கணவன் மனைவிக்கு(partner) இடையே சண்டை வருவது சகஜம் தான். ஆனால் எப்படி சமாதானம் ஆவது என்பதில் தான் இருக்கிறது இருவருக்கமான புரிதல். வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் போது பல்வேறு பிரச்சணைகளை சந்திக்க நேரிடம். மனைவி(partner) பாடு இதில் மிகவும் சிரமமான ஒன்று. ஏன் என்றால் தனது வீட்டை விட்டு உறவுகளை விட்டு கனவனை நம்பி வந்திருப்பால். அவளை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவனிடம் தான் உள்ளது.
சண்டைக்கு பிறகு சமாதானம் ஆவது எப்படி?
- உங்கள் மனைவியை(partner) பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.
- உங்கள் மனைவி(partner) தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.
- முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம்(partner) பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி(partner) கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.
- வேலைக்கு செல்லும் மனைவியாக(partner) இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.
- மனைவி(partner) செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை(partner) அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.
- ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம்(partner) கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
- மனைவி(partner) செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின்(partner) பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- வேலைக்கு செல்லாத மனைவியாக(partner) இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.
- கணவனும், மனைவியும்(partner) பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.
- மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.
- மற்றவர்கள் முன் மனைவியை(partner) கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி(partner) தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.
எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு(partner) சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.
பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த அந்தரங்க ரகசியங்கள்
மென்மையான பாதத்தை பெற வீட்டிலேயே இனி பெடிக்யூர் செய்யலாம்!
கோடையில் முடி கொட்டுவதை தடுக்கும் எளிய தெரபிகள்: வீட்டிலேயே செய்யலாம்!
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo
Read More From Family
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi