Entertainment

அமெரிக்க காப்பகத்தில் சமையல் வேலைபார்க்கும் நடிகை ஜெயஸ்ரீ.. நெகிழ வைக்கும் பின்னணி..

Deepa Lakshmi  |  Jan 13, 2020
அமெரிக்க காப்பகத்தில் சமையல் வேலைபார்க்கும் நடிகை ஜெயஸ்ரீ.. நெகிழ வைக்கும் பின்னணி..

நடிகை ஜெயஸ்ரீ 80ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நாயகியாக இருந்தவர். 1985ம் வருடம் வெளியான தென்றலே என்னை தொடு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். அப்போதைய ஹிட் நடிகையாக இருந்த ரேவதிக்கு சிறந்த போட்டியாக இருந்த ஒரே நடிகை இவர்தான்.

ரேவதியின் இடத்தை இவர் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அறிமுகம் ஆகும்போதே உச்ச நாயகன் ஆன மோகன் உடன் நடித்தவர் அதனை தொடர்ந்து பல நல்ல கதையம்சம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.                

Youtube

மனிதனின் மறுபக்கம், மௌனம் கலைகிறது, பன்னீர் நதிகள், யாரோ எழுதிய கவிதை போன்ற அற்புதமான கதையம்சம் கொண்ட கதைகளில்ஜெயஸ்ரீ (Jayashree) நடித்திருந்தார். திருமதி ஒரு வெகுமதி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. விடிஞ்சா கல்யாணம் எனும் இயக்குனர் மணிவண்ணனின் விறுவிறுப்பான திரைக்கதையிலும் இவர் நடித்திருந்தார்.

இப்படி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த நடிகை ஜெயஸ்ரீ தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் நல்லபடியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணமும் செய்து கொண்டார். 1986ம் வருடத்தில் ஒரே வருடத்தில் 9 படங்கள் நடித்து சாதனையும் புரிந்திருக்கிறார். அத்தனை பிஸியான நடிகை திருமணத்திற்கு பின்னர் சிறிய இடைவேளை விட்டு 1997ல் மீண்டும் நடித்து வந்தார்.          

Youtube

திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர் நடிகை ஜெயஸ்ரீ. 30 வருடமாக ஒரே கணவர் தான். குடும்ப வாழ்க்கையில் அவர் சிறந்து விளங்கினார் என்பதையே இப்படி கூறுகிறேன். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் ஜெயஸ்ரீ அங்குள்ள ஐடி நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராக (project manager) வேலை செய்துவரும் இவர் அங்கு எம்.எஸ். முடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு அமெரிக்க அரசு காப்பகத்தில் நடிகை ஜெயஸ்ரீ சமைத்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆனது. நன்றாக இருந்த ஜெயஸ்ரீ எப்படி அரசு காப்பகத்தில் என அதன் பின்னணியை ஆராய்ந்த போதுதான் அவர் அங்கே தன்னார்வலராக இருப்பது தெரிய வந்தது.

அமெரிக்காவில் பிரபலமாக இருப்பவர்கள் உயர்பதவியில் வகிப்பவர்கள் என பலரும் அமெரிக்க அரசு காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி தங்களின் சமூக கடமைகளை நிலை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜெயஸ்ரீயும் அங்கு தன்னார்வலராக இருக்கிறாராம்.

Youtube

இது பற்றிய விபரங்களை வார இதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ஜெயஸ்ரீ கூறி இருக்கிறார். அமெரிக்காவை பொறுத்தவரை ஆதரவற்றவர்களுக்கு என காப்பகங்கள் இருக்கின்றன. அங்கே வாலன்டியராக நாம் சென்று உணவு சமைத்து பரிமாறலாம். ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான உணவுகளை சமைத்துக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க அங்கே அனுமதி தரப்படுகிறது.

வார விடுமுறை நாட்களில் அரசு காப்பகங்களை (goverment orphanage) விஜயம் செய்யும் ஜெயஸ்ரீ அங்கே அவர்கள் கொடுக்கும் பொருள்களை கொண்டு உணவுகளை உயர் ரகமாக சமைத்து கொடுத்து விட்டு அன்போடு பரிமாறுவது வழக்கமாம். அவர்களும் அன்போடு ஜெயஸ்ரீயை வழியனுப்பி வைப்பார்களாம்.

Youtube

தன்னுடன் தன்னுடைய மூத்த மகனையும் உடன் அழைத்து வருவாராம் ஜெயஸ்ரீ. அர்ஜுன் எனக்கு தேவையான உதவிகளை செய்வான். அவனுக்கு தெரிந்த உணவுகளை சமைப்பான். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் நாமும் நமது சமூகத்தில் நம்முடன் வாழும் மற்றவர்களும் சமம்தான். யாருக்குள்ளும் எந்த ஏற்ற தாழ்வோ பாகுபாடோ இல்லை என்று தன்னுடைய சேவையில் மனம் நெகிழ்கிறார் நடிகை ஜெயஸ்ரீ.

சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி தேர்ந்தெடுத்த நேர்மையான பாதையில் பயணிக்கும் ஜெயஸ்ரீயின் நல்ல மனதுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Entertainment