பூமியின் பேரழகையும் உயிர்களின் வேர்களையும் காப்பாற்றுவதில் முக்கிய இடம் அமேஸான் காடுகளுக்குத் தான் போய் சேரும். சுயநலமான மனித இனத்தின் தவறுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலை அமேஸான் மழைக்காடுகள்தான் சமம் செய்து வந்திருந்தன.
பூமிக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமேஸான் மழைக்காடுகளில் (amazon rainforest) தற்போது காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இது ஒருமுறை அல்ல இந்த வருடம் மட்டுமே 72,843 முறை இங்கே காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 87% சதவிகிதம் அதிகம் என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது.
பல மர்மங்கள் கொண்ட அமேஸான் காடு பலவிதமான உயிரினங்களுக்கு அடைக்கக் கூடமாக இருந்து வருகிறது. அரிய மூலிகைகள், விலங்குகள் பறவைகள் என பல உயிர்களை அமேஸான் காப்பாற்றி வருகிறது. பூமிக்கு தேவையான 20 சதவிகித ஆக்சிஜென் அமேஸான் காடுகளில் இருந்துதான் கிடைக்கிறது.
பூமிக்குத் தேவையான ஆக்சிஜனையும் மழைபொழிவையும் தந்து வந்த அமேஸான் காடுகள் தற்போது தீப்பற்றி எரிகின்றன. 16 நாட்களாகத் தொடர்கின்ற தீயால் அமேஸான் காடுகள் புகை மண்டலமாக மாறி இருக்கிறது. இரவுகள் பகல் போல காணப்படுகின்றன.
இந்த தீயை அணைக்க பிரேசில் அரசு விடாமல் முயற்சித்து வருகிறது. ஆனாலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் இந்த தீயினால் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முக்கிய பேரிடரை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் சில சினிமா பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இதனைப் பற்றிக் கூறி வருகின்றனர்.நடிகை சிம்ரன் பூமிக்கு 20 சதவிகித ஆக்சிஜென் தந்த காடுகள் பற்றி எரிவதை பார்க்கையில் வேதனையாக இருக்கிறது இனி என்ன செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதனைப் போலவே பல்வேறு பிரபலங்கள் இந்தப் பேரழிவை முன்னெடுத்து பேசி இருக்கின்றனர். உங்கள் பார்வைக்காக.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Education
தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
Deepa Lakshmi
இன்னொரு தாய்லாந்தாக மாறும் தமிழகம்.. சைல்டு செக்ஸ் paedophileகளின் கூடாரம் ஆகிறதா சென்னை ?
Deepa Lakshmi
வாழ்வில் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுப்பவர் எல்லாருமே ஆசிரியர்கள்தான்.. ஆசிரியர் தினம்
Deepa Lakshmi