வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (Tamilnadu). இது நம் மாநிலத்தின், விருந்தோம்பல் சிறப்பை எடுத்து கூறும் கூற்று. இது வீட்டுல மட்டும் அல்ல,ரோட்டில்லும் கூட என புரிய வைக்கும், இங்கு காணப்படும் தெரு உணவுகள்(street food) !
சுட சுட இட்லி தேங்காய் சட்னி –
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
குறைந்த விலையில் தரமான உணவு பெறலாம்.தெரு உணவில், பட்டியலில் முதல் இடம், இட்லி கடைகள் தான். அரிசி, உளுந்து, ஊற வைத்து அரைத்து, அதனை புளிக்க வைத்து ஆவியின் சுட்டு எடுக்க வேண்டும். இதற்கு சைடு டிஷ்சாக, துவரம் பருப்பு சாம்பார் அதோடு தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி புதினா சட்னி என மூன்று வண்ணம் சட்னி வேறு.
சுட சுட ஆவியின் வேக வைத்த இட்லி என்றால் ஓகே! அதோட மணக்கும் சாம்பார், கலக்கும் சட்னி என்றால் டபுள் ஓகே!! இவை 10-30 ரூபாய்க்கு திருப்தியாக சாப்பிடலாம்.
அடுத்தது, வடை கடை –
உழைக்கும் மக்களின் உணவு இங்கு வடை தான். சிற்றுண்டியாக காணப்படும் வடைகள், பல மக்களின் பசியை போக்க உதவும். உளுந்தம் பருப்பு கொண்டு அரைத்து எண்ணையில் சுட்டு எடுத்தால் உளுந்து வடை. கடலை பருப்பை ஊற வைத்து அரைத்து செய்தால், பருப்பு வடை.வாழைக்காய் சீச்சு கடலை மாவு கரைசல் கொண்டு முக்கி அதை சுட்டு எடுத்தால் பஜ்ஜி.
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
தமிழ் நாட்டில் வடை கடையை கடக்கும் சூழல் அனைவருக்கும் வரும். அப்போது வாசனை கட்டி ஆளை இழுக்கும். வடைக்கு சட்னி பெஸ்ட் பேர்.
நீங்கள் கூலாக… கூழ் –
படத்தின் ஆதாரம் – யூடுப் (youtube)
நாம் மறதியின் காரணமாகவும், வாழ்க்கை மாற்றங்களால் பல விஷயத்தை மறந்துவிட்டோம். அதனால் இன்று பல விளைவுகள், உடல் நலம் கோளாறு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது . இதை சேரி செய்வது – பழங்கால உணவு முறையான கூழ்.
இதனை நாம் மறந்தாலும், தெருவில் இருக்கும் கூழ் கடைகள் நமக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது.கேப்பை கூழ் மற்றும் கம்மங்கூழ்,பருத்தி பால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இவை, சுவையானது. குறைத்து விலையில் நிறைந்த ஆரோக்கியம் கிடைக்க உதவும்.
ஹார்லிக்ஸ் பூஸ்ட் என ஓடும் மக்களுக்கு படிப்பினை தர இக்கடைகள் பெரிதும் உதவும்.
மேலும் படிக்க – பதின்ம வயது பெண்களுக்கான உணவு வகைகள்
ருசியான பிரியாணி –
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
பிரியாணி என்றால் உள்ளம் துள்ளும்.ஹோட்டல் கடைகளில் விற்கும் பிரியாணியின் விலை நமக்கு மிகவும் அதிகம். ஆனால், தெரு கடைகளில் தள்ளு வண்டியில விக்கிற பிரியாணி விலை மற்றும் ருசி மிக சிறப்பு.
முக்கிய வீதியில் ஒரு பிரியாணி கடையை எளிதில் காணலாம். 5 ரூபாய் முதல் ஆரம்பம் ஆகிறது தெருவில் விற்கும் பிரியாணியின் விலை பட்டியல். இவை ருசியோடு, நிம்மதியான மதியம் பசியை போக்க உதவும்.
பிரியாணி என்றால் மேல் தட்டு மக்களின் உணவு என்ற எண்ணத்தை போக்க பெரும் உதவியாக இருந்தது இக்கடைகலே…
மொறு மொறு தோசை –
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
இட்லி எப்படி ஒரு சிறந்த இடம் பிடித்தது,அது போலவே இங்கு தோசைக்கும் சிறப்பு இடம் உண்டு.இட்லிக்கு அறைக்கும் மாவு தான் ஆனால், கொஞ்சம் தண்ணியாக இருக்க வேண்டும்.தோசை கல்லில் சிறிது மாவை ஊற்றி தேய்த்து சுற்றி, எண்ணெய் தெளித்து சுட்டு எடுத்தால் தோசை ரெடி.
இதில் பல வகை உண்டு… நெய் தோசை, பேப்பர் ரோஸ்ட், வெங்காயம் தோசை, மசாலா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கேரட் தோசை, என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இட்லியை போலவே இதுக்கும் சாம்பார், சட்னினு கலக்கல் சைடு டிஷ்யோடு கைக்கு அடங்கும் விலையில் அருமையான உணவு (food) தெருவில் கிடைக்கும் என்றால் அதற்க்கு முக்கிய காரணம் தோசை கடைக்கு கிடைக்கும்.
பில்டர் காபி
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
நம் தமிழர்களை பிரிக்க முடியாத ஒன்று டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம்.நம் வீட்டில் செய்யும் காபி கடையில் கிடைக்கும் பில்டர் காபியை கொண்டு தயார் செய்வோம். ஆனால் தெருக்களில் சைக்கிள் வண்டியில் விற்கும் காபியின் மனமே மனதை கொள்ளைகொள்ளும். காரணம் சுண்ட காய்ச்சிய பாலில் சேர்க்க படும் காபி தூள்.தேர்தெடுக்க பட்ட காபி கொட்டைகளை நன்கு காயவைத்து, எந்த கலப்படமும் இல்லாமல் பக்குவமாக அரைத்து கடை உரிமையாளர்களே தயாரிக்கும் காபி பொடி தான் முக்கியம்.
தெருக்களில் விற்கப்படும் இதன் மனம் சுவை எப்போதும் நெஞ்சில் நிற்கும்.
பஜ்ஜி – போண்டா
படத்தின் ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
தள்ளு வண்டி கடைகளில் கிடைக்கும் பஜ்ஜி, போண்டா பத்தி பேசாம இருக்க முடியுமா??
கடலை மாவில் உப்பு உறைப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்த கலவையில் வாழைக்காய், மிளகாய், போன்றவை முக்கிய பின்னர் எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
மிளகாய் என்றால் நார்மல் மிளகாய் கிடையாது. பஜ்ஜிக்கு என்றே ஸ்பெஷல் பஜ்ஜி மிளகாய் உள்ளது.. லைட் பச்சை நிறத்தில் இருக்கும் இவை கூடுதல் காரம் இருக்காது.தெரு கடைகளில் கிடைக்கும் இவ்வகை பலகாரம் சீப் &பெஸ்ட் ஸ்னாக்ஸ் தான்.
மாலை நேரங்களில், குளிர் மற்றும் மழை நாட்களில் மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவது என்பது பெண்களுக்கு ஒரு கவிதை போல இருக்கும்.
கைக்கு அடங்கும் விலையில் ருசியான உணவை மட்டும் பெறாமல் மன நிறைவு அடைவதற்கு தெருவில் இருக்கும் கடைகள் காரணம்.
இதனால் தான்,சரவண பவனை விட , கையேத்தி பவன் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க – எதை சாப்பிடுவது? நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்
படங்களின் ஆதாரம் – விக்கிபீடியா காமன்ஸ்,பிக்ஸாபே, யு ட்யூப்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi