Lifestyle

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – தூங்கும் முன் நீங்கள் செய்யவேண்டிய 6 விஷயங்கள்!

Nithya Lakshmi  |  Jul 15, 2019
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – தூங்கும் முன் நீங்கள் செய்யவேண்டிய 6 விஷயங்கள்!

நிம்மதியான தூக்கம் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாகும். நாள் முழுவதும் நீங்கள் ஓடிக்கொண்டே பல வேலைகளை செய்து கொண்டே இருப்பதால் இரவில் ஒரு நிம்மதியான தூக்கம் கிடைத்தால், உங்கள் உடலும் மனமும்  தேவையான ஓய்வை பெறலாம். மேலும் மறுநாள் மீண்டும் உங்கள் வேலைகளை விவேகத்துடன் துவங்கி சிறப்பாக செய்து முடிக்கலாம். சரி, தூக்கம் அவசியம் தான் ஆனால் இரவில் தூங்குவதற்கு முன் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?   மொபைல் ஐ பார்த்துக் கொண்டே அதில் இருக்கும் செய்திகள் மற்றும் வலைத்தளங்களை பார்த்துக் கொண்டே, ஷாப்பிங் செய்துவிட்டு எந்திரிக்க மறுத்து ஏதேனும் வெப் சீரிஸ் பார்த்துக்கொண்டே தூங்கும் (sleep) பழக்கம் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானது. 

ஆழ்ந்த தூக்கம் பெற & மறுநாள் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க:

கீழ் கூறியிருக்கும் விஷயங்களை நீங்கள் செய்து பழகிவிட்டால்  எளிதில் தூங்கலாம், நல்ல ஓய்வு பெறலாம் உங்கள் வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்கலாம்!

1. வேலையின் பட்டியல்

Pexels

மறுநாள் உங்கள் தேவைகள் என்னென்ன, உங்கள் வேலைகள் எவ்வாறு நடக்க வேண்டும் ,அதற்கான பிளான் உங்கள் குறிக்கோள்கள் இவை அனைத்தையும் பட்டியலிட்டு தயார் செய்து வைத்துவிடுங்கள். ஒரு புதிய நாளின் துவக்கம் அதன் முந்தைய நாளின் இரவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது! மாலை நேரங்களை நீங்கள் சரியாக அமைத்து விட்டால்  இதுபோல் மறுநாளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். 

POPxo பரிந்துரைக்கிறது – லைட் அப் யுவர் ஓவ்ன் பாத் நோட்புக் ( ரூ 349) 

2. சுத்தம் செய்வது

வேலைக்கு செல்லும் பெண்மணிகள் தினந்தோறும் அறையை  சுத்தம் செய்வதற்கான நேரத்தை ஒதுக்கி விட முடியாது என்பது தெரிந்த ஒரு விஷயம். வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே கிடைக்கும் அதிலும் அந்நாளில் அலுப்பாகவும்  சோர்வாகவும் நல்லா தூங்கினால் போதும் என்று தோன்றும். இதுபோல் இருக்கும் சமயங்களில் தினமும் இரவில் (bedtime) சிறிது நேரத்தை ஒதுக்கி உங்கள் அறையை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து பழகிக் கொண்டீர்கள் என்றால் அது எப்போதும் எந்த நேரமும் சுத்தமாகவே தோன்றும். இது போல் இருப்பதால் நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் உங்கள் அறையில் தோற்றத்தை பார்த்து நீங்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவீர்கள்.  இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் மற்றும் மகிழ்ச்சியாகவும் வைக்க உதவும்! 

POPxo பரிந்துரைக்கிறது – ஓர்கனைசேர் போர் லிவிங் ரூம் (ரூ 4,159)

3. கொஞ்சம் படிங்க !

Pexels

பள்ளி பருவங்களில் குமுதம், ஆனந்த விகடன் ,குங்குமம், மங்கையர் மலர் என்று பல வார இதழ்களை பாடப் புத்தகங்களுக்கு பதிலாக படித்திருப்பீர்கள் ! அதுபோல் இப்பொழுது நாம் ஏன் செய்யக்கூடாது ? தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உங்கள் மொபைல் போனை பார்ப்பதற்கு பதிலாகவும் அல்லது யூடியூபில் படங்களை பார்ப்பதற்கு பதிலாக அதை தள்ளி வைத்துவிட்டு உங்களுக்கு பிடித்த நாவல் ஒன்றை படித்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இருபது முப்பது நிமிடம் படித்தாலே போதும் உங்கள் மனதுக்கு தேவையான ஓய்வையும் தூக்கத்தையும் எளிதில் அழித்துவிடும் இந்த மந்திர செயல்!

POPxo பரிந்துரைக்கிறது – லைப் இஸ் வாட் யு மேக் இட் (ரூ 80)

4. தண்ணீர் குடிப்பது

ஆம்! தண்ணீர் குடிப்பது அவசியம் தான் ஆனால் அதற்கான நேரத்தில் குடிப்பது மிகவும் அவசியம்.  இரவு நேரங்களில் நீங்கள் அதிகம் தண்ணீரை குடித்து விட்டீர்கள் என்றால் பாத்ரூமுக்கு மூன்று அல்லது நான்கு முறை போக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம் இது உங்கள் தூக்கத்தை நிச்சயம் தொந்தரவு செய்ய உள்ளது. ஆகையால் தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகவே தேவைக்கேற்ப தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்து பல மணி நேரங்களுக்கு உங்கள் உடம்பு ஓய்வில் இருப்பதால் அதற்கு தேவையான தண்ணீரை கொடுப்பது அவசியம். மேலும் டீ அல்லது காபி போன்ற பானங்களை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் குடிப்பதை தவிர்க்கவும். இது தூக்கத்தை வரவிடாமல் தடுத்து மறுநாளுக்கு நீங்கள் பட்டியலிட்டிருக்கும் திட்ட ங்கள் அனைத்தையும் தாமதமாகிவிடும். 

POPxo பரிந்துரைக்கிறது – ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் (ரூ 499)

5. சரும பராமரிப்பு

Pexels

நாள் முழுவதும் நீங்கள் வெயிலில் சென்று வருவதால் உங்கள் சருமத்தில் ஏற்படும் அசுத்தங்கள் தேவையற்ற எண்ணைத்தன்மை இவை அனைத்தையும் அகற்றுவது மிக அவசியம். ஆகவே இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பது முக்கியம். ஒரு சிறு பஞ்சில் ஏதேனும் ஒரு கிளென்சரால் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை சுத்தப்படுத்தி மாய்ச்சுரைசரை தடவி விட்டு உறங்குவதால் உங்கள் சருமத்திற்கு தேவையான ஓய்வை இரவில் இது அளிக்கிறது. 

POPxo பரிந்துரைக்கிறது – ஹிமாலய ஹெர்பல்ஸ் ரெபிரெஷ்ஷிங் கிளென்சிங் மில்க் (ரூ 71)

6. இரவில் ரிலாக்ஸ் தெரப்பி

என்னது தூங்கும் போது உடற்பயிற்சியா என்று சிந்திக்கிறீர்களா?  உடல் தசைகள் ஓய்வெடுக்க உங்கள் உடம்பிற்கு தேவையான மிதமான பயிற்சிகளை ( அல்லது தியானம்)  இரவில் 5 நிமிடங்களுக்கு படுப்பதற்கு முன் செய்ய வேண்டும்.பழசான, சப்த பத்த கோனாசனா, பவண்முகதாசனா போன்ற யோகா ஆசனங்களை முயற்சிக்கலாம்.   நாள் முழுவதும் வேலையில் ஈடுபட்டிருப்பதால் உங்கள் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும். அதை தளர்வான நிலைக்குக் கொண்டுவந்து நன்றாக ரிலாக்ஸ் செய்து தூங்குவதற்கான வழியை கொடுக்கவேண்டும். 

POPxo பரிந்துரைக்கிறது – ஷீன் லெட் மீ ஸ்லீப் (ரூ 964)

 

உங்கள் மனதை அமைதியாக்கி நிம்மதியாகத் தூங்க வைக்கும் இயற்கை எண்ணெய் வகைகள்

பட ஆதாரம் – Pexels, Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More From Lifestyle