரிவீர்கள் , மேலும் இதற்கு சிகை மற்றும் காலணிகள் என்னென்ன தேவை என பல விஷயங்களை நாம் இதில் பார்க்கலாம்.
சுருக்கமாக –
உங்கள் அலுவலகத்திற்கு தேவையான பிரதான நவீன ஆடைகள் –
- கருப்பு மற்றும் சாம்பல் நிற பிளேசர் ஜாக்கெட்,
- கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஒரு கிராப் தாப் அல்லது டி-ஷர்ட் ,
- ப்ளூ ஜீன் ,
- நுட பம்ப் ஷூஸ்/ஹீல்ஸ் (pump shoes/heels)
இவைகளை நீங்கள் அதிகம் உபயோகிக்க போறீர்கள். அதனால், ஏதேனும் ஒரு நல்ல பிராண்டாக வாங்குவது முக்கியம்.
ப்ளாக் அண்ட் பிரவுன் ஸ்டைல் :
உங்களுக்குள் இருக்கும் பாஸ் லேடியை தட்டி எழுப்பும் விதத்தில் இருக்கும் இந்த லுக்…சமந்தா இதில் கருப்பு மற்றும் பிரவுன் நிற ஆடைகள் அணிந்திருக்கார். இது போல் நீங்களும் முயற்சி செய்ய – ஒரு கருப்பு கிராப் டாப் அணிந்து, ஒரு பிராண்டட் ப்ளேசர் உடன் ஒரு ஹனி கலர் பலாஸோ போட்டால் நீங்களும் ஒரு கிளாசியான லுக்கிற்கு ரெடி! இத்துடன் ஒரு டாங்க்லிங் காதணி ( அது மோல்ட் மெட்டாலிக் ஆகா இருந்தால் இன்னும் ஸ்டைலிஷ் ஆகா இருக்கும்) மற்றும் ஒரு லூஸ் பெல்ட் அணிந்து பாருங்கள். உங்களுக்கும் சமந்தாவை போல் அழகுடன் தன்னம்பிக்கை கூடி வரும்!
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது –
வுமன் பிரவுன் சாலிட் ஸ்ட்ராயிட் பலாஸோ (Rs.599)
வுமன் ப்ளாக் அண்ட் வைட் சிங்கில் பிரஸ்டேட் வைட் ப்ளேஸிர் (Rs.698)
வைட் பியுட்டி :
வெள்ளை – டைடு விளம்பரத்துல வர புயூர் வைட் கிடையாது! லைட்டா ஃபெடெட் வைட் புல் ஹாண்ட் ஷர்ட் எப்போதும் ஒரு அலுவலக பணியாளர் தோற்றத்தை அளிக்கும். கருப்பு நிற பொத்தான்கள் இதில் இன்னும் சிறப்பு. இதற்கு நீங்கள் ஒரு பலாஸோ அல்லது பெல் பாட்டம் பேண்ட் அணிந்தால் இந்த தோற்றத்தை நீங்கள் மிக அருமையாக முடிக்கலாம். ஒரு கிளாஸ்ஸி லுக்கிற்கு ஏதேனும் ஒரு லெதர் அல்லது சின்தடிக் பெல்ட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். சைடு வாக்கு எடுத்து பஃரீ ஹேர் விட்டால் சமந்தாவை போல் ஒரு கூல் லுக் அளிக்க உதவும். இதற்கு காலனிகளில் நுட் பாயிண்டெட் ஹீல்ஸ் மட்டுமே சிறந்தது.
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது –
வைட் அண்ட் ப்ளாக் ஸ்ட்ரைட் வைடு லெக் பலாஸோ (Rs.1539)
வைட் செக்ட் குலோட்ஸ் (Rs.762)
ஜீன் வித் பிளேசர் ஜாக்கெட் –
இப்போது ட்யூப் டாப்பை அணிந்து அதற்கு மேல் ஒரு வண்ணமிக்க பிளேசர் அணிவதுதான் ஃபேஷன்.அது வெளியே செல்லும்போது அணிந்து கொள்ளுங்கள். இப்போது நாம் அலுவலகம் அல்லவே செல்லப்போறோம்… அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கருப்பு அல்லது சாம்பல் நிற பிளேசர் ஒன்றை தேர்ந்தெடுங்கள். இதை நீங்கள் ஒரு பிராண்டட் பிளேசர் ஆக வாங்கினால் நல்லது. ஏனெனில், இது உங்களுக்கு நீண்ட நாள் கை குடுக்கும். இப்டி ஒரு லுக்கில் தான் சமானதா இருக்கிறார் . இதற்கு நீங்கள் ஹீல் ஷூஸ் அணிந்தால் நன்றாக இருக்கும். மேலும் ஒரு கருப்பு நிற பெல்ட் இதில் கம்பீரமான தோற்றம் அளிக்க உதவும்.
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது –
பட்டன்ட் பிரண்ட் பிளைட் ப்ளேசற் (Rs.1,562)
வுமன் ப்ளாக் ஸ்ட்ரைப்ட் ட்யூப் டாப் (Rs.749)
கோடிட்ட சூட் –
இப்போதெல்லாம் அலுவலகத்தில் குர்தி – பேண்ட் மட்டும் இல்லாமல், பெண்கள் விதவிதமாக ட்ரெண்டிற்கேற்ற மாதிரி ஆடைகள் அணிந்து வருகிறார்கள். நீங்களும் அதை போல் முயற்சி செய்து பாருங்களேன்! இதில் சமந்தா அணிந்திருப்பதை போல், ஒரு கோடிட்ட சூட் ஒன்றை அணிந்து செல்லுங்கள். உங்கள் அலுப்பை நீக்க நீங்கள் இதை போல் பல நிற சுட்களை (பழுப்பு, வெள்ளை, கருப்பு, சாம்பல், கருநீலம்) அணிந்து செல்லலாம். இதற்கு மாட்சிங்காக ஒரு கழுத்தணியும் அணியலாம். மேலும், ஒரு நுட அல்லது கருப்பு நிற காலனி இதற்கு சரியான பொருத்தம். எப்போதும் உங்கள் கழுத்தணியும் உங்கள் காலணியையும் ஒரே நிறத்தில் அணியுங்கள். இதில் ஒரு சீருடை தெரியும்.
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது –
ப்ளூ ஸ்ட்ரைப்ட் பிராண்ட் ஓபன் ப்ளேசர் (Rs. 569)
நவி ப்ளூ அண்ட் வாய்ட்டே ஸ்ட்ரைட் பிட் சிகரட் டிரௌசர் (Rs.599)
நவி ப்ளூ அண்ட் பீஜ் ஸ்ட்ரைட் பிட் கிராப்ட் டிரௌசர் (Rs.824) ( இதை நீங்கள் ஏதேனும் ஒரு ப்ளாக் ப்ளேசர் – கிராப் டாப் உடன் அணிந்து செல்லலாம் )
அதே சூட் – வேறு வடிவத்தில் :
அதே ஆபீஸ் சூட் ஆனால் நிறமும் வகையும் வேறு. நான் முன்னே சொன்னமாதிரி, பெண்களுக்கு ஆடைகளில் எல்லையே இல்லை! நீங்கள் உங்கள் உடல் வடிவத்திற்கு ஏற்ற உடை, நிறம் மற்றும் அணிகளங்களை அணியலாம். அப்படி ஒரு லுக் தான் இந்த வெளிர் நீல சூட்டில் சமந்தா நமக்கு அளித்திருக்கிறார். இதற்கு, ஒரு த்ரீ ஸ்டேப் கழுத்தணி ஒரு பிலால் கவிராஜ் தரும். தற்கு நீங்கள் ஒரு ஹை போனி ஹேர் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிவது சிறந்தது! கீழே உங்கள் பேண்டை சுருட்டி விட்டால் நீங்கள் இன்னும் உயரமாக தெரிவீர்கள். இது உங்களின் உண்மையான உயரத்தை மறைக்கும் தந்திரம்!
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது- பாக்கெட் பிரண்ட் ப்ளேசர் (Rs.1,984)
அலுவலகத்தில் பார்ட்டி லுக் –
அலுவலகத்திலும் பண்டிகை நாட்கள், விழா கால பார்ட்டி என பல நாட்கள் வரும். அதில் நீங்கள் ஏன் ஒரு சாதாரண லுக்கில் செல்லவேண்டும்? நீங்கள் எப்போதும் அணியும் அதே பலாசோவில் ஒரு சின்ன ட்விஸ்ட்! துணியின் டிசைனை கவனியுங்கள். பார்ட்டி நாட்களில் இதுபோல் ஒரு பளபளக்கும் பலாஸோ மற்றும் வெள்ளை நிற ஷார்ட் மிகவும் சிறந்த தோற்றத்தை அளிக்கும். இதில் நீங்கள் ஆபீஸ் வெற் மற்றும் பார்ட்டி வெற் இரண்டையும் கவர்ந்து விடலாம். மேலும் இதை இன்னும் அழகாக்க, ஒரு டாங்க்ளிங் காதணி உங்களுக்கு தேவை.
சமந்தா உங்களுக்கு போதுமான அளவிற்கு டிப்ஸ் கொடுக்கிறார் என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்! நன்றி சமந்தா!
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது – ப்ளாக் ரேயான் பலாஸோ (Rs.1147)
குர்தி மற்றும் பலாஸோ –
கடைசியாக நாம் குர்தி ஸ்டைலிற்கு வருவோம். இது ஒரு மிக எளிமையான தோற்றம். இதில் நீங்கள் ஏதேனும் ஒரு குர்தி உடன் உங்கள் பலாஸோவை மேட்ச் செய்து அணியலாம். மேலும் பிரீ ஹேர் ஸ்டைல் (style) உடன் ஒரு பம்ப் ஹீல்ஸ் சேர்த்தால் மிக அருமையாக இருக்கும் !
இதுபோல் நீங்களும் அணிந்து அசத்த ஆசையா?
POPxo பரிந்துரைக்கிறது –
வுமன் ப்ளூ எம்ப்ரோய்டர்ட் ஸ்ட்ரைய்ட் குர்தா (Rs.599)
வுமன் ப்ளூ அண்ட் ஆப் வைட் பிலேர்ட் பலாஸோ (Rs.645)
என்ன பெண்களே? இனி நீங்களும் ஆபீஸிற்கு ஒரு ட்ரெண்டி (trendy) தோற்றத்தில் செல்ல தயாரா?
படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Fashion
அழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்!
Meena Madhunivas
அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு
Meena Madhunivas