
வீட்டில் கொலு வைப்பது என்பது சற்று சுவாரசியமான விடயம். இது ஒன்பது(Navarathri) நாட்களும் வீட்டை ஒரு திருவிழாக் கோலமாக ஆக்குவதோடு, கொலு வைப்பவர்களுக்கும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான நிகழ்வாகவே இந்த ஒன்பது நாளும் இருக்கும். எனினும், நீங்கள் முதன் முதலில் கொலு வைக்கப் போகின்றீர்கள் என்றால், உங்களுக்கு பல கேள்விகள் மனதில் எழும். எப்படி படிகளை அமைப்பது, எந்த மாதிரியான பொம்மைகளை வைப்பது என்று மேலும் பல. அப்படி உங்களுக்கு சில யோசனைகள் தேவைப்படுகின்றது என்றால், இங்கே உங்களுக்காக சில குறிப்புகள் தொடர்ந்து படியுங்கள்.
- கொலு வைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய தொடங்கி விட வேண்டும்.
- நீங்கள் எந்த மாதிரியான கொலு வைக்கப்போகின்றீர்கள் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது, உங்களுக்கு பிடித்த தீம்.
- உங்கள் தீமுக்கு ஏற்றவாறு பொருட்களையும், பொம்மைகளையும் தயார் செய்ய வேண்டும்.
- முதலில் வீட்டை நன்கு சுத்தம் செய்து, நீங்கள் கொலு வைக்கப்போகும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- எத்தனை படிகள் வைக்கப்போகின்றீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்
- நீங்கள் கும்பம் வைக்க விரும்பினால், அதற்கு தேவையான பொருட்களையும் தயார் செய்ய வேண்டும்.
- கொலு வைக்க தேவையான பொம்மைகளை தயார் செய்ய வேண்டும்.
- மாயில் தோரணங்களை தலைவாசலிலும், பூசையரை வாசலிலும் கட்ட வேண்டும்.
- பூக்களை கொண்டும் உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம்.
கொலு படிகளை இப்போது நீங்கள் தயார் செய்ய வேண்டும்
- எத்தனை படிகள் மற்றும் எவ்வளவு அகலம் படிகள் வைக்கபோகின்றீர்கள் என்பதற்கு ஏற்ப, வெள்ளை வேட்டி, அல்லது சுத்தமான புடவை அல்லது வேறு நல்ல அகலமான மற்றும் சுத்தமான துணியை படிகளில் விரித்து, ஒரு வடிவத்தையும், அடித்தளத்தையும் உண்டாக்க வேண்டும்
- பொதுவாக மூன்று, ஐந்து, ஒன்பது அல்லது பதினொன்று படிக்கட்டுகள் வைப்பார்கள்
- படிக்கட்டுக்கு முன் அழகான கோலம் போடவும். பின்னர் படிக்கட்டுக்கு அருகில் விளக்கு ஏற்றி வைக்கவும். மின் விளக்குகளையும் அழங்காரதிற்கு பயன்படுத்தலாம்
- படிக்கட்டின் அருகில் பள்ளிக்கூடம், பூங்கா, கிராமம், வயல்வெளி என்று உங்களுக்கு பிடித்த ஒரு தீமை தேர்வு செய்து அதனை அழகாக வடிவமைக்கவும்.
- பூஜைக்குத் தேவையான பிரசாதத்தை தயார் செய்து பூஜை நிவேத்தியதிற்கு வைக்கவும்.
- விருந்தினர்களுக்கு தேவையான தாம்பூலம் மற்றும் பரிசுகளை தயார் செய்து வைக்கவும்.
படிக்கட்டில் நீங்கள் வைக்க வேண்டிய பொம்மைகள்
1 – 3 படிக்கட்டுகள்: இது மேல் இருந்து கீழ் வரும். மேலே முதல் படியில் கலசம் / கும்பத்தை வைக்க வேண்டும். அதன் பின் அடுத்த அடுத்த படிக்கட்டுகளில், மேல் இருந்து கீழ் வரும் முதல் மூன்று படிகளில், கும்பத்திற்கு அடுத்தபடியாக கடவுள்களின் சிலைகள் வைக்க வேண்டும்.
4 – 6 படிக்கட்டுகள்: இந்த அடுத்த 3 படிக்கட்டுகள், மேலே இருந்து கீழ், இதில் சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்களின் சிலைகளை வைக்கலாம். ஒரு
7ஆம் படிக்கட்டு: மேலே இருந்து கீழ் வரும் 7வது படிக்கட்டில் திருமணம் அமைப்புகள் கொண்ட பொம்மைகள், பொங்கல் கொடாட்டத்தை குறிக்கும் பொங்கப் பானை, கரும்பு, என்று அது குறித்த பொம்மைகளை வைக்கலாம்.
8 ஆம் படிக்கட்டு: மேலே இருந்து கீழே வரும் 8ஆம் படிக்கட்டில் செட்டியார் பொம்மை, தலையாட்டி பொம்மை, என்று மனிதர்களின் பல வடிவிலான பொம்மைகளை வைக்கலாம்.
9 ஆம் படிக்கட்டு: இதில் மர பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் வண்ண வண்ண ஆடைகளில் இருக்கும் பொம்மைகள் போன்றவை வைக்கலாம்.
1௦ ஆம் படிக்கட்டு: இதில் விலங்குகள், பறவைகள், மற்றும் பிற உயிரினங்களை வைக்கலாம். யானை, நாய், புலி, குதிரை, கோழி, மயில் என்று பல பொம்மைகளை வைக்கலாம். மேலும் ஊர்வன வகைகளை சேர்ந்த பாம்பு, முதலை போன்றவற்றையும் வைக்கலாம்.
11 ஆம் படிக்கட்டு: இந்த படிக்கட்டில் மரம், செடிகள் போன்றவற்றை வைக்கலாம்.
ஒவ்வொரு படிகளும், இந்த பூமியில் உயிர்கள் உண்டான காலம் முதல் அதன் பரிணாமத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
இந்த ஒன்பது நாள் பூஜையின் போது, அனைவரும் ஒன்று கூடி, வீட்டையும், சுற்றுபுரத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் பூஜை செய்து வரும் விருந்தினர்களுக்கு உணவளித்து, பூக்கள், மற்றும் தாம்பூலம் தந்து மகிழ்விக்க வேண்டும். குழந்தைகளும், பெரியவர்களும் சேர்ந்து கலை நிகழ்சிகளை நிகழ்த்தலாம். இது மேலும் சுவாரசியமாக இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!